கால்நடை பராமரிப்புத் துறை தஞ்சாவூர் மாவட்டம்
கால்நடை பராமரிப்புத் துறை- ஓர் பார்வை
- தஞ்சாவூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதன் ஊரக
மற்றும் நகர்ப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய
பங்கு வகிக்கிறது. - கற்ற மற்றும் கல்லாத ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை
உருவாக்கி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. - அதிக அளவு பால், முட்டை, தோல், எலும்பு, எரு மற்றும்
கால்நடை திறன் (எருது வேலைத் திறன் ) போன்றவற்றை
உற்பத்தி செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. - மகளிர் திட்ட சுயஉதவிக் குழுவின் வாழ்க்கை தரத்தை
உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. - செயற்கைமுறை கருவூட்டல் முறையில் உள்நாட்டு பசுக்களை
வெளிநாட்டு ஜெர்சி பசுக்களுடன் கலப்பினம் செய்தல் மற்றும்
உள்ளுர் நீர் எருமைகளை முர்ரா இனத்துடன் சேர்த்து தரம்
உயர்த்துதல் - கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று
நோய்களான அடைப்பான், சப்பை நோய், தொண்டை
அடைப்பான், வெறிநோய், கால் மற்றும் வாய் நோய், நீலநாக்கு
நோய், ஆட்டுக்கொல்லி நோய் போன்றவற்றிற்கு
தடுப்பூசிப்பணி மேற்கொள்ளல் - நோயுற்ற கால்நடைகளுக்கு உரிய மருத்துவ, சிறு மற்றும்
பெரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளல் - புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு
களப்பணி அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் பயிற்சி
அளித்தல் - மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களை
கட்டுப்படுத்துதல்
தஞ்சாவூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை செயல்பிரிவுகள்
திட்டங்கள்
- விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்
- 2017 −18ம் ஆண்டில் 5 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 250 கிராமப்புற ஏழை மகளிருக்கு ரூ.10.13 கோடி செலவில் 250 விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது
- 133 கிராம ஊராட்சிளை சேர்ந்த ஏழையின் ஏழையாகிய 6636 மகளிருக்கு ரூ.8.64 கோடி செலவில் 26544 விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
- ராஷ்டிரிய கோகுல் மிஷன் 2016−17 : மத்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 4010 கறவைமாடுகள் ரூ.7.26 லட்சம் செலவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் முலம் கால்நடைகள் ஏதேனும் இறப்பு ஏற்படின் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை உடன் பெற்று வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதார சரிவு தடுக்கப்படும்.
- ஊரக புறக்கடை கோழிவளர்ப்பு திட்டம் 2017−18 : 2014−15 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலமற்ற 930 ஏழை விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் 4 வார கிரிராஜா கோழிகள் தலா 20 எண்ணிக்கை ரூ .9.30 லட்சம் செலவில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் வருடத்திற்கு 2400 முட்டைகள் பெற்று ரூ .12000 பொருளாதார வளர்ச்சி அடையலாம். மேலும் 20 கோழிகளுக்கான இரவு கூண்டு தலா ரூ.1500 வீதம் ரூ .13.95 லட்சம் செலவில் 930 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
- கோழி அபிவிருத்தி திட்டம் : இத்திட்டம் நாட்டுக்கோழிகள் உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டு 2012−2013ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எளிதாக விற்பனை செய்யக்கூடிய / சந்தைப்படுத்த வல்ல நாட்டுக்கோழிகளை 12 வார வயதில் தாங்களே விற்பனை செய்ய இயலும்.2017−2018 ம் ஆண்டில் 160 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 250 கோழிக்குஞ்சுகள் வீதம் 40000 கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனம், அதற்கான கொட்டகை ஆகியவற்றிற்கு அலகுக்கு ரூ .45750 வீதம் ரூ .73.2 லட்சம் செலவில் வழங்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு பயனாளிக்கும் மூன்று முறை கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுவதுடன் தலா ரூ .21875 மானியம் வழங்கப்படுகிறது. 160 பயனாளிகளுக்க ரூ•35 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது, நாட்டுகோழிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஒரு கோழிக்கு ரூ.100 லாபம் ஈட்ட இயலும்
- கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டம் 2017−18 : வைரஸ் நச்சு கிரிமிகளால் ஏற்படும் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) ஆனது கால்நடைகளில் பால் உற்பத்தியை குறைத்தல், சினைபிடிக்காமை, கன்று இறப்பு, ஆகியவற்றை ஏற்படுத்தி மிக பெரிய பொருளாதார இழப்பினை ஏற்படுத்தகூடியது.
