Close

பள்ளிக்கல்வித்துறை

தரமான கல்வியை அளிப்பதற்கான முயற்சிகள்

மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து பெறப்படும் வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன.  கற்றல் சூழ்நிலையை உருவாக்க பள்ளி வளாகம், அனைத்து அடிப்படை கட்டமைப்புகளுடன் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கற்பித்தல் மற்றும் கற்றல் நிகழ்வுகளுக்கு உகந்த சூழ்நிலையுடன், அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

கற்பித்தல் பணியினை செம்மைப்படுத்த ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் அறிவாற்றல் மற்றும் கற்பித்தல் தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது.  ஒளி  ஒலி வழிக் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணையதள வசதிகள் அளிக்கப்பட்டு கற்பித்தலுக்கு பயன்படத்தப்படுகிறது. 24 மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு நாட்டின் வேறு வகுப்பறை நிகழ்வுகளை நேரடியாக பார்த்து அறிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.  பாடப்பகுதியை எளிமைப்படுத்தி சிறப்பு கட்டகங்கள் வழங்கப்படுகின்றன.  வேலை வாய்ப்புக்களை அளிக்கக்கூடிய தொழில் பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.  மேல்நிலை பொதுத்தேர்வுக்கு பிறகு மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு  15 நீட் பயிற்சி மையங்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.  உயர்கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் பற்றி ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  மாணவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து தகுந்த ஆலோசனைகள் உளவியல் நிபுணர் மற்றும் ஆசிரியர்கள் மூலமும் வழங்கப்படுகின்றன.  நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் மாணவர்களின் கவனச் சிதறல்களை தவிர்க்க விளையாட்டு மற்றும் பள்ளி இணைச் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

