மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையினுடைய முதன்மை கொள்கையானது பல்வேறுபட்ட ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதாகும். தொடக்கத்திலிருந்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையினுடைய நிர்வாக செலவானது ஒவ்வொரு திட்டங்களின் பங்குத் தொகையிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
இருப்பினும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் அனைத்து திட்டங்களும் நிர்வாக செலவிற்காக நிதியினை ஒதுக்கீடு செய்வதில்லை. ஒவ்வொரு திட்டமும் ஒரே அளவிலான நிர்வாக செலவினங்களை ஒதுக்குவதில்லை. 1991 ஏப்ரல் – 1 முதல் மத்திய அரசு வறுமை ஒழிப்பு
திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதற்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உறுதுணையாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிர்வாக செலவிற்கு தனியாக நிதி ஒதுக்கீட செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிர்வாக செலவிற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் 75 25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசினுடைய நிதி ஒதுக்கீடு மூலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியினுடைய விகிதம் வடகிழக்கு மாநிலங்களில் 90 10 என்ற விகிதத்தில் 2008 – 2009 ஆம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குறிக்கோள்கள்
- மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது வளா்ச்சி திட்டங்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும்.. திட்டங்களை செயல்படுத்துவதற்கு உறுதணையாகவும் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இம்முகமையானது மத்திய அரசின் ஊரக வளா்ச்சி துறையினுடைய வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும். வறுமையினை முழுமையாக மாவட்டங்களில் அகற்ற உறுதுணையாகவும் இருக்கின்றது.
- இம்முகமையானது பல்வேறு துறைகள். பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து வறுமை ஒழி்ப்பினை நீக்கிட சிறப்பாக செயல்படுகிறது.
- பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது எந்த சூழ்நிலையிலும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதுணை புரிகின்றது.
- மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது பிற துறைகளுடன் இணைந்து அரசின் புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும். திட்டங்கள் தரமாகவும் மற்றும் பிற துறைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.
- மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது ஊரக வளா்ச்சித் துறையின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் மற்றும் ஊரக பகுதி மக்களின் வறுமை ஒழிப்பினை நீக்குவதிலும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு அவா்களின் திறனுக்கேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் உறுதுணையாக இருக்கின்றது.
- மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது, வறுமைக்கோட்டு புள்ளி விபரங்கள் மற்றம் பிற புள்ளி விபரங்களை அரசிற்கு சேகரித்து தருவதில் எந்த நேரத்திலும் துணை புரிகின்றது. மேலும், இம்முகமையானது அரசின் திட்டங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றிய ஆய்வினை வழங்குகிறது. இம்முகமையானது மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மேலும், மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் உறுதுணை புரிகின்றது.
செயல்பாடுகள்
முறையாக சட்டத்தின்படி பதிவுகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டமும் ஒரே ஒரு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையினை கொண்டுள்ளது. சில மாநிலங்களில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை என்ற அலகு தனியாக இருப்பதில்லை. மாறாக ஜில்லா பரிஷித் – மாவட்ட ஆட்சியா் அவா்களே மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலகினை தனியாக கொண்டிராமல் இவா்களே செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால், கணக்குகள் மட்டும் தனியாக பராமாரித்து வரப்படுகிறது. இந்த அமைப்பானது முதன்மை செயலாக்க அலுவலா் என்ற பெயரில் திட்ட இயக்குநருக்கு நிகரான அதிகாரம் கொண்டுள்ளனா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது தேவையான மற்றும் தகுதியான நபா்களை கொண்டுள்ளது. இந்த பணியாளா்களை கொண்டு வறுமை ஒழிப்புத் திட்டங்கள், திட்ட உருவாக்கம், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் திறன்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பாலின கவலைகள், பொறியாளா் மேற்பார்வை, தர ஆய்வு, திட்டக் கண்காணிப்பு, கணக்குகள், தணிக்கை ஆய்வு மற்றும் மதிப்பீடுகள் போன்றவற்றை கண்காணிக்கிறது. பணியாளா்கள் பற்றிய விபரங்கள் தனி இணைப்பில் தரப்பட்டுள்ளது. மாநில அரசானது பணியாளா்களுடைய அமைப்பினை மாற்றும். ஆனால் அதன் அடிப்படை அமைப்பினை மாற்றக் கூடியதல்ல. ஒவ்வொரு மாவட்டமும், அந்தந்த மாவட்டங்களுக்குரிய அமைப்பில் பணியாளா்களை கொண்டுள்ளது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது நிர்வாக செலவினை அந்தந்த மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் செயல்படுத்துகின்றது. இம்முகமையினுடைய பணியாளா்கள் திறன் உடையவா்களாகவும், அடிக்கடி பணியாளா்களை மாற்றாத வகையிலும் பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.
