Close

தஞ்சாவூர் அரண்மனை

வகை வரலாற்று சிறப்புமிக்கது

தஞ்சாவூர் அரண்மனை கி.பி. 1550-ல் மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது.  இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  அரண்மனை பெரியக்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது.  இந்தக்கோட்டை 110 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை நாயக்கர்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது.  இந்த அரண்மனை, ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.  அரண்மனை வாளாகத்தில் சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இந்த அரண்மனையில்  விசாலமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களும், அலங்கார அமைப்புக்கொண்ட கூடங்களும் உள்ளன.  அரண்மனை வளாகம், சதார் மகால் அரண்மனை, மகாராணியின் அந்தபுரம் மற்றும் தா்பார் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கியது.  சதார் மகால் அரண்மனையில் ராஜா சரபோஜி நினைவு கூடமும், அரண்மனை அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.  அங்கு ஒரு சின்ன மணிகூண்டும் அமைந்துள்ளது.  தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மகால் நூலகம் அமைந்துள்ளது. தஞ்சாவூா் அரண்மனை மராத்தியா்கள் மற்றும் நாயக்கா்களின் கட்டிடக்கலை நுட்பத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • Thanjavur Palace Darbar Hall
  • Thanjavur Palace
  • Thanjavur Palace