நிறுவன விளக்கப்படம்

பள்ளிக்கல்வித்துறை நிறுவன விளக்கப்படம்

நோக்கம்

பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்துதல்

  • நவீன கல்வி தொழில்நுட்ப அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப புதிய உத்திகளை வகுப்பறைகளில் அறிமுகப்படுத்திட தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 அரசு பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பாட வல்லுநர்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
  • மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கும் மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களாக தயார் செய்திடவும் தொடுவானம் என்ற பெயரில் சிறப்பு பயிற்சிகள் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 15 மையங்களில்  சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப் பயிற்சியில் 1168 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
  • தேசிய திறனாய்வுத் தேர்வு, ஊரகத் திறனாய்வுத் தேர்வு   எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் கல்வி மாவட்டத்திற்கு 2 மையங்கள் வீதம் 6 மையங்களில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 600 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியர் அவர்களின் சிறப்பு கியான் (மு-லுஹசூ)  திட்டத்தின் கீழ் 4 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்குரிய கற்பித்தல் கருவிகள் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு பாடப் பொருட்கள் மின்னனு முறையில் மாற்றப்பட்டு கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
  • பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் மெதுவாக கற்கும் மாணவர்கள் மற்றும் மீத்திறன் பெற்ற மாணவர்களை அடையாளம் கண்டு சிறப்பு கவனம் செலுத்திடவும், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகப்படுத்திடவும், மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.
  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் மாவட்டத்தில் உள்ள  அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகள் நேரடி ஆய்வு
  • மேற்கொள்ளப்பட்டு கிராம புறத்தில் பயிலும் ஏழை, எளிய ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி நலன் மேம்பட சிற்றுண்டி வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர்  அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து 8 பள்ளிகளுக்கு ரூ.10000 வீதம் ரூ. 80000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
  • பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கான இருக்கை வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் கருவிகள் அமைக்க 2016-17ம் நிதியாண்டில் 80 பள்ளிகளுக்கு ரூ.1,88,82,150 ம் மற்றும் 2017-18ம் நிதியாண்டில் 10 பள்ளிகளுக்கு ரூ.41,84,000ம் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது.
  • பள்ளிக் கட்டிட பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிவறை பழுதுபார்க்கவும், மேற்கூரை சரிபார்த்தல் மற்றும் மின் சாதனம் பழுதுபார்த்தல் பணிக்காக 2016-17ம் நிதியாண்டில் 48 பள்ளிகளுக்கு ரூ.1,10,00,000 ம் மற்றும் 2017 – 18ம் நிதியாண்டில் 48 பள்ளிகளுக்கு ரூ.1,25,00,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள்  மேம்படுத்தப் பட்டுள்ளன. முறையே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவ  மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கென  தனித்தனியே  கழிவறை  வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கான நாப்கின்  எரியூட்டுதல் கருவி அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளது.
  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்கீழ் அரசு / தொடக்க/ நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்திட  அரசாணை எண்.151  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் (சிஜிஎஸ்.1) துறை நாள்.30.11.2015 படி தஞ்சாவூர் மாவட்டத்தில் டிசம்பர் -2016 வரையில் 165 அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.4,31,500 ம், 1088 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12,30,150 ம்  ஆக மொத்தம் 1253 பள்ளிகளில் ரூ.16,61,650 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகளில் உள்ள கழிவறைகள் தற்காலிக துப்புறவு பணியாளர்களை கொண்டு பராமரிக்கப்பட்டது.
  • மாணவர்களுக்கு கை கழுவுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உலக கை கழுவும் தினம் அக்டோபர் 15ம் தேதியன்று கொண்டாடபடுகிறது. அதில் சுகாதாரம் விழிப்புணர்வு மற்றும் அதனை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • சுகாதாரத்துறையுடன் இணைந்து அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு வார வியாழக்கிழமை அன்று இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
  • அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் 2016- 17 ம் கல்வியாண்டில் 22 பள்ளிகளுக்கு 43,12 இலட்சம் நிதி ஒதுக்கீட்டிலும், 2017-18ம் கல்வியாண்டில் 20 பள்ளிகளில் 17.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கான கழிவறைகள் 9 பள்ளிகளில் 18.59 இலட்சத்தில் அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகளுக்கான நாப்கின்  எரியூட்டுதல் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பள்ளிக் கட்டிட பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிவறை பழுதுபார்க்கவும், மேற்கூரை சரிபார்த்தல் மற்றும் மின் சாதனம் பழுதுபார்த்தல் பணிக்காக 2016-17ம் நிதியாண்டில் 10 பள்ளிகளுக்கு ரூ.16,70,000 ம் மற்றும் 2017 – 18ம் நிதியாண்டில் 10 பள்ளிகளுக்கு ரூ.19,97,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு (கணினி வழிக்கல்விகல்வி ஊஹடு) புதிய தொழிற்நுட்பம் வாயிலாக  கல்வி கட்கும் வண்ணம் கணினிகள் வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 2016-17 கல்வியாண்டில் ஒரு பள்ளிக்கு 3 கணினி வீதம் 363 பள்ளிகளுக்கும் 2017-18 ம் கல்வியாண்டில் ஒரு பள்ளிக்கு 3 கணினி வீதம் 14 பள்ளிகளுக்கும்  ஆக மொத்தம் 377 கணினி வழிக்கல்வி மையங்கள் (ஊஹடு) செயல்பட்டு வருகிறது.
  • வகுப்பறைகள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தவும், வகுப்பறை கட்டமைப்பினை உருவாக்கவும் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கும் 2016-17 ம் ஆண்டில் பராமரிப்பு மானியமாக 1372 பள்ளிகளுக்கு
  • 102.150 இலட்சமும் 2017-18 கல்வியாண்டில் 1672 பள்ளிகளுக்கு ரூ.108.810 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரன்மனை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மண்டலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை தூய்மை பள்ளிகள் என்ற விருதினை பெற்றுள்ளன. இப்பள்ளிகளுக்கு தலா 50000 வீதம் ரூ.150000 பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி

தமிழக அரசு மாணவர்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களில் விலையில்லா மடிக்கணினி திட்டமும் ஒன்று அரசு / அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வி சார்ந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் பாடம் தொடர்பான பல்வேறு வினாக்களுக்கு விடையை தானே தெரிந்து கொள்ளவும் 2012 ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் கணிப்பொறி ஆற்றலை வளர்த்துக்கொள்வதோடு, தனது பாடத்தில் ஏற்படும் ஐயங்களுக்கு தெளிவான, தொடர்புடைய மற்றும் உலகளாவிய அனைத்து விளக்கங்களையும் பெறுகின்றனர்.

மடிக்கணினி பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வாங்கி பயன்படுத்தமுடியும் என்ற நிலையில் இருந்ததை மாற்றி இன்று கிராமபுற ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மடிக்கணினி பயன்பாடு பாடம் தொர்பானதோடு நின்று விடாமல் தங்களுக்கு தேவையான மின்னஞ்சல் உள்ளிட்ட  அனைத்து மின்னனு தொடர்பான பணிகளுக்கும்  பயன்படுகிறது.

