அடைவது எப்படி
வான் வழி :
தஞ்சாவூர் நகரத்திற்கு அருகில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளது. இது தஞ்சாவூரிலிருந்து 61 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு வருவதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ், கிங்பிஸ்ஸர், பராமவுண்ட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மிகின் லங்கா மற்றும் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான சேவைகள் உள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை வழியாக ஷார்ஜா, துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. பராமவுண்ட் மற்றும் கிங்பிஸ்ஸர் விமான சேவை சென்னை நகரம் வரை உள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மிகின் லங்கா விமான சேவை கொழும்பு நகரம் வழியாக திருச்சிராப்பள்ளி வரை உள்ளது. ஏர் ஏசியா விமான சேவை மலேசியா நகரம் வழியாக திருச்சிராப்பள்ளி வரை உள்ளது.
ரயில் வழி :
தஞ்சாவூர் நகரத்தை அடைய திருச்சிராப்பள்ளி, நாகூர், திருவையாறு, திருப்பதி, ராமேஸ்வரம், மன்னார்குடி, காரைக்கால், மதுரை, சென்னை, எர்ணாக்குளம், புவனேஸ்வர், கோவா, மைசூர், வாரனாசி ஆகிய நகரங்களிலிருந்து நேரடியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சாலை வழி :
தஞ்சாவூர் வழியாக பல முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு தொடர் பேருந்து சேவைகள் உள்ளது.