Close

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்

முன்னுரை

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மறுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளதுடன், அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மறுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகள், 12 மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகள், 8 சீர்மரபினருக்கான விடுதிகள் மற்றும் 1 சிறுபான்மையினர் நல விடுதி  என மொத்தம்  55  விடுதிகள்  இயங்கி வருகின்றன.

2023063056.jpg

விலையில்லா  தையல்     இயந்திரம்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகத்தில்     சமூகத்தில் மிகவும்      நலிவுற்ற பிற்படுத்தப்பட்டோர்      மற்றும்        மிகவும்      பிற்படுத்தப்பட்டோர்        நலனுக்காகவும் அவாக்ள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தகுதிகள்

    1. வயது 20-க்கு மேல் 45-க்குள் இருக்க் வேண்டும்
    2. ஆண்டு வருமானம் (ரூ 1,00,000-க்குள்) இருக்க வேண்டும்
    3. தையல் பயிற்சி  சான்று

தேவைப்படும் ஆவணங்கள்

    1. அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவம்
    2. வருமாச்சான்று
    3. புகைப்படம்-2
    4. 10 வருடங்களாக அரசின் எந்தவொரு நலதிட்டத்தின்  கீழும்  விலையில்லா தையல்  இயந்திரம் பெறவில்லை  என  கிராம நிர்வாக அலுவலர்  சான்று
    5. சாதிச்சான்று
    6. குடும்ப அட்டைநகல்
    7. தையற் பயிற்சி சான்று

இத்தகுதிகள் இருப்பின் முதுநிலை வரிசைப்படி விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

விலையில்லா சலவைப்பெட்டி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமூகத்தில் மிகவும் நலிவுற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் அவாக்ள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையவும் விலையில்லா சலவைப்பெட்டி  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தகுதிகள்

    1. ஆண்டு வருமானம் (1,00,000-க்குள்) இருக்க வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்

    1. அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவம்
    2. வருமாச்சான்று
    3. புகைப்படம்-2
    4. 10 வருடங்களாக அரசின் எந்தவொரு நலதிட்டத்தின் கீழும் விலையில்லா சலவைப்பெட்டி பெறவில்லை என கிராம நிர்வாக அலுவலர் சான்று
    5. சாதிச்சான்று
    6. குடும்ப அட்டைநகல்

இத்தகுதிகள் இருப்பின் முதுநிலை வரிசைப்படி விலையில்லா சலவைப்பெட்டி  வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர்,  சீர்மரபினர்

                தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்  வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

கல்வி உதவித்தொகை

திட்டத்தின் பெயர் நிபந்தனைகள்
1.பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்கள்

 சுய நிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவ / மாணவியர்கள்

 

 

 

பெற்றோர்களது ஆண்டு வருமானம்                                         ரூ– 2,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்
2.இலவச கல்வி உதவித்தொகைத் திட்டம்

i. மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  மூன்றாண்டு பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்கள்

 

 

நிபந்தனை ஏதும் இல்லை

 

 

 

 

ii. மூன்றாண்டு பட்டயப் படிப்புகளுக்கு(டிப்ளமோ)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பயிலகங்களில்  மூன்றாண்டு பட்டயப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்கள்

 

1.பெற்றோர்களது ஆண்டு வருமானம்                     ரூ– 2,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்

2.குடும்பத்தில் வேறு பட்டய/பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது.

 

 

 

iii. தொழிற்கல்வி படிப்புகளுக்கு ( மருத்துவம், பொறியியல், விவசாயம் போனறு)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்கல்லூரிகள் மற்றும் சுயநிதி தொழில்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும்   மாணவ / மாணவியர்கள்

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின பெண் குழந்தைகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்

கிராமபுற பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின பெண் குழந்தைகள் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.500வீதமும், 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வீதமும்  வழங்கப்பட்டு வருகிறது.

தகுதிகள்

  1. பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூபாய் ஒரு இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  2. மிபிவ/சீம இனத்தை சேர்ந்த பெண் குழந்தையாக இருக்க  வேண்டும்

உணவு மானியம் வழங்குதல்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப்பயிலும் பிவ, மிபிவ, சீம மாணவ மாணவியருக்கு உணவு மானியத்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விடுதிகள்

பிவ, மிபிவ, சீம மாணவ மாணவியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகாமையில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய விடுதிகள் இயங்கி வருகின்றன.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 34 பிவ விடுதிகளும், 12 மிபிவ விடுதிகளும், 8 சீம விடுதிகளும். 1 சிறுபான்மையினர் விடுதியும் இயங்கி வருகின்றன.

