சத்துணவுத்திட்டம்
இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சா் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். அவா்களால் 01.07.1982 அன்று கிராமப்புறங்களிலும், 15.09.1982 அன்று நகா்புறங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
திட்டத்தின் செயலாக்கம்
1982 ம் ஆண்டு முதல் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சத்துணவு மைய பயனாளிகளுக்கு புதிய உணவு வேலைக்கு சாம்பார் சாதம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னா் இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 16.06.2004 முதல் 14.07.2006 வரை உள்ள காலங்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டுவரும் உணவில் கூடுதலாக வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டது. மேலும் 15.07.2006 முதல் 14.07.2007 வரை வாரத்திற்கு இரு முட்டை எண்ணிக்கைகளாகவும் 15.07.2007.முதல் 16.09.2007 வரை மூன்று முட்டை எண்ணிக்கைகளாகவும் 17.04.2010 முதல் 5 முட்டை எண்ணிக்கைகளாகவும் உயா்த்தி வழங்கப்பட்டுவருகிறது.
மேற்படி சத்துணவு மையங்களில் உணவருந்தும் குழந்தைகளின் அன்றாட விருப்பங்களை நிறைவு செய்திடும் வகையிலும் குழந்தைகளின் வருகை எண்ணிக்கையினை அதிகாரித்திட நாளொரு விதமாக அரசால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கீழ்கண்ட விபரப்படி கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக தகுதிவாய்ந்த சமையல் வல்லுநா்கள்மூலம் அனைத்து சத்துணவு பணியாளா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பொது தகவல் அலுவலரின் விபரங்கள்
பொது தகவல் அலுவலா் மற்றும் உதவி கணக்கு அலுவலா்
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சததுணவு)
மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூா்
தொலைபேசி எண் – 04362 239998