Close

மகளிர் திட்டம்

மகளிரை முழுமையாக ஆற்றல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமூக ஒருங்கிணைப்பின் மூலம் மகளிரை சுய உதவிக் குழுக்களாக அமைத்து சேமிப்பு மற்றும் சிக்கனத்தை கடைபிடிக்க பயிற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்கள் பன்னாட்டு வேளாண் வளா்ச்சி நிதியத்தின் உதவி பெற்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 1991-92-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில், சுய உதவிக் குழு இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பரந்து விரிந்துள்ளது. தற்போது மகளிர் திட்டத்தின்கீழ் 85.70 இலட்சம் மகளிரைக் கொண்ட 5.56 இலட்சம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சாவூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 1.66 .இலட்சம் மகளிரைக்கொண்ட 13450 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் இரு பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

  1. மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ”மகளிர் திட்டம்“
  2. மத்திய, மாநில அரசுகளால்25 என்ற விகிதத்தில் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான பொன்விழா கிராம சுய வேலைபாய்ப்புத் திட்டம்(SGSY) மறுசீரமைக்கப்பட்டு “ஆஜீவிகா“ என்ற பெயரில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமாக (NRLM) தொடங்கப்படவுள்ளது.

மகளிர் திட்டம் நிறுவன விளக்கப்படம்

திட்டங்கள் / சங்கம்

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
  • தேசிய ஊரகப் பொருளாதார மாற்றத் திட்டம்
  • நிதி உள்ளாக்கம்
  • தீன் தயாள் உபாத்யாய  கிராமப்புற  திறன்  பயிற்சி  திட்டம்
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
  • மகளிர் திட்டம்
  • மக்களை தேடி மருத்துவம்
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
  • மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம்

TNSRLM இன் நோக்கம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் பிற சேவைகளை அணுகுவதன் மூலம் ஏழைகளின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதே ஆகும்.

  • சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு
  • திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி
  • நிதி சேர்க்கை
  • வாழ்வாதார மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல்
  • திறன் பயிற்சி
  • கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம்

  • தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டத்தின் நோக்கமானது பல்வேறு நிலையிலான வேறுபட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.
  • வட்டார அளவிலான கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மதிப்புக்கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துதல், தனி நபர் தொழில் மற்றும் தொகுப்புத் தொழிலகங்களை பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா பிரிவின் கீழ் அமைத்தல், தொழில் திறன் மேம்பாடு மற்றும் நிதி சேவைகளுக்கான மாற்று திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகளை உருவாக்குவதே ஆகும்.
  • இத்திட்டத்திற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறையே 60:40 என்ற விகிதத்தில் நிதிப்பகிர்வு வழங்குகிறது தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் 2019-20 ஆம் ஆண்டிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, சேலம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 20 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

நிதி  உள்ளாக்கம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது, நிதி உள்ளாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நிதி கல்வியறிவு, வங்கி சேமிப்பு கணக்கு துவங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய சேவைகள் ஆகிய நிதி சேவைகளை ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (TNCDW) கிராமப்புற ஏழைகளிடையே SHG வங்கி இணைப்புத் திட்டம் (SHG-BLP) மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.கடன் பெறுவதற்கான உரிமை SHG உறுப்பினர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது

தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்: (DDU – GKY)

  • தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடையே 60:40 என்ற நிதி பகிர்வு முறையை கொண்டு ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளிக்கும் திட்டமாகும். .
  • இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செயலாக்க முகமைகள் மூலம் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
  • பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 70% பணியமர்வு அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs)

  • கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கிட ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கிகள் வாயிலாக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institute – RSETIs) அமைக்கப்பட்டுள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ் RSETI உடன் இணைந்து கிராமம்புற இளைஞர்களுக்கு பல்வேறு திறன்  பயிற்சிகள் வழங்கப்டுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

  • தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கமானது 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மேலும், நகர்ப்புற உறைவிடமற்றோருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய உறைவிடத்தை ஏற்படுத்தித் தருதல், நகர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் பொருத்தமான இடம் ஒதுக்கீடு செய்தல், நிதி அமைப்புகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் திறன் வளர்ப்பு மூலம் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவுதல் போன்றவற்றை இந்த இயக்கம் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.

மகளிர் திட்டம்

  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி மற்றும் சமுக ஆற்றலளிப்பூட்டு மூலம் அவர்களின் சிறப்பான செயல்பாட்டில் மாநிலத்தில் மகளிர் திட்டம் ஒரு மாபெரும் இயக்கமாக உறுப்பெற்றுள்ளது.
  • தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையால் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிற வறுமை ஒழிப்புத் திட்டங்கள் யாவும் மகளிர் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களேயாகும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

  • சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • கிராமப்புறங்களிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • ஆரோக்கியமான, தரமான காலை உணவு சுய உதவிக் குழு மகளிரால் தயாரிக்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம்

  • தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக அதிக ஈடுபாட்டுடன் கூடிய சுய உதவிக் குழு உறுப்பினர்களை மகளிர் சுகாதார தன்னார்வலராக (WHV) நியமித்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புரங்களில் முறையே மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் துணை சுகாதார மையங்களுடன் (HSC) இணைக்கப்பட்டு செயல்படுகின்றனர்.
  • மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) தொற்றா நோய்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்கள்.

மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம்

  • தஞ்சாவூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அக்குழுக்கள் தயார் செய்யும் கைவினை பொருட்களுக்கான சந்தை திறனை விரிவுபடுத்துகிறது.
  • இச்சங்கம் நிர்வகிக்கும் பூமாலை வணிக வளாகம் தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
  • கல்லூரி சந்தைகள் மற்றும் பொருட்காட்சிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயார் செய்யும் பொருட்களின் விற்பனை மற்றும் சந்தை திறன் மேம்படுகிறது.

அலுவலர் தொடர்பு விபரம்

திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ,
எண் -223 – தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர் – 613010.

தொலைபேசி / கைபேசி (அதிகாரப்பூர்வ)

அலுவலக தொலைபேசி எண்- 04362- 277907
கைபேசி எண்- 9444094370

மின்னஞ்சல் முகவரி

dpiu_tju[at]yahoo[dot]com

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்
உதவி திட்ட அலுவலர் (கணக்குகள் மற்றும் நிர்வாகம்).
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
எண்-223 – இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர் – 613010.