- ஜில்லா பரிஷித் – மாவட்ட ஆட்சியா்
- அனைத்து பாராளுமன்ற உறுப்பினா்கள், சட்டமன்ற உறுப்பினா்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினா்கள்
- மூன்றில் ஒரு பங்கு நபா்கள் பஞ்சாயத்து சமீதி தலைவா்கள் ஒராண்டிற்கு ஒருமுறை வரிசைகிரமம் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இதில் ஒரு நபா் தாழ்த்தப்பட்ட – பழங்குடியினா் வகுப்பினை சார்ந்தவா்கள் மற்ற ஒருவா் பெண்.
- ஜில்லா பரிஷத்தின் முதன்மை செயலாக்க அலுவலா் – மாவட்ட ஆட்சியா் – முதன்மை – முதன்மை செயலாக்க அலுவலா் – செயலாக்க இயக்குநா்.
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா்
- மண்டல ஊரக வங்கியின் தலைவா்
- மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா்
- மாவட்ட அளவிலான இந்திய ரிசா்வ் வங்கியின் பிரதிநிதி
- மாவட்ட அளவிலான நபார்டு பிரதிநிதி
- மாவட்ட தொழில்மையத்தின் பொது மேலாளா்
- காதி மற்றும் கிராம தொழில் வாரிய பிரதிநிதி
- மாவட்ட ஆதிதிராவிடா் – பழங்குடியினா் நல அலுவலா்
- மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலா்
- மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்
- தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதி.
திட்டங்கள் – செயல்பாடுகள்
வ. எண் | திட்டத்தின் பெயர் | செயல்பாடுகள் | திட்டங்கள் |
---|---|---|---|
1. | தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டம். | ||
2. | பிரதம மந்திரி கிராம சதக்
யோஜனா |
||
3. | இந்திரா ஆவாஸ் யோஜனா | ||
4. | சுவர்ன ஜெயந்தி கிராம் சுவராஜ்கார் யோஜனா | ||
5. | பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம். | ||
6. | முழு சுகாதார இயக்கம் |
வ. எண் | திட்டத்தின் பெயர் | செயல்பாடுகள் | திட்டங்கள் |
---|---|---|---|
1. | அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். | ||
2. | நபார்டு – ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி – சாலைப்பணிகள் | ||
3. | சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம். | ||
4. | ஊரக உட்கட்டமைப்புத் திட்டம். | ||
5. | ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத் திட்டம். | ||
6. | 12-வது நிதிக்குழு மான்ய சாலைப்பணிகள். | ||
7. | ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் புதுப்பித்தல் திட்டம். | ||
8. | சமத்துவபுரம் | ||
9. | நமக்கு நாமே திட்டம். |
கோட்டங்கள் – அலகுகள் – பிரிவுகள் – சமூகங்கள்
அ – திட்ட இயக்குநர்
- ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகமும், ஒரு திட்ட இயக்குநரை கூடுதல் மாவட்ட நீதிபதிக்கு நிகரானவரை கொண்டிருக்கும். இந்த திட்ட இயக்குநர் அனைத்து இந்திய பணிக்கு முதுநிலை அலுவலர் நிலைக்கு நிகரானவர். திட்ட இயக்குநரின் ஊதிய விகிதமானது அகில இந்திய பணிகளின் முதுநிலை அலுவலர்களுக்கு நிகராகவும் அல்லது மாநில அளவில் முதுநிலை அலுவலர்களுக்கு நிகராகவும் நியமிக்கப்படுகிறார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அனைத்து விதமான பணிகளுக்கும் முழு பொறுப்பு உடையவராகவும் மாநில அளவில் மற்றும் மத்திய அளவில் தி்ட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பு உடையவராகவும் விளங்குகிறார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பணிகளை செயல்படுத்துவதில் பிரத்தியோகமான அலுவலராக திகழ்கிறார்.
