வேளாண்மைப் பொறியியல் துறை
வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த பணிகளில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு பொறியியல் அறிவு சார்ந்தும், புதிய தொழில்நுட்பம் மூலமாக தீர்வைக் காணவும், பல்வேறு பொறியியல் தொழில்நுட்பங்கள் வேளாண்மை சார்ந்த பணிகளில் பயன்பாட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் வேகமான வேளாண்மை வளர்ச்சியை எட்டவும் மக்களுக்கு உதவக்கூடிய ஓர் தொழில்நுட்ப பிரிவுதான் வேளாண்மைப் பொறியியல்.
வளர்ச்சி
வேளாண் பொருட்கள் உற்பத்தியால் அனைத்தும் உள்ளடங்கியதோர் வளர்ச்சி, சில சிறப்பு முயற்சிகள் மற்றும் மிகவும் பொருத்தமான திட்டமிடுதலின் மூலமாக ஒருகாலக் கட்டத்தில் கை கூடியது. இதன் பின்னரே, வேளாண்மைப் பொறியியல் சார்ந்த செயற்பாட்டுப் பணிகளுக்கு தேவைப்படுகின்ற உரிய தனி அங்கீகாரம் வழங்குவது வேளாண் பொருட்களின் உற்பத்திப் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் என்பது அரசால் உணரப்பட்டது. இதன் விளைவாக, வேளாண்மைத் துறையின் ஒரு அங்கமாக செயற்பட்டு வந்த வேளாண்மைப் பொறியியல் பிரிவு தனியாக பிரிக்கப்பட்டு 21.01.1981 அன்று ”வேளாண்மைப் பொறியியல் துறை” என பெயரிடப்பட்டு, தனித்துறையாக அமைக்கப்பட்டது. பின்னர், இது 1981 செப்டம்பரில், வணிகம் சாரா அரசுத் துறையாக அறிவிக்கப்பட்டது.
அமைப்பு வரைபடம்
நிலமேம்பாட்டுத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மண்தள்ளும் இயந்திரங்கள், உழுவைகள், நடவு இயந்திரங்கள் மற்றும் கதிர் அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
வாடகை விபரம்
மண்தள்ளும் இயந்திரம் – ரூ.840 (ஒரு மணிக்கு)
உழுவைகள் – ரூ.340 (ஒரு மணிக்கு)
நடவு இயந்திரம் – ரூ.1025 (ஒரு மணிக்கு)
கதிர் அறுவடை இயந்திரம்
(டயர் டைப்) – ரூ.875 (ஒரு மணிக்கு)
செயின் டைப் – ரூ.1415 (ஒரு மணிக்கு)
சிறுபாசனத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் துளைபோடும் இயந்திரங்கள் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கு விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
வாடகை விபரம்
விசைத்துளைக்கருவி – ரூ.130 (ஒரு மீட்டருக்கு)
சிறுவிசைத்துளைக்கருவி – ரூ.60 (ஒரு மீட்டருக்கு)
நிலநீராய்வுக் கருவி – ரூ.500 (ஒரு இடம்)
மின்னியியல் ஆய்வுக் கருவி – ரூ.1000 (ஒரு குழாய் கிணறுக்கு)
வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் உழுவைகள், பவர் டில்லர், நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரம், களையெடுக்கும் கருவி, சுழல் கலப்பைகள், நிலம் சமன்படுத்தும் கருவிகள், தெளிப்பான்கள் மற்றும் இதர கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் வாடகை மையங்கள் மானியத்தில் தொழில் முனைவோர்/விவசாயிகள் குழுவிற்கு அந்தந்த வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
உலக வங்கி உதவியுடன் வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம்
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளமுள்ள ஆற்றுப்படுகைகளில் நீர்வள ஆதாரங்கள் சேமிக்க விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் பண்ணைக் குட்டைகள் காவிரி பாசன பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீடித்த நிலையான மானவாரி இயக்கம்
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளிலும் (Cluster) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- உழவுப்பணிகள் மானியத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- நுழைவு முகப்பு பணிகள் மூலம் தடுப்பணை அமைக்கும் பணிகள்
- மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள்
- மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வழங்குதல்
- கிராம அளவிலான வேளாண் இயந்திர மையங்கள் 80 சதவீத மானியத்தில் அமைத்தல்
நுண்ணீர் பாசன மேலாண்மை திட்டம்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை வேளாண்மை/தோட்டக்கலைத் துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளர்கள் களஆய்வு செய்து விலைப்புள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. பணிமுடிவுற்ற பிறகு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வேளாண்மை/தோட்டக்கலைத் துறைக்கு பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
கட்டுமானப் பணிகள்
அனைத்து சகோதரத் துறை கட்டுமானப் பணிகளும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக பண்ணை உட்கட்டமைப்பு பணிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டுமானப் பணிகள், வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டுமானப் பணிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கி அமைக்கும் பணிகள்.