- கால்நடை பாதுகாப்புத் திட்டம் : கால்நடை நிலைய சேவைகள் பெற இயலாத தொலைதூர கிராம மக்களின் கால்நடைகள் பயன்பெற ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் குடற்புழு நீக்கம், தடுப்பூசிப்பணிகள், மலடுநீக்க சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால் கால்நடைகளின் நலம் பேணப்பட்டு அதிக பால் மற்றும் இறைச்சி உற்பத்தி மூலம் கிராமபுற பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது.2017− 18 ஆம் ஆண்டில் ரூ.2.45 லட்சம் செலவில் 240 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
- வறட்சி நிவாரண திட்டம் : 2017− 18 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சில வட்டங்களில் கடும் வறட்சி நிலவி கால்நடைகளை கேட்கும் விலைக்கே விற்கும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசு ரூ.25.93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வறட்சியால் பாதிக்கப்பட்ட 4842 விவசாயிகளின் 121129 கால்நடைகளுக்கு 363.387 மெட்ரிக் டன் (வைக்கோல்) மானியத்தில் வழங்கி கால்நடைகளின் விற்பனை தடை செய்யப்பட்டது
- மாநில தீவன அபிவிருத்தி திட்டம் :
பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கீழ்க்கண்ட பணிகள் 2017−18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.- கோ3 / கோ4 தீவன புல் 100 ஏக்கர் விவசாயிகளின் விளைநிலத்தில் ரூ.9.6 லட்சம் செலவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு பல்லாண்டு தீவன சோளம் (கோஎப்எஸ்29) விதைகள் இலவசமாக வழங்கப்பட்டு 100 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- மானாவாரியில் தீவனப்பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக தீவன சோள விதை இலவசமாக வழங்கப்பட்டு 750 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- புதிதாக மண்ணில்லா தீவன சாகுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.7.16 லட்சம் 40 அலகுகள் நிறுவப்பட்டுள்ளது.
- அசோலா வளர்ப்பு திட்டம் ரூ.4.0 லட்சம் செலவில் 250 விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாநில தீவன அபிவிருத்தி திட்டம் பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கீழ்க்கண்ட பணிகள் 2017−18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 20.76 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கோட்டம்
தஞ்சாவூர் கோட்டம்
அலுவலகம் : பழைய மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகம்
பின்கோடு எண் : 613 007
கைபேசி எண் : 9445032538
தொலைபேசி எண் : 04362 – 275055
மின்னஞ்சல் முகவரி : adahtnj@gmail.com
அலுவலர் : உதவி இயக்குநர்
கால்நடை மருந்தகங்கள் : 42
நடமாடும் கால்நடை மருந்தகம் : 01
கால்நடை கிளை நிலையங்கள் : 14
கும்பகோணம் கோட்டம்
அலுவலகம் : லஷ்மி விலாஸ் தெரு,
கும்பகோணம் – 612 001
கைபேசி எண் : 9445032587
தொலைபேசி எண் : 0435 – 2400587
மின்னஞ்சல் முகவரி : adahkumbakonam@gmail.com
அலுவலர் : உதவி இயக்குநர்
கால்நடை மருந்தகங்கள் : 33
நடமாடும் கால்நடை மருந்தகம் : 01
கால்நடை கிளை நிலையங்கள் : 11
பட்டுக்கோட்டை கோட்டம்
அலுவலகம் : சாந்தாங்காடு பழைய
கோழி விரிவாக்க வளாகம்
பட்டுக்கோட்டை – 614 601
கைபேசி எண் : 9445032549
தொலைபேசி எண் : 04373 – 222155
மின்னஞ்சல் முகவரி : adahpkt@gmail.com
அலுவலர் : உதவி இயக்குநர்
கால்நடை மருந்தகங்கள் : 26
நடமாடும் கால்நடை மருந்தகம் : 01
கால்நடை கிளை நிலையங்கள் : 03
அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்கள்
- மண்டல இணை இயக்குநர் (காப) அலுவலகம், தஞ்சாவூர்இடம் : பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்அலுவலர் : மண்டல இணை இயக்குநர்கைபேசி எண் : 9445001134தொலைபேசி எண் : 04362 – 230835
மின்னஞ்சல் : rjdahtnj@gmail.com.
- உயரின கால்நடை பெருக்குப்பண்ணை – ஈச்சங்கோட்டைISO 9001:2008 certified Farm Licence No. QSC/L 6006874அலுவலர் : துணை இயக்குநர்தொலைபேசி எண் : 04372 . 244844, 244404கைபேசி எண் : 9445032528
மின்னஞ்சல் முகவரி : ddecbfekt@gmail.com
- மாவட்ட கால்நடை பண்ணை ஒரத்தநாடு (இ)நடுவூர்அலுவலர் : துணை இயக்குநர்கைபேசி எண் : 9445032535மின்னஞ்சல் முகவரி : dddlfonad@gmail.com
- கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி தஞ்சாவூர்அலுவலர் : துணை இயக்குநர்அலுவலகம் : தஞ்சாவூர், வல்லம் மெயின் ரோடு பிள்ளையார்பட்டி கிராம ஊராட்சிபின்கோடு எண் 613 403கைபேசி எண் : 9445032521
மின்னஞ்சல் முகவரி : ddcbfdtnj@gmail.com
- கால்நடை நோய் புலனாய்வு பிரிவு . தஞ்சாவூர்அலுவலர் : உதவி இயக்குநர்அலுவலகம் : தஞ்சாவூர் . வல்லம் மெயின் ரோடு பிள்ளையார்பட்டி கிராம ஊராட்சிபின்கோடு எண் 613 403தொலைபேசி எண் : 04362 – 230342
கைபேசி எண் : 9445032600
மின்னஞ்சல் முகவரி : adiutnj@gmail.com
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பொது தகவல் அலுவலர்
மண்டல இணை இயக்குநர் (காப) அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தஞ்சாவூர்.
கைபேசி எண் : 9445001134
தொலைபேசி எண் : 04362 – 230835