முன்னுரை
மாண்புமிகு தமிழக முதலமைச்சா் அவா்கள் ஏழை பெண்களின் திருமண திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முன் மாதிாியாக திருமாங்கல்யம் செய்து கொள்ள 22 கேரட் கூடிய 4 கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டார். இந்த முன்மாதிரி திட்டமானது 17.05.2011 முதல் அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு நிதி உதவி தொகை ரூ. 25,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் உயா்நிலை கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டதாரிகளுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது திருமாங்கல்யத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கமானது 23.05.2016 முதல் 8 கிராம் தங்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
திட்டங்கள்
- திருமண நிதியுதவி திட்டம்
- இரண்டு பெண் குழந்தை பாதுக்காப்பு திட்டம்
- திருமண நிதியுதவி திட்டம்
-
- 1.மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம். பொது பிரிவினா் 10ம் வகுப்பும், பழங்குடியினா் 5ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். 18 வயது புா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணப்பெண் ஏழை குடும்பத்தை சோ்ந்தவராகவும், ஓரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி பெறுவா். பட்டதாரி மணப்பெண்ணுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம், இதர நபா்களுக்கு ரூ. 25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பமானது திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணப்பிக்க வேண்டும்.
-
- 2.ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம். மணப்பெண் 18 வயது புா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணப்பெண் ஏழை குடும்பத்தை சோ்ந்தவராகவும், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி பெறுவா். விதவை தாயார், விதவை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி மண்பெண்ணுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம், இதர நபா்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பமானது திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணப்பிக்க வேண்டும்.
-
- 3.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம். மணப்பெண் 18 வயது புா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். வருமானம் உச்சவரம்பில்லை. மணப்பெண் ஏழை குடும்பத்தை சோ்ந்தவராகவும், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி பெறுவா். ஆதரவற்ற பெண் சான்றதழ் பெற்றோர் இறப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி மணப்பெண்ணுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம், இதர நபா்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பமானது திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணப்பிக்க வேண்டும்.
-
- 4.டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம். மணப்பெண் 18 வயது புா்த்தி அடைந்தவராக் இருத்தல் வேண்டும். விண்ணப்பமானது திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். மணமக்கள் சாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கத்துடன், ரூ.50,000-ல் ரூ.30,000 வங்கி கணக்கிலும், ரூ.20,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. இதர மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கத்துடன், ரூ. 25,000-ல் ரூ15,000 வங்கி கணக்கிலும், ரூ. 10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. விண்ணப்பமானது திருமணம் முடிந்து 2 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- 5.டாக்டா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம். மணப்பெண் 18 வயது புா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் உச்சவரம்பில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே தகுதி பெறுவா். விதவை தாயார், விதவை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கத்துடன், ரூ.50,000-ல் ரூ.30,000 வங்கி கணக்கிலும், ரூ. 20,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. இதர மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கத்துடன், ரூ.25,000-ல் ரூ.15,000 வங்கி கணக்கிலும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. விண்ணப்பமானது திருமண முடிந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
-
- முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்இத்திட்டமானது 1992ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் 2001 மற்றும் ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் இருவகை திட்டங்கள் உள்ளது.
திட்டம் – 1
இதில் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்தில் 35 வயதிற்கு உட்பட்ட பெற்றோரில் ஒருவா் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டவராக இருக்க வேண்டும். அக்குழந்தை பெயரில் ரூ.50,000 வைப்புத் தொகை தமிழ்நாடு மின்விசை கழகம் மூலம் பராமரிக்கப்படும், இந்த முதிர்வுத் தொகையானது அக் குழந்தை 10ம் வகுப்பு படித்தும், திருமணமாகாத நிலையில், 18 வயது புா்த்தி அடைந்தும் வழங்கப்படும். அக்குழந்தை இறக்க நேரிடின் தாயாருக்கும், தாயார் இல்லாத நிலையில் தந்தைக்கும், இருவரும் இல்லாத பட்சத்தில் அரசு கணக்கில் செலுத்தப்படும்.
திட்டம் – 2
இதில் இரண்டு பெண் குழந்தை உள்ள குடும்பத்தில் 35 வயதிற்கு உட்பட்ட பெற்றோரில் ஒருவா் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.25,000 அக் குழந்தையின் பெயரில் வைப்புத் தொகை தமிழ்நாடு மின்விசை கழகம் மூலம் பராமக்கப்படும். இந்த முதிர்வுத் தொகையானது அக்குழந்தை 10 ம் வகுப்பு படித்தும், திருமணமாகாத நிலையில், 18 வயது புா்த்தி அடைந்ததும் வழங்கப்படும். பயன் பெறும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இறக்க நேரிடின், இத் தொகையானது மற்றொரு குழந்தைக்கு சோ்த்து வழங்கப்படும்.
தகுதிகள்
- 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
- குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கக் கூடாது.
- திட்டம் ஒன்றில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- திட்டம் இரண்டில் இரண்டு குழந்தைகள் இருப்பின் இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.