மடிக்கணினி மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் பயன்படுத்திகொள்ளலாம் இம்மடிக்கணினி தொழில் நுட்பம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பாடத்திட்டகளும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் தேசிய அளவிலான அனைத்து தேர்வுகளையும் அச்சமின்று எதிர்கொள்ளவும் பயன்படுகிறது.

மொத்தத்தில் மாணவர்கள் கையில் இருக்கும் மடிக்கணினி உலகை தங்கள் கைக்குள் உள்ளடக்கிய உன்னத கருவி என்றால் “”””அது மிகையல்ல””

நலத்திட்டங்கள்

கிரையான்கள் மற்றும் வண்ண பென்சில்கள்-

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டிற்கு  3முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள  மாணவர்களுக்கு 32,129 வண்ண பென்சில்களும் 1முதல் 2 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 23,511 கிரையான்களும் வழங்கப்பட்டுள்ளன.  2017-18 ஆம் கல்வியாண்டிற்கு 3முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள  மாணவர்களுக்கு 11,010 வண்ண பென்சில்களும் 1முதல் 2 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 38,226 கிரையான்களும் கோரப்பட்டுள்ளது.

விலையில்லா புத்தகப்பை

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டில் 1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு 2,67,638  புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்   2017-18 ஆம் கல்வியாண்டில்  1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு 2,69,180  புத்தகப்பைகள் கோரப்பட்டுள்ளது.

விலையில்லா கணித உபகரணப்பெட்டி

தஞ்சாவூர் மாவட்டத்தில்  2016-17 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 19,272  விலையில்லா கணித உபகரணப்பெட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும்  2017-18 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 25,805 விலையில்லா கணித உபகரணப்பெட்டிகளும் வழங்கப்படவுள்ளது.

விலையில்லா காலணி

தஞ்சாவூர் மாவட்டத்தில்  2016-17 ஆம் கல்வியாண்டில்  1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2,19,838 விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில்  1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2,16,680 விலையில்லா காலணிகளும் வழங்கப்படவுள்ளது.

புவியியல் வரைபடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில்  2016-17 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 19,272 புவியியல் வரைபடங்கள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும்  2017-18 ஆம் கல்வியாண்டிற்கு  6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 25,805 புவியியல் வரைபடங்களும் வழங்கப்படவுள்ளது.

புத்தாக்க அறிவியல் கண்காட்சி :

2016 -17 மற்றும் 2017-18ம் ஆம் கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக 37 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  தங்கள் படைப்புகளை 02.02.2018 அன்று நடந்த மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சியில் அம்மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுப் பொருள் வழங்கப்பட்டன.  மாநில அளவிலான தகுதியான படைப்புகள் தெரிவு செய்யப்பட்டன.

நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் சார்பாக கடந்த 4 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ப்யிலும் வளர் இளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தம், மனப்பதட்டம், தேர்வு பயம், தற்கொலை எண்ணம், கற்றல் திறன் குறைபாடு, போதைப்பழக்கம், , கல்வியில்  ஆர்வமின்மை, ஞாபக மறதி, குடும்ப சூழல் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள், பாலியல் தொந்தரவு மீடியா மற்றும் சமூக வலை தளங்களின் தாக்கம், எதிர் பாலின ஈர்ப்பு  மற்றும் பழகுவதில் சிக்கல் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படிதிரு.என்.ரஹ்மான் கான் எம்.எஸ்ஸி.,எம்.பில் (உளவியல்) உளவியல் ஆலோசகர் அவர்களைக்கொண்டு அரசு மற்றும் அரசு சார்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு குழுவாகவும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடுவானம் (நீட்) பயிற்சி : தஞ்சாவூர் மாவட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பதினைந்து போட்டித் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது 56 பள்ளிகளில் இருந்து 1168 மாணவர்கள் போட்டித் தேர்வு மையங்களில் பயின்று வருகிறார்கள். மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பெற்று மாணவர்களின் அடைவுத்திறனும் பயிற்சியின் தரமும் சோதிக்கப்படுகின்றது. தற்பொழுது உள்ள பதினைந்து போட்டித் தேர்வு மையங்களில் மூன்று மையங்கள் ஆங்கில வழி பயிற்சிக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது அம்மையங்களின் விவரம்.

  1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லம்.
  2. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கும்பகோணம்.
  3. அரசு உயர்நிலைப்பள்ளி செங்கப்படுத்தான்காடு.

