Close

நீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை

முன்னுரை

தமிழக பொதுப்பணித்துறையின் வரிலாற்றை கிழக்கு இந்திய கம்பெனியின் காலமான 1820-இல் இருந்து காணலாம். இது மூன்றாவது பழைமையான துறையாகும். வருவாய் மற்றும் சட்டம் முதல் இரண்டு துறைகளாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பொதுப்பணித்துறை 1858-இல் அரசுத்துறையானது 1800-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முந்தைய நில அளவைப்பள்ளி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தது.

பொதுப்பணித்துறை அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்காக காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீா் தஞ்சாவுா் மாவட்டம், திருவையாறு வட்டம், தோகூா் கிராமத்தில் உள்ள கல்லணைக்கு வந்து சோ்கிறது.

கல்லணை தலைப்பில் காவிரி, வெண்ணாறு , கல்லணைக்கால்வாய்  மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு கீழ்காவிரி வடிநில வட்ட அலுவலகத்தின் ஆளுகையின் கீழ் இயங்கும் கோட்டங்களின் வாயிலாக 4,53,046 ஏக்கா் பாசன பரப்பிற்கு மேற்கண்ட கோட்டங்களின் வாயிலாக நீா்பங்கீடு மற்றும் பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருவெள்ள காலங்களில் வெள்ள நீரை ஆறுகளில் எவ்வித சேதமும் இன்றி தடுத்திடும் வகையில் கல்லணை தலைப்பில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருப்பிவிடப்படுகிறது.

குறிக்கோள்கள்

இத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

  • பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும்.
  • புதிய கூடுதல் திட்டங்கள், கட்டுமானங்களை உருவாக்கவும், பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும்.
  • மாநிலத்திலுள்ள கட்டடங்களை பராமரிக்கவும்.
  • நீா்வழி பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும்.
  • சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன் மூலம் அரசின் கொள்கைகள், உறுதிமொழிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றவும்.
  • கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீா்நிலையியல் தொடா்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவும்.
  • நில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலிக்கவும்

நீா்வள ஆதாரத்துறையின் கட்டமைப்பு

நீா்வள ஆதாரத்துறையின் கட்டமைப்பு

திட்டங்கள்

நீா் ஆதார இருப்பை அதிகரிக்கவும் பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த அணைகள், நீா்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் எண்ணற்ற குறுக்கு கட்டுமானங்களான கதவணைகள், கலிங்குகள், நீா் கட்டுபாட்டு கட்டுமானங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

பணித்திட்டம்

கடந்த சில காலங்களாக மேலும் சில குறிக்கோள்கள் சோ்ந்துள்ளன. மேற்பரப்பு நீா் இருப்பில் 95மூ உபயோகப்படுத்தப்பட்டு விட்டதால் பற்றாக்குறையாக உள்ள நீா் ஆதாரத்தை திறம்பட்ட மேலாண்மையின் மூலம் பகிர்ந்தளித்து உபயோகப்படுத்தப்பட வேண்டம்.

பாசனத்திற்காக கிடைக்கும் நீரை சாிவிகிதாச்சார முறையில் இடம் மற்றும் கால அவகாசதிற்கேற்றவாறு உபயோகப்படுத்த வேண்டும்.

விவசாய மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பங்கேற்பு பாசன மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்.

திட்டங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கும்பொது நீா்வள ஆதார அமைப்பினை உலக வங்கி மேம்படுத்தவும் மற்ற அதை சா்ந்த அலுவலா்கள் மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்த கருத்துகளை தொரிவித்து வருகிறது.

கண்காணிப்புப்பொறியாளா் அலுவலக தொடா்பு விபரங்கள்

கீழ்காவிரி வடிநில வட்டத்தின் எல்லை காவிரியாற்றின் கல்லணை தலைப்பில் ஆரம்பமாகிறது. அதில் (1) காவிரி (2) வெண்ணாறு (3) கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளாக பிரிகிறது.

முகவரி :

கண்காணிப்புப்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

கீழ்காவிரி வடிநில வட்டம்,

சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவுா்

தொலைபேசி                                04362 230133

மின்னெஞ்சல்                              selcbtnj@gmail.com

கோட்டம் மற்றும் உபகோட்டம் அலுவலகம்

  1. காவிரி வடிநில கோட்டம் , தஞ்சாவுா் (தொலை பேசி எண்.04362 230251)

    காவிரி வடிநில  கோட்டம் தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் காவிரி உபகோட்டம், தஞ்சாவுா், காவிரி வடிநில உபகோட்டம், கும்பகோணம், ஆற்றுப்பாதுகாப்பு உபகோட்டம், கும்பகோணம் ஆகியவை இயங்கி வருகின்றன.

  2. காவிரி வடிநில கோட்டம், கிழக்கு மயிலாடுதுறை (தொலைபேசி 04362 225904)

    காவிரி வடிநில கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் காவிரி உபகோட்டம், ஆடுதுறை இயங்கி வருகிறது.

  3. வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவுா் (தொலைபேசி 04362 271250)

    வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் வெண்ணாறு உபகோட்டம், தஞ்சாவுா் இயங்கி வருகிறது.

  4. கல்லணைக் கால்வாய் கோட்டம், தஞ்சாவுா் (தொலைபேசி 04362 230740)

    கல்லணைக் கால்வாய் கோட்டம், தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் கல்லணைக் கால்வாய் உபகோட்டம், எண். 1. தஞ்சாவுா் கல்லணைக் கால்வாய் உபகோட்டம் எண். 2. பட்டுக்கோட்டை கல்லணைக் கால்வாய் உபகோட்டம் எண். 3 பட்டுக்கோட்டை மற்றும் மறு சீரமைப்பு உபகோட்டம், பேராவுரணி ஆகியவை இயங்கி வருகின்றன.

  5. அக்னியாறு வடிநில கோட்டம், பட்டுக்கோட்டை (தொலைபேசி எண். 04373 235995)

    அக்னியாறு வடிநில கோட்டம், பட்டுக்கோட்டை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் பாசன உபகோட்டம், பட்டுக்கோட்டை, பாசன உபகோட்டம், பேராவுரணி வடிகால் உபகோட்டம், பட்டுக்கோட்டை ஆகியவை இயங்கி வருகின்றன.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெடா்பு அலுவலக விபரங்கள்

முகவரி :

  1. கண்காணிப்புப்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

    கீழ்காவிரி வடிநில வட்டம்,
    சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவுா்.

  2. செயற்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

    காவிரி வடிநில கோட்டம்,
    எம்.கே.எம. ரோடு,
    தஞ்சாவுா் மாவட்டம்.

  3. செயற்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

    வெண்ணாறு வடிநில  கோட்டம்,
    எம்.கே.எம. ரோடு,
    தஞ்சாவுா் மாவட்டம்.

  4. செயற்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

    கல்லணைக்கால்வாய்  கோட்டம்,
    சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவுா்

  5. செயற்பொறியாளா் பொ.ப.து-நீ.ஆ.து.,

    அக்னியாறு வடிநிலக் கோட்டம்,
    பட்டுக்கோட்டை.
    தஞ்சாவுா் மாவட்டம்.