தகுதிகள்

  1. பள்ளி விடுதிகளைப் பொருத்தமட்டில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பும், கல்லூரி விடுதிகளைப் பொருத்தமட்டில் பட்டயம், பட்டம். மற்றும் முதுநிலை படிப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும்
  2. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8கிமீ க்கு அப்பால் இருத்தல் வேண்டும் (மாணவியருக்கு தூரவிதி பொருந்தாது).

பள்ளி விடுதி மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்குதல்

4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பயிலும் பள்ளி விடுதி மாணவ/மாணவிகளுக்கு 4  இணை விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உணவுக்கட்டணம்

ஒரு மாதத்திற்கு பள்ளி விடுதி மாணவ/மாணவிகளுக்கு ரூ.1000/-மும், கல்லூரி விடுதி மாணவ/மாணவிகளுக்கு ரூ.1100/-  ம் உணவுக்கட்டணமாக வழங்கப்படுகிறது.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ. மாணவியர்களுக்கு வருமானம் மற்றும் சாதி பாகுபாட்டை கணக்கில் கொள்ளாமல் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

தகுதிகள்

  1. பிவ, மிபிவ, சீம இனத்தைச் சார்ந்த சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்
  2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000க்கு மிகாமல்  இருத்தல்  வேண்டும்

 

சிறுபான்மையினர் நலம்

சிறுபான்மையினர்களுக்கான  கல்வி   உதவித்தொகை

திட்டத்தின் பெயர் வகுப்பு பாடப்பிரிவு குடும்ப ஆண்டு வருமானம்
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை 9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 1 இலட்சம்
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை 2 இலட்சம்
தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை தொழிற்கல்வி – தொழிற்நுட்ப கல்வி 2.5 இலட்சம்
பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித் தொகை 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பெண்குழந்தைகளுக்கு 2 இலட்சம்

பொதுவான   நிபந்தனைகள்

  1. முந்தைய  ஆண்டு இறுதி தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. மொத்த பயனாளிகளில் 30%  மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவ/மாணவியருக்கு மட்டுமே வழங்கப்படும்.
  4. விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்  வேறு துறையில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றிருத்தல் கூடாது.

 சிறுபான்மையினருக்கான விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா     தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.

தகுதிகள்

  1. 20 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
  2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  3. தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

விடுதிகள்

சிறுபான்மையினத்தைச்சார்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்வி பயில ஏதுவாக கும்பகோணத்தில் அரசு        மகளிர் கல்லூரி விடுதி இயங்கி வருகிறது.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

  1. இஸ்லாமிய மத்த்தைச்சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, முஸ்லிம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
  2. வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
  3. சங்கங்கள் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக 1: 2 என்ற விகிதாச்சாரத்தில் 01.04.2012 முதல் ஆண்டிற்கு ரூ.20.00 இலட்சம் வரை அரசால் இணைமான்யம் வழங்கப்படுகிறது.

கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்

  1. கிறித்துவ மத்த்தைச்சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, கிறித்துவ மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
  2. வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
  3. சங்கங்கள் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு இணையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக 1 : 2 என்ற விகிதாச்சாரத்தில் 01.11.2018 முதல் ஆண்டிற்கு ரூ.20.00 இலட்சம் வரை அரசால் இணைமான்யம் வழங்கப்படுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்

பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள்,  மோதினார்கள், பிலால்கள் மற்றும்  இதர பணியாளர்கள், தாகாக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷாகானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் சமூக. பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்

.எண் நலத்திட்ட உதவிகள் விவரம் உதவித் தொகை (ரூ)
1. விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ்
அ. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை 125000
ஆ. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக் கேற்ப 10000 முதல் 100000 வரை
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 30000
3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000
4 கல்வி உதவித்தொகை
அ. 10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஆ. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000
இ. 11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1000
ஈ. 12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு 1500
உ. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1500
ஊ. முறையான பட்டப்படிப்பு 1500
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பு 1750
எ. முறையான பட்டமேற்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்பு 5000
ஏ. தொழிற்கல்வி பட்டப்படிப்பு 4000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பு 6000
ஐ. தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 6000
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு 8000
ஒ.  ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு 1000
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு 1200
5. திருமண உதவித்தொகை 2000
6. மகப்பேறு உதவித்தொகை
அ. மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம்

(6 மாதங்களுக்கு)