இப்பயிற்சி குறித்து பயிற்சிபெறும் மாணவர்களிடம் பின்னூட்டம் பெறப்பட்டு அவர்களின் கற்கும் ஆர்வமும் பயிற்சியின் தரமும் அளவிடப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சியானது சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. தொடுவானம் திட்டமானது ஏழை மாணவர்களுக்கு கற்றலில் உள்ள பொருளாதார தடைகளை அகற்றி வாழ்வில் வெற்றியடைய உதவுகிறது.

 

2017 -18  தொடுவானம் – நீட் பயிற்சி வகுப்புகள்

மாவட்டம் – தஞ்சாவூர்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்கள் விவரம்<
பயிற்சி மையங்களின் எண்ணிக்கை ஆண்கள் பெண்கள் மொத்தம்
15 387 781 1168

மெய்நிகர் வகுப்பறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 அரசுப் பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை செயல்பட்டு வருகிறது.    கல்வித் தொழில் நுட்ப அணுகுமுறை மாற்றங்களுக்கேற்ப புதிய உத்திகளை வகுப்பறையில் அறிமுகப்படுத்தி கற்றல் – கற்பித்தல் தரத்தினை உயர்த்திட 24 அரசுப்பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறை

அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனால் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறனைமேம்படுத்தவும் மாணவர்கள் கற்றல் மற்றும் புரிதலை எளிதாக்கவும்  கற்றவற்றை வாழ்க்கை சூழலில் பயன்படுத்தவும் இயலும்.

மாநிலக்கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்ட பயிற்சி வகுப்புகளின் படி தேர்வு செய்த பயிற்சியாளர்களைக் கொண்டு அந்தந்த பயிற்சி மையங்களின் மூலம் 24 பள்ளிகளிலும் மெய்நிகர் வகுப்பறையின் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  இவ்வகுப்பறையை கையாலும் ஆசிரியர்களும் இப்பணியிணை திறம்பட செய்து மாணவர்களின் புரிதல் மற்றும் கற்பித்தல் திறனை எளிதாக்கப்படுகிறது.

புத்தாக்க அறிவியல் கண்காட்சி:

2016 -17 மற்றும் 2017-18ம் ஆம் கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக 37 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  தங்கள் படைப்புகளை 02.02.2018 அன்று நடந்த மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சியில் அம்மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுப் பொருள் வழங்கப்பட்டன.  மாநில அளவிலான தகுதியான படைப்புகள் தெரிவு செய்யப்பட்டன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், தஞ்சாவூர் மாவட்டம்

பணியிடைப் பயிற்சி

  1. அரசு  மற்றும் அரசு உதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் 9 ம்  வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு கற்பிக்கும்  அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 10 நாட்கள் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டது.
  2. தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 10 நாட்கள் வழங்கப்பட்டது.
  3. அரசு  மற்றும் அரசு உதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்   தேசிய பசுமைப்படை , நாட்டு நலப்பணித்திட்டம்,  செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு  யோகா பயிற்சி வழங்கப்பட்டது.  இதில் 255 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
  4. கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில  பாடக் கருத்துக்களை  எளிதில் புரிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த  ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி    வழங்கப்பட்டது.

திட்டப் பள்ளிகள்

மாவட்டத்தில் 30 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில்  எல்காம்-ஆங்கிலம்,  30 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்டெம் -அறிவியல், மற்றும் 30 அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  ஏரியல் – கணிதம்  திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டு , புதிய யுத்திகளையும், காணொளி மற்றும் பாடக் கருத்துக்களை எளிதில் புரியும் வகையில் செய்முறை பயிற்சி உபகரணங்களை பயன்படுத்தி   செயல்பாடுகள் மூலமும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

தேசிய செய்து உணர் கற்றல் திட்டம்

மாவட்டத்தில் 10 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தேசிய செய்து உணர் கற்றல் திட்டம் திட்டத்தில் தேர்வு செய்து அருகாமையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும்  100 மாணவர்கள் தேர்வு செய்து அருகிலுள்ள உயர்கல்வி  நிறுவனங்கள் சென்று அங்குள்ள ஆய்வகங்கள், பயிற்சி பட்டறைகள்  மற்றும் நூலகங்களை  பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • திட்டப்பள்ளிகளிலிருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ   மாணவிகளுக்காக கீழ்கண்ட  செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.

  • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அடையாளம்   காணல்.
  • மாணவிகளுக்கு ரூ.2000/- உதவித்தொகையாகவும்,  அனைத்து  மாணவ மாணவிகளுக்கும் போக்குவரத்து செலவிற்காக ரூ.500  வழங்கப்படுகிறது.
  • மருத்துவ முகாம் நடத்துதல், தேவையான உபகரணங்கள் வழங்குதல்.
  • சிறப்பாசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி
  • சுற்றுச்சூழல் கட்டமைப்பு செயல்பாடுகள்
  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திலுள்ள 223 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழு சமுதாயத்திற்கும் பள்ளிக்கும் பாலமாக உள்ளது.  பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவில் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மக்கள் பிரதிநிதி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் கொண்ட 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

கடமைகளும் பொறுப்புகளும்

  • குழு உறுப்பினர்கள் தரமான கல்வி, உட்கட்டமைப்பு வசதி, திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்துதுல்
  • பள்ளி மானியத்தை முறையாக பயன்படுத்துதல்
  • பள்ளி மாணவர்களை அனைத்து வகை விளையாட்டு போட்டிகள்  செயல்பாடுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்குபெறச் செய்தல்.
  • தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்கான பதிவேடுகளை  பராமரித்தல்
  • மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை பெற்றுத் தருதலை உறுதிப்படுத்துதல்

மாதாந்திர கூட்டம்

  • பள்ளி அளவில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது
  • மாணவர்களின் முன்னேற்றம்
  • பள்ளியிலுள்ள நூலகம், ஆய்வகம், மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தல்
  • பள்ளி மான்யத்தை முறையாக கையாளுதல்
  • பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
  • கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தியதை உறுதி செய்து புதிய தீர்மானம் நிறைவேற்றுதல்
  • பள்ளி முன்னேற்றத்திற்கான திட்டங்களை வரையறுத்தல்

கட்டுமானப் பணிகள்

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில்  தமிழ்நாடு  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்  முக்கிய பங்கு வகிக்கிறது.

பள்ளிகளுக்கு தேவையான கீழ்க்கண்ட உள்கட்டமைப்பு வசதிகள் பள்ளி பள்ளி தகவல் தொகுப்பு அறிக்கையின் அடிப்படையில் பெறப்படுகிறது.

  • பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் கூடுதல் வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகம், நூலகம், கணினி அறை மற்றும் கலை மற்றும் கைவினை வகுப்பறைகள்.
  • தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்.
  • மாணவ, மாணவிகளுக்காக தனித்தனி கழிப்பறைகள்
  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள்

நமது மாவட்டத்தில் தரம்  உயர்த்தப்பட்ட   11 பள்ளிகளுக்கு  புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படுகிறது.

பள்ளி மானியம்

மாவட்டத்தில் உள்ள 223  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி ஆண்டு மானியமாக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50,000/- வழங்கப்பட்டு,  பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு   மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை

கல்வி வளர்ச்சி திட்டமிடுதலுக்காகவும், பள்ளி முன்னேற்றத்திற்கான செயல்களுக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி சார்ந்த விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டு தொகுக்கப்படுகிறது.

இந்த தகவல் தொகுப்பு அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு பொருந்தும்.உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் தகவல்  தொகுப்பு  அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட, ஒன்றிய மற்றும்  பள்ளி அளவிலான தகவல்களை பெற கல்விக்கான  ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை பெரிதும் உதவியாக உள்ளது.

அறிவியல் கண்காட்சி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பாக மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையையும், உருவாக்கும் திறனை வெளிப்படுத்தவும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 06.12.2017 அன்று  அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  இதில் 160 பள்ளிகளை சார்ந்த 400  மாணவ மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.  இக்கண்காட்சியின் போது மாணவர்கள் 8 தலைப்புகளில் தங்களது அறிவியல் மற்றும் கணித படைப்புகளை காட்சிப்படுத்தினர்.  அதில் ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இணைச் செயல்பாடுகள்

  1. தேசிய மாணவர் படை
  2. நாட்டுநலப் பணித் திட்டம்
  3. தேசிய பசுமைப்படை
  4. சாரண சாரணியர் இயக்கம்
  5. இளஞ் செஞ்சிலுவைச் சங்கம்
  6. நுகர்வோர் பாதுகாப்பு குழு
  7. செஞ்சுருள் சங்கம்
  8. தொண்மைப் பாதுகாப்பு மன்றம்
  9. அறிவியல் மன்றம்
  10. தமிழ் இலக்கிய மன்றம்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பு அலுவலர்:

திரு. நடராஜன் (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்),

முதன்மைக்கல்வி அலுவலம், தஞ்சாவூர்

தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண் :8870630474