Close

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

முன்னுரை

மாற்றுத்திறனாளிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தனித்துறை ஒன்றை 1993-ம் வருடம் உருவாக்கியது அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்ப்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதார்ர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முதன்மையாக கருத்தியல் கொள்கையாகும். அனைவருக்கும் ஊனமில்லா தன்மையை உருவாக்கவும், ஊனத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கட்டுபடுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நிறுவன விளக்கப்படம் :

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நிறுவன விளக்கப்படம்

 

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்

மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் – 2016 இயற்றப்பட்டு, 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டமானது மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது உரிமைகள் மற்றும் அதிகாரப் பங்களிப்புவழங்கும் விதத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் -2016ன்படி ஏற்கனவே உள்ள பிரிவுகளுடன் சேர்த்து மொத்தம் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறன்றது.

தேசிய அடையாள அட்டை பதிவு புத்தகம் வழங்குதல்

மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும், மாற்றுத்திறனாளிகள் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப் பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முக்கிய குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அவசியமாகிறது. 40 சதவீதம் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 2005 ஆண்டு முதல் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே வட்டார வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மருத்துவக் குழுவினரால் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் குடும்ப அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.

அடையாள அட்டைகள் வழங்கப்டுள்ள விவரம்

வ.எண் மாற்றுத்திறனின் தன்மை வழங்கப்பட்ட மொத்த அடையாள அட்டைகளின் எண்ணிக்கை
1 புற உலகு சிந்தனையற்றோர் 70
2 மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்டோர் 2343
3 காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் 4615
4 உடலியக்கு குறைபாடுடையோர் 20599
5 மனவளர்ச்சிக்குன்றியோர் 9612
6 மன நல பாதிக்கப்பட்டோர் 218
7 பார்வையற்றோர் 2079
8 பார்வை குறைபாடுடையோர் 611
9 தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் 560
10 பல்வகை மாற்றுத்திறனாளி 637
கூடுதல் 41344

 

தேசிய அடையாள அட்டை பதிவு புத்தகம் வழங்குதல்

10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு  மேற்கொள்ளப்பட்டு அவாகளுக்கு நல வாரியத்திலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 21428 நபர்கள் வாரிய உறுப்பினராக பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

40 சதவீதம் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் பெற்றிட ஏதுவாக தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 41164 நபாகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 10 வயதிற்கு மேறப்பட்ட நபர்களை மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுகிறார், அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 21258 நபாகள் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

0-6 வயதிற்குட்பட்ட மனவளர்ச்சிக்குன்றிய குழந்தைகள், காதுகேளாத குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அரசின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடைபெற்று வருகின்றது.

சிறப்புப்பள்ளிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா சிறப்புப்பள்ளிகள் என மொத்தமாக 16 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன், இப்பள்ளிகளில் பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாதோர் மற்றும் மனவர்ச்சிக்குன்றிய மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு கல்வி அளிக்கப்பட்டு வருகின்றது.

மறுவாழ்வு இல்லங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட அரசு மறுவாழ்வு, 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சிக்குன்றியோருக்கான மற்றும் மன நல காப்பக்ம் செயல்பட்டு வருகின்றது. இவ்வில்லங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டு, உறைவிடம், மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி உதவித்தொகை

கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இத்தொகையை சம்பந்தப்பட்ட மாணவஃமாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

வாசிப்பாளர் உதவித்தொகை

9ம் வகுப்பிற்கு அதற்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி சுற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

பராமரிப்பு உதவித்தொகை

மனவளர்ச்சிக்குன்றியோர் 75 சதவீத்த்திற்கு மேல் கடுமையாக இயலாதோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500/- உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.

சிறுதொழில்கள் மற்றும் பெட்டிக்கடை மான்யம்

மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யவும், குறுந்தொழில் நிறுவனங்களை ஏற்படுத்திக்கொள்ளவும், ஊக்குவிக்கும் பொருட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கிக்கடன் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.10000/- மான்யம் இதில் குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் – சுயதொழில் திட்டம்

மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுய தொழில் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொருளாதார செயல்களில் ஈடுபடுவதற்கு வழங்கப்படுகின்றது, இவ்வங்கிகளில் மூலம் பெறப்படும் வங்கிக் கடனிற்கான வட்டித்தொகையை அரசே ஏற்றுக்கொள்கிறது.

வேலை வாய்ப்பில்லாத படித்த இளைஞாகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்

வேலை வாய்ப்பில்லாத படித்த இளைஞாகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கத்தில் வங்கிக்கடன் பெற ஊக்குவிக்கப்பட்டு பெற்ற கடன் மதிப்பில் விளிம்பு தொகையாக 5 விழுக்காடு பங்குத்தொகைக்கான நிதியினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.