- சில மாநிலங்களில் அதாவது மஹாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் திட்ட இயக்குநர் என்பவர் ஜில்லா பரிஷித்தின் முதன்மை செயலாக்க அலுவலர் – மாவட்ட ஆட்சியராகவே செயல்படுகிறார். இந்திய அரசானது மாநில அரசாங்கங்களின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு தலைவராக ஜில்லா பரிஷித் தலைவர் – மாவட்ட ஆட்சியரையே நியமிக்கிறது. சில மாநிலங்களில் ஜில்லா பரிஷித்தின் முதன்மை செயலாக்க அலுவலரே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக செயல்படுகிறார்.
ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் கீழ்காணும் பிரிவுகளை கொண்டுள்ளது.
- சுய வேலை வாய்ப்பு பிரிவு
- மகளிர் பிரிவு
- தினக்கூலி வேலையாளர் பிரிவு
- பொறியாளர்கள் பிரிவு
- கணக்கு பிரிவு
- மேற்பார்வையாளர்கள் மற்றும் மதிப்பீட்டு பிரிவு மற்றும்
- பொது நிர்வாக பிரிவு
ஆ – சுய வேலை வாய்ப்பு பிரவு
சுய வேலை வாய்ப்பு பிரிவானது திட்ட அலுவலரை தலைவராக கொண்டது. அதாவது உதவி திட்ட அலுவலர் கள திட்டமிடுதல். சமூக அணி திரட்டுதல், கடன் வழங்குதல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை கையாளுகிறார். திட்ட அலுவலர் மேற்காணும் நான்கு செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர் ஆவார். உதவி திட்ட அலுவலர் (திட்டமிடுதல்) மாவட்ட – வட்டார கிராம அளவில் எந்தவொரு செயல்பாடுகளிலும் செயல்படுத்த திட்டமிடல், திட்ட தயாரிப்பு, திட்டத்தை செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு போன்றவற்றை வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படுகிறார். மேலும், இவர் மாவட்ட அளவில் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார்.
திட்ட அலுவலர் (அணி திரட்டல்) பணியானது குழுக்கள் உருவாக்கம், திறன்கள் மேம்படுத்துதல், குழுக்களை மேற்பார்வையிடுதல், குழுக்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சுழல் நிதி வழங்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்றவற்றை செயல்படுத்துகிறார்.
திட்ட அலுவலர் (கடன் வழங்குதல்) வணிக வங்கிகளுடன் இணைந்து பயனாளிகளுக்கு கடன வழங்குதல், கடன்களை திரும்ப செலுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு வங்கிகளுக்கும், பயனாளிகளுக்கும் இடையில் பாலமாக செயல்படுகிறார்.
திட்ட அலுவலர் (தொழில்நுட்பம்) தொழில் நுட்பங்களுடன் நடப்பு தொழில் நுட்பங்களை உட்புகுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகமானது சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும். இது பல்வேறுப்பட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது. அனைத்து விதமான திட்டங்களை மேற்பார்வையிடுதலில் அரசியலமைப்பு சட்டத்தின்படியும். சமூக, ஊரக வளர்ச்சி திட்டங்களை வழிகாட்டு நெறிமுறைகளின்படி முன்னேற்பு நடவடிக்கைகளுடன் சிறப்பாக செயல்படுத்துகிறது.
இ – மகளிர் பிரிவு
ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும், வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு மகளிர் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவானது மகளிர் பிரிவுடன் குழந்தைகள் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரத்துறை போன்றவற்றுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. இந்த மகளி்ர் பிரிவானது உதவி திட்ட அலுவலரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.
