Close

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

தமிழ்நாடு மின்சாரவாரியம் 01.07.1957 அன்று உருவாக்க்ப்பட்டது. உருவாக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் வழங்கிடும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்திய மின்சார சட்டம் 2003-ன் பிரிவு 131-ன் படி மாநில மின்சாரவாரியங்களாக மறுசீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.114 எரிசக்திதுறை விதிகளின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என பிரிக்கப்பட்டு 01.12.2009 முதல் செயல்பாட்டில் உள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 16.03.2010 அன்றும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 12.03.2010 அன்றும் தொழில் தொடங்குவதற்காக சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு மாநில அரசாணை எண்.301 எரிசக்தி துறை  நாள் 05.04.2010 வாயிலாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் ஆகியவற்றிர்கான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்:

தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் 100% மின்மயமாக்கலின் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குறிக்கோளாக செயல்பட்டுவருகிறது. குறைந்த விலையில் தரமான மற்றும் நம்பகமான மின்சாரம் கிடைக்க  உறுதி செய்வதே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தொலை நோக்கு பார்வையாக உள்ளது.

 

அமைப்பு வரைபடம் :

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிறுவன விளக்கப்படம்

செயற்பொறியாளர் நிறுவன விளக்கப்படம்

செயற்பொறியாளர் நிறுவன விளக்கப்படம் 1

உதவி பொறியாளர் நிறுவன விளக்கப்படம்

 

தஞ்சாவூர் கோட்டங்கள் :

  1. செயற்பொறியாளர் / இ & பார / தஞ்சாவூர்
  2. செயற்பொறியாளர் / நகரியம் / தஞ்சாவூர்
  3. செயற்பொறியாளர் / இ & பார / ஒரத்தநாடு
  4. செயற்பொறியாளர் / இ & பார / பட்டுக்கோட்டை
  5. செயற்பொறியாளர் / இ & பார / கும்பகோணம்
  6. செயற்பொறியாளர் / இ &பார / வடக்கு / கும்பகோணம்

அலுவலர்களின் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல்

தகவல் அரியும் உரிமை சட்டம் 2005

  1. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் /  பொது
    வல்லம் ரோடு
    தஞ்சாவூர்.
  2. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / இ &பாரா
    வல்லம் ரோடு
    தஞ்சாவூர்.
  3. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / நகரியம்
    கோர்ட் ரோடு
    தஞ்சாவூர்.
  4. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / இ &பாரா
    மேலதோட்டம்
    ஒரத்தநாடு.
  5. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / இ &பாரா
    ராஜன் தோட்டம்
    கும்பகோணம்.
  6. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / இ & பாரா
    வடக்கு ராஜன் தோட்டம்
    கும்பகோணம்.
  7. மாநில பொது தகவல் அலுவலர்
    செயற்பொறியாளர் / இ &பாரா
    KN பாளையம்
    பட்டுக்கோட்டை.மின்னகம்புதிய மாநில அளவிலான மையப்படுத்தப்பட்ட மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகம், 94987 94987  என்ற கைபேசி எண்ணுடன் மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் அவர்களால் 20.06.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. மின்னகத்தில், மின்தடை புகார்கள் மற்றும் பிற வழங்கல் தொடர்பான புகார்களை மின் நுகர்வோர் பதிவு செய்யலாம்.

     

    புதிய  மின்இணைப்பு  விண்ணப்பம் பதிவு செய்ய

    நுகர்வோர்கள் புதிய மின்இணைப்பிற்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். (இணையதள முகவரி www.tangedco.gov.in )

    முந்தைய ஆண்டு சாதனைகள்

    1. 2022 – 23 ஆம் ஆண்டில் சேதுபாவாசத்திரம், சாக்கோட்டை, ஊரணிபுரம், மணிமண்டபம், ஒக்கநாடு கீழையூர், பட்டுக்கோட்டை , மாரியம்மன் கோயில் பகுதிகளில் கூடுதல் திறனுடைய திறன் மின்மாற்றிகள்  நிறுவப்பட்டுள்ளன.
    2. 2022 – 23 ஆம் ஆண்டில் கூடுதல் பளு மற்றும் குறைந்த மின் அழுத்த குறைபாட்டினை சரி செய்திட 787  எண்ணிக்கை மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
    3. 2022-23 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2434 இலவச விவசாய மின்இணைப்புகள் திட்டத்தின் வாரியாக கீ ழ்கண்டவாறு இணைக்கப்பட்டுள்ளது,

     

    .எண் கோட்டம் சாதாரண திட்டம் 350 சிறப்பு முன்னுரிமை தாட்கோ சுய நிதி திட்டம்  ரூ. 10000 சுய நிதி திட்டம்  ரூ.  25000 சுய நிதி திட்டம்  ரூ.  50000 தட்கல் விரைவு திட்டம் கலைஞர் திட்டம் கூடுதலாக வழங்கப்பட்ட இணைப்புகள் மொத்தம்
    1 தஞ்சாவூர் 300 4 0 0 0 4 75 14 3 400
    2 நகரியம் தஞ்சாவூர்   1 0 0 0 0 0 0 0 1 2
    3 கும்பகோணம் 337 1 0 0 8 6 33 0 12 397
    4 வடக்கு கும்பகோணம் 367 0 1 5 5 4 46 0 19 447
    5 ஒரத்தநாடு 358 13 1 2 5 34 126 3 26 568
    6 பட்டுக்கோட்டை 414 12 1 15 4 22 161 0 0 629
    மொத்தம் 1777 30 3 22 22 70 441 17 61 244