திருமண நிதியுதவி திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு திருமண நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது, அதன்படி பார்வையற்றோர், காதுகேளாத வாய்பேச இயலாதோர், கை கால் பாதிக்கப்பட்டரை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கான திருமணம் நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000/- (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் ரூ.12500/- வங்கிக் காசோலையாகவும் மற்றும் 8கிராம் தங்க காசு) வழங்கப்படுகிறது. பட்டம் அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இத்தொகை ரூ.50000/- மாகவும் வழங்கப்படுகிறது.

  1. பள்ளி இடைநிற்றலை தவிர்த்தலுக்கான ஊக்கத்தொகை வழங்குதல்

    மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 10ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு  இத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

  2. காதுகேளாதோர் சிறப்புபள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசியர்களுக்கான மதிப்பூதியம் வழங்கும் திட்டம்.

    அரசு அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்புபள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசியர்களுக்கு மாதாந்தோறும் ரூ.10000/-ம் மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மனநோயாளிகள் மீட்புத்திட்டம்

சுற்றித்தியும் மன நோயாளிகளை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது, மனநல காப்பகத்தில் மன நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களை மனநல காப்பகத்தில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.

இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கும் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளில் வருமான உச்ச வரம்பின்றி பயணச் சலுகைகள் வழங்கப்படுகின்றது.

சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கட்டணம் ஏதுமின்றி பயணம் செய்யலாம். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருப்பிடத்திலருந்து 100 கீ.மீ வரைநிபந்தனை ஏதுமின்றி கட்ணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். ஏனைய மாற்றுத்திறனாளிகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு கல்வி நிலையங்கள், மருத்துவமனை, தொழிற் பயிற்சி மையம் மற்றும் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இச்சலுகை வழங்கப்படுகிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு குளிர்சாதண பேருந்துகளை தவிர அனைத்து அரசு பேருந்துகளிலும் 75 சதவீதம் பேருந்து கட்டண சலுகையில் பயணம் முற்கொள்ளாலாம். மேலும் துணையுடன் செல்ல இயலாத மாற்றுதிறனாளிகள் 1/4 பங்கு கட்டணத்தில் துனையர் அழைத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

நடமாடும் சிகிச்சைப்பிரிவு

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் தலைநகரங்களில் உள்ளதால் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் துணையாளரின் உதவியுடன் இம்மையங்களுக்கு வர இயலாத நிலை உள்ளது. இத்தகைய குழந்தைகளுக்கு உதவுவதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்நிலையில் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில் மறுவாழ்வு சிகிச்சை மற்றும் பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரண வசதிகளும் அமைக்கப்பட்டு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று இவ்வசதி அளிக்கப்படுகிறது.

நடமாடும் சிகிச்சைப்பிரிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு உதவி உபகரணங்களை வழங்கி தன்னிச்சையாகவும் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடனும் செயல்பட அரசு உதவி செய்து வருகிறது.

  1. மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் தேவையின் அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    1. சக்கர நாற்காலிகள்,
    2. கருப்பு கண்ணாடிகள்,
    3. மடக்கு ஊன்றுகோல்கள்,
    4. பிரெய்லி கைக்கடிகாரம்,
    5. காதொலிக்கருவிகள்,
    6. சூரிய ஒளியினால் மறு செரிவூட்டக்கூடிய மின்கலன்கள்,
    7. கால் தாங்கிக்கள்,
    8. தோள் பட்டை தாங்கிகள்,
    9. செயற்கை அவயங்கள்,
    10. மூன்று சக்கர சைக்கிள்.
  2. நவீன உதவி உபகரணங்கள்

    1. இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள்
    2. காதுக்கு பின்னால் அணியும் காதொலிக்கருவிகள்
    3. மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றி வடிவைமக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள்
    4. பார்வைத்திறன் குறைபாடுடைய கல்வி பயிலும் மாணவஃமாணவியர்களுக்கு எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் கருவி.

தனித்துவ அடையாள அட்டை UDID

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையா அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை www[dot]swavlambancard[dot]gov[dot]in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதியப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு மருத்துவ அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தனித்துவ அடையாள அட்டை சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 7330 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இணைய தளத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாவலர் நியமனச் சான்று

18 வயது முதல் 45 வயது வரையிலுள்ள புற உலகு சிந்தனையற்ற, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மனவளர்ச்சிக்குன்றிய மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அறக்கட்டளை சட்டம் 1999-ன் உட்பிரிவு 13-17ன் கீழ் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு மூலம் புற உலகு சிந்தனையற்ற, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மனவளர்ச்சிக்குன்றிய மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்படவுள்ளது. இந்த பாதுகாவலர் நியமனச் சான்றின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் சட்டப்பூர்வமான உரிமைகள் பெற்றிட ஏதுவாக அமைகின்றது. எனவே 18 வயது நிரம்பிய புற உலகு சிந்தனையற்ற, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மனவளர்ச்சிக்குன்றிய மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் சான்று பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்படும்.

அலுவலக முகவரி

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
அறை எண்.14, தரைத்தளம்,
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தஞ்சாவூர். 613010. தொலைபேசி எண். 04362 -236791.
மின்னஞ்சல் முகவரி. ddawotnj[at]gmail[dot]com