பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
அறிமுகம்
தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவ்ட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி உதவித்தொகை
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/மாணவிகளுக்கு பின்வரும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
- பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம்
- இலவசக் கல்வி உதவித்தொகை (பட்டப்படிப்பு)
- மூன்றாண்டு பட்டயப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
- தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
தகுதிகள்
- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ. மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- முந்தைய கல்வியாண்டில் குறைந்த பட்சம் 40 சதவீத்த்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். சீர்மரபினர்களைச் சார்ந்த மாணவ/மாணவிகளுக்கு மதிப்பெண் வரையறை இல்லை.
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர இவர்களுக்கு 18 வயது மேற்பட்ட பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு சுயதொழில் புரிய தொழில் மானியமாக ரூ.7500 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஓய்வு பெற்ற தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு ரூ.1000 மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின பெண் குழந்தைகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின பெண் குழந்தைகளுக்கு இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.500ம், 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதிகள்
- பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.72000க்குள் இருக்க வேண்டும்
- ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவாகளின் பெண் குழந்தைகளுக்கு முன்னிரிமை அளிக்கப்படும்.
உணவு மானியம் வழங்குதல்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப்பயிலும் பிவ, மிபிவ, சீம மாணவ மாணவியருக்கு உணவு மானியத்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.650 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.50000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விடுதிகள்
பிவ, மிபிவ, சீம மாணவ மாணவியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகாமையில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய விடுதிகள் இயங்கி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 பிவ விடுதிகளும், 10 மிபிவ விடுதிகளும், 8 சீம விடுதிகளும். 1 சிறுபான்மை விடுதிகளும் இயங்கி வருகின்றன.
தகுதிகள்
- பள்ளி விடுதிகளைப் பொருத்தமட்டில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பும், கல்லூரி விடுதிகளைப் பொருத்தமட்டில் பட்டயம், பட்டம். மற்றும் முதுநிலை படிப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும்
- பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.100000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
- மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 5கிமீ க்கு அப்பால் இருத்தல் வேண்டும் (மாணவியருக்கு தூரவிதி பொருந்தாது.
பள்ளி விடுதி மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்குதல்
10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி விடுதி மாணவ/மாணவிகளுக்கு 4செட் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உணவுக்கட்டணம்
பள்ளி விடுதி மாணவ/மாணவிகளுக்கு ரூ.755 முதல் ரூ.900 வரையிலும், கல்லூரி விடுதி மாணவ/மாணவிகளுக்கு ரூ.875 முதல் ரூ.1000 வரையிலும் உணவுக்கட்டணமாக வழங்கப்படுகிறது.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ. மாணவியர்களுக்கு வருமானம் மற்றும் ஜாதி பாகுபாட்டை கணக்கில் கொள்ளாமல் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியுள்ளோர் மற்றும் உண்டி, உறைவிடப்பள்ளி மாணவ/மாணவியர் மட்டும் மிதிவண்டிகள் பெறுவதற்கு தகுதியற்றவர் ஆவர்.
விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்
பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
தகுதிகள்
- 20 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
- துணி தைக்க தெரிந்திருக்க வேண்டும்
விலையில்லா சலவைப்பெட்டி வழங்குதல்
பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
தகுதிகள்
- பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்து சலவைத் தொழிலை மேற்கொள்பவாகளாக இருத்தல் வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
நிலமற்ற ஏழை பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
தகுதிகள்
- பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்து சலவைத் தொழிலை மேற்கொள்பவாகளாக இருத்தல் வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
டாப்செட்கோ (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.
கடன்திட்டங்களின் விவரங்கள்
- பொதுக்கால கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ரூ.5.00 லட்சம் வரை – 6 சதவீதமும், ரூ.5.00 லட்சத்திற்கு மேல் – 8 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3-5 ஆண்டுகள்
- மகிளா சம்ரிதி யோஜனா – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய மகளா சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 4 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
- புதிய பொற்காலத்திட்டம் – மகளிருக்கான காலக்கடன் திட்டம் – அதிகபட்ச கடன் தொகை ரூ.1.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 5 ஆண்டுகள்
- ஆடவருக்கான சிறுகடன் திட்டம் – அதிகபட்சம் 20 உறுப்பினாகள் அடங்கிய ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000 (நபர் ஒன்றுக்கு) ஆண்டு வட்டி விகிதம் – 5 சதவீதம், திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
சிறுபான்மையினர் நலம்
சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை
திட்டத்தின் பெயர் | வகுப்பு – பாடப்பிரிவு | நிதி பங்கீடு |
---|---|---|
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை | 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை | 100% (மைய அரசு) |
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை | 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை | 100% (மைய அரசு) |
தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை | தொழிற்கல்வி – தொழிற்நுட்ப கல்வி | 100% (மைய அரசு) |
பொதுவான நிபந்தனைகள்
- முந்தைய ஆண்டு இறுதி தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- மொத்த பயனாளிகளில் 30% மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவ/மாணவியருக்கு மட்டுமே வழங்கப்படும்.
- விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர் வேறு துறையில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றிருத்தல் கூடாது.