6000
ஆ. கருச்சிதைவு / கருக்கலைப்பு 3000
7. கண் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் 500 (அதிக பட்சம்)
8. முதியோர்  ஓய்வூதியம்  மாதந்தோறும் 1000 (ஒரு மாத்திற்கு)

 

தமிழ்நாடுபிற்படுத்தப்பட்டோர்பொருளாதாரமேம்பாட்டுக்கழகம்(TABCEDCO)

நிதியுதவி அளிக்கப்படும்பல் வேறு தொழில்கள்

  1. சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்
  2. விவசாயம் சார்ந்த உபதொழில்கள்
  3. போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்கள்
  4. கைவினைஞர் மற்றும் மரபு வழிச் சார்ந்த் தொழில்கள்
  5. இளம் தொழிற்பட்டதாரிகள் சுய தொழில் துவங்குதல்

தகுதிகள்

  1. பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3  இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்

  1. பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்
  2. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும்முறை

கடன் விண்ணப்பப் படிவங்கள்   பின்வரும்   அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.

  1. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னை.
  2. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்
  3. டாப்செட்கோவின் இணையதளம்tabcedco.tn.gov.in
  4. கூட்டுறவு சங்கங்களின் மண்டல   இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
  5. கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்.

 

அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன்  சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் /கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
  2. முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து விலைப்புள்ளி ( கொள் முதல் இருந்தால்)
  • திட்ட அறிக்கை ( பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்)
  1. குடும்ப அட்டை ( Ration Card)
  2. ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்)
  3. வங்கிகோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்
  • ஆதார்அட்டை

கடன் வழங்கும் முறை

  • மத்திய கூட்டுறவு வங்கிகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் / நகரகூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் தொகைகள் வழங்கப்படும்.
  • கடன்தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பயனாளியின் செயல்பாடு, தன்மைமற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்து, இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக்குழு ஆய்வு செய்து பரிந்துரைசெய்யும்.

கடன்தொகைக்கான பிணையம் : வங்கிவிதிகளின்படி

கடன் திட்டங்களின் விவரங்கள்:

  1. பொதுகாலக்கடன் திட்டம்:

இத்திட்டத்தின் கீழ் சிறுதொழில் / வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு  கடனுதவி வழங்கப்படுகிறது.

அதிகபட்சகடன்தொகை ரூ. 15 இலட்சம்
மொத்தகடன்தொகையில்பயனாளியின்பங்கு 5%
ஆண்டுவட்டிவிகிதம்:
ரூ. 5 இலட்சம்வரை 6%
ரூ. 5 இலட்சத்திற்கு மேல் 7%
ரூ. 10 இலட்சத்திற்கு மேல் 8%
கடனை திரும்ப செலுத்தும் காலம் 3- 8 ஆண்டுகள்
  1. பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்:

அ. பெண்களுக்கான நுண் கடன் திட்டம் ( மகிளா சம்ரிதியோஜனா)

  • இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சிறுதொழில்   வணிகம்  செய்வதற்கு  கடன்  வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள்  மட்டுமே  அனுமதிக்கப்படுவர்.
  • சுயஉதவிக் குழு  துவங்கி  6  மாதங்கள்  பூர்த்தியாகி  இருத்தல்  வேண்டும்.
  • திட்டஅலுவலர்( மகளிர்திட்டம்) அவர்களால் Grading  செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதிகபட்ச கடன்தொகை ஒரு நபருக்கு ரூ. 1 இலட்சம்
அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 இலட்சம்
ஆண்டுவட்டி விகிதம் 4%
கடனை திரும்ப செலுத்தும் காலம் 4 ஆண்டுகள்

ஆ. பெண்களுக்கானபுதியபொற்காலத்திட்டம்:

பெண்களின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறுவணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது-

அதிகபட்ச கடன் தொகை ரூ. 2 இலட்சம்
ஆண்டு வட்டி விகிதம் 5%
கடனை திரும்ப செலுத்தும் காலம் 3-8 ஆண்டுகள்

3.ஆண்களுக்கான சிறுகடன்திட்டம் :

இத்திட்டத்தின் கீழ்சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20  உறுப்பினர்கள் மட்டுமே  அமனுமதிக்கப்படுவர்.

அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1 இலட்சம்
அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15 இலட்சம்
மொத்தகடன் தொகையில் பயனாளியின் பங்கு 5%
ஆண்டு வட்டி விகிதம் 5%
கடனை திரும்ப செலுத்தும் காலம் 4     ஆண்