ஈ – தினக்கூலி பணியாளர்கள் பிரிவு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையானது, தினக்கூலி பணியாளர்கள் பிரிவினை கொண்டுள்ளது. இந்த பிரிவினை கொண்டு அரசின் திட்டங்களை திட்டமிடல் மற்றும் மேற்பார்வையிடுதலில் துணை புரிகின்றது. இந்த பிரிவானது பிற துறை மற்றும் பொறியாளர் துறையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பிரிவானது திட்ட அலுவலரை தலைவராகக் கொண்டு, குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படுகின்றது.
உ– ஆற்றுப்பள்ளத்தாக்கு பிரிவு
சில மாவட்டங்களில் ஆற்றுப்பள்ளத்தாக்கு பிரிவு ஒருங்கிணைந்த ஆற்றுப்பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டங்கள், வறட்சி பாதித்த பகுதி திட்டங்கள் மற்றும் பாலைவன வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஆற்றுப்பள்ளத்தாக்கு பிரிவினை கொண்டுள்ளது. இந்த பிரிவானது திட்ட அலுவலரைக் கொண்டு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு செயல்படுகிறது.இந்த அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு ஆற்றுப்பள்ளத்தாக்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஊ – பொறியாளர்கள் பிரிவு
ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகமும், பொறியாளர் பிரிவினை கொண்டுள்ளது. இந்த பிரிவானது அனைத்துவித துறைகளுடன் இணைந்து புது விதமான கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள் மற்றும் தேவயைான பயிற்சிகளை வழங்குவதற்கு உறுதுணை புரிகின்றது. இந்த பொறியாளர் பிரிவானது ஒரு செயற்பொறியாளரையும், ஒன்று அல்லது இரண்டு உதவி–இளநிலை பொறியாளர்களையும் கொண்டுள்ளது.
எ. கணக்குகள் பிரிவு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையானது கணக்குள் பிரிவினை தனியாக கொண்டுள்ளது. இந்த பிரிவானது ஒவ்வொரு ஆண்டின் ஆண்டு அறி்க்கையினை அறிக்கையாக அளிக்கிறது. இந்த பிரிவானது கணக்கு அலுவலரை தலைவராக கொண்டுள்ளது. கணக்கு அலுவலர் மாற்று பணியிலிருந்தோ அல்லது கணக்கு பட்டையாளர் ஆகவோ நியமிக்கப்படுகிறார். இந்த கணக்கு அலுவலர் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் மற்றும் தினக்கூலி பணியாளர் திட்டங்களுக்கு தேவையான மானியங்கள் வழங்குவதில் உதவி புரிகிறார். ஒருங்கிணைந்த ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்டங்கள், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான திட்டங்கள் மற்றும் பாலைவன பகுதி வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றிற்கு உதவி புரிகின்றார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்த ஒரு கணக்காளர் துணை புரிகிறார். ஒரு கணக்கு அலுவலர் இவ்வலுவலகத்தின் கணக்குகளை தணிக்கை செய்வதில் துணை புரிகிறார்.
ஏ. கண்காணிப்பு பிரிவு
கண்காணிப்பு பிரிவு திட்ட இயக்குநரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. இந்த கண்காணிப்பு பிரிவானது அனைத்து திட்டங்களையும் மேற்பார்வையிடுதல் மற்றும் மதிப்பிடுதல் போன்றவற்றை திட்ட பொருளாதார நிபுணர்களைக் கொண்டு கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் துணை புரிகின்றது. இந்த பிரிவானது எல்லா விதமான திட்டங்களின் நிதிகளை கண்காணக்கின்றது. இந்த பிரிவானது எல்லா விதமான திட்டங்களின் நிதிகளை கண்காணிக்கிறது. இந்த பிரிவானது மாவட்டத்தின் வறுமை ஒழிப்பு திட்டங்களை கண்காணிக்கிறது.
ஐ – முக்கிய அலுவலர்களின் விபரம்
- திட்ட இயக்குநர் – 04362 – 231 412 – 7373704214
ஒ – தகவலறியும் உரிமைச் சட்டம் – தகவலுக்கான தொடர்பு
உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு – 1) – 7402607319