விடுதிகள்
சிறுபான்மையினத்தைச்சார்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்வி பயில ஏதுவாக கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி விடுதி இயங்கி வருகிறது.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்
- இஸ்லாமிய மத்த்தைச்சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, முஸ்லிம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
- சங்கங்கள் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக 1: 2 என்ற விகிதாச்சாரத்தில் 01.04.2012 முதல் ஆண்டிற்கு ரூ.20.00 இலட்சம் வரை அரசால் இணைமான்யம் வழங்கப்படுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தாகாக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷாகானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் சமூக. பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்
நலத்திட்ட உதவிகள் விவரம்உதவித் தொகை (ரூ)
வ.எண் | நலத்திட்ட உதவிகள் விவரம் | உதவித் தொகை (ரூ) |
---|---|---|
1. | விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் | |
அ. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை | 100000 | |
ஆ. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக் கேற்ப | 10000 முதல் 100000 வரை | |
2. | இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை | 15000 |
3. | ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை | 2000 |
4 | கல்வி உதவித்தொகை | |
அ. 10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1000 | |
ஆ. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு | 1000 | |
இ. 11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1000 | |
ஈ. 12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1500 | |
உ. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு | 1500 | |
ஊ. முறையான பட்டப்படிப்பு | 1500 | |
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பு | 1750 | |
எ. முறையான பட்டமேற்படிப்பு | 4000 | |
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்பு | 5000 | |
ஏ. தொழிற்கல்வி பட்டப்படிப்பு | 4000 | |
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பு | 6000 | |
ஐ. தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு | 6000 | |
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு | 8000 | |
ஒ. ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு | 1000 | |
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு | 1200 | |
5. | திருமண உதவித்தொகை | 2000 |
6. | மகப்பேறு உதவித்தொகை | |
அ. மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம்
(6 மாதங்களுக்கு) |
6000 | |
ஆ. கருச்சிதைவு / கருக்கலைப்பு | 3000 | |
7. | கண் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் | 500 (அதிக பட்சம்) |
8. | முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் | 1000 (ஒரு மாத்திற்கு) |
டாம்கோ (தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்)
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையின மக்களை மேம்படுத்துவதற்காக தனிநபர் கடன், சிறுகடன், கல்விக்கடன், மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தொழில் சார்ந்த பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
பொதுவான நிபந்தனைகள்
-
- விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மையினர் இனத்தவரான முஸ்லீம், கிருத்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சீ, ஜைனர் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
- வயது வரம்பு – 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
- ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்
- கிராமப்புறங்களில் ரூ.81000க்கும், நகர்ப்புறங்களில் ரூ.103000க்கும் மிகாது இருத்தல் வேண்டும்.
- இக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்படுகிறது.
கடன்திட்டங்களின் விவரங்கள்
- தனிநபர் கடன் – திட்டம் 1ன்கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.20.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ரூ.50000 வரை – 6 சதவீதமும், ரூ.50000க்கு மேல் – 6 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திட்டம் 2ன்கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.30.00 இலட்சம், ஆண்டு வட்டி விகிதம் – ஆண் பயனாளிக்கு 8 சதவீதமும், பெண் பயனாளிக்கு 6 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3-5 ஆண்டுகள்
- கறவை மாடு வாங்குவதற்கான கடன் – ஆவின் மூலம் 6 சதவீத வட்டி விகித்த்தில் இரண்டு கவை மாடுகள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது. இரண்டு கலப்பின பசுக்கள் வாங்க அதிக பட்சம் ரூ.50000மும், இரண்டு உயர்ரக முர்ரா எருமைகள் வாங்க அதிகபட்சம் ரூ.70000 வரையும் கடன் வழங்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 3 ஆண்டுகள்
- ஆட்டோ வாங்குவதற்கான கடன் உதவி – தொழிற்கூட்டுறவு சங்கங்கள் மூலம் எல்.பி.ஜி ஆட்டோ – 1.21 இலட்சமும், மற்ற ஆட்டோ – 1.00 இலட்சமும் 6 சதவீத வட்டியில் அளிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 4 ஆண்டுகள்
- போக்குவரத்து இனக்கடன் – நான்கு சக்கர வாகனங்கள் முறையே கார், வேன் மற்றும் டிராக்டர் ஆகியவைகள் வாங்க ரூ.3.13 இலட்சம் 10 சதவீத வட்டியில் அளிக்கப்படுகிறது. திரும்ப செலுத்தும் காலம் – 5 ஆண்டுகள்
- சிறுகடன் – சுய உதவிக்குழுக்களின் அங்கத்தினர்களுக்கு ஜவுளி வியாபாரம், காலணி விற்பனை, சிற்றுண்டி பலகாரம், ஊறுகாய், அப்பளம் தயாரித்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல் போன்ற சிறுவியாபாரம் செய்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திட சிறுவணிகக் கடனாக அதிகபட்சம் ரூ.100000 வரை 7 சதவீத வட்டியிலும், ஆண்டு வருமானம் 1.03 இலட்சத்திற்கு மேற்பட்டு உள்ளவர்களுக்கு அதிகபட்சம் 6.00 இலட்சம் வரை 8-10 வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
- கல்விக்கடன் – அரசால் அங்கீகிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை. முதுகலை தொழிற்கல்வி, தொழிற்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு 3.00 முதல் அதிகபட்சம் 15.00 இலட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4.00 லட்சம் வீதம் அதிகபட்சம் 20.00 இலட்சம் வரையிலும். வெளிநாட்டில் தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 6.00 லட்சம் வீதம் அதிகபட்சம் 30.00 இலட்சம் வரையிலும். ஆண்டு வட்டித்தொகையாக 3-5 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. கல்வி பருவம் முடிந்த தேதியிலிருந்து அடுத்த 6வது மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டி தொகை ஆகியவை 60 மாத தவணைகளில் செலுத்த வேண்டும்.
தொடர்புக்கு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தஞ்சாவூர்
போன் 04362-278415, 278416
மின்னஞ்சல் முகவரி dbcwo.tntnj@gmail.com , bcwo.tntnj@nic.in
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் விபரம்
பொதுத் தகவல்
பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலர்,
தஞ்சாவூர்
மேல்முறையீடு
மேல்முறையீட்டு அலுவலர் மற்றும்
மாவட்ட வருவாய் அலுவலர்,
தஞ்சாவூர்