சோலார் மின் மோட்டார் மானியத்தில் அமைத்தல்
நடப்பு நிதியாண்டில் சோலார் மின் மோட்டார் பம்ப்செட் வழங்கிட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விவசாயி தங்களது குழாய் கிணற்றுக்கு இலவச மின்சாரத்திற்கான விண்ணப்பத்தை மீள பெறுவதாக உறுதியளிக்கும் போதும் இலவச மின்சாரம் பயன்படுத்தி வருபவர்கள் அதனை துறந்திடும்போதும், சோலார் மின் மோட்டார் பம்ப்செட்டுக்கு 90 சதவீத மானியத்தில் விவசாயிக்கு வழங்கப்படுகிறது. இதில் நிதி ஒதுக்கீடு மாநில அரசு 40 சதவீதமும், TANGEDCO 30 சதவீதமும், MNRE 20 சதவீதமும் மீதி 10 சதவீதம் பயனாளியின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
சோலார் உலர்த்திகள் அமைத்தல்
சோலார் உலர்த்திகள் தங்களது சொந்த இடத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளே அமைத்துக்கொண்டு அரசு மானியம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சோலார் உலர்த்தி (தட்டு மற்றும் நகர்த்திகள் இல்லாதது) அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தில் சதுர அடிக்கு ரூ.750 வீதம், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக ரூ.1.50 இலட்சமும், சிறுபான்மையினர் மற்றும் மகளிருக்கு (SC/ST/WF) அதிகபட்சமாக ரூ.1.60 இலட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.
கோட்டம் / அலகு
தொடர்புக்கு
மாவட்ட அலுவலகம் | செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிப்பட்டி சாலை, மருத்துவக் கல்லுாரி அஞ்சல், தஞ்சாவூர் – 613004 போன் 04362-245570 E-Mail : aedeetnj@tn.nic.in
|
உபகோட்ட அலுவலகங்கள் | உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிப்பட்டி சாலை, மருத்துவக் கல்லுாரி அஞ்சல், தஞ்சாவூர் – 613004 போன் 04362-242447 E-Mail : aedaeetnj@gmail.com |
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மைப் பொறியியல் துறை, மேலசாலை, தொழில்பேட்டை, திருபுவனம் – 612103 திருவிடைமருதுார் தாலுக்கா போன் 0435-2460110 E-Mail : aeeaedkmuac313@gmail.com |
|
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை – 614601 போன் 04373-222816 E-Mail : aedaeepkt@gmail.com |
வட்டார வாரியாக அலுவலர் பெயர் / பதவி / கைபேசி.எண்
வ.எண் | வட்டாரம் | அலுவலர் பதவி | கைபசி.எண் |
---|---|---|---|
1 | அம்மாபேட்டை | உதவி பொறியாளர் | 9443530551 |
2 | பு தலூர் | இளநிலை பொறியாளர் | 9443661806 |
3 | கும்பகோணம் | உதவி பொறியாளர் | 9442571176 |
4 | மதுக்கூர் | உதவி பொறியாளர் | 9443984339 |
5 | ஒரத்தநாடு | இளநிலை பொறியாளர் | 9442246951 |
6 | பாபநாசம் | உதவி பொறியாளர் | 9443677948 |
7 | பட்டுக்கோட்டை | உதவி பொறியாளர் | 9443888352 |
8 | பேராவூரனி | இளநிலை பொறியாளர் | 9047538290 |
9 | சேதுபாவசத்திரம் | உதவி பொறியாளர் | 8056860494 |
10 | தஞ்சாவூர் | இளநிலை பொறியாளர் | 9486293697 |
11 | திருப்பனந்தாள் | உதவி பொறியாளர் | 9965056209 |
12 | திருவையாறு | இளநிலை பொறியாளர் | 9442264223 |
13 | திருவிடைமரூதூா் | உதவி பொறியாளர் | 9842356345 |
14 | திருவோணம் | இளநிலை பொறியாளர் | 9442246951 |
தகவலறியும் உரிமை தொடர்புக்கு
வ.எண் | அலுவலக பெயர் | கைபசி.எண் |
---|---|---|
1 | செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் துறை, தஞ்சாவூர். |
9360312491 |
2 | உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் துறை, தஞ்சாவூர். |
9442246951 |
3 | உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் துறை, திருபுவனம். |
9842356345 |
4 | உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டுக்கோட்டை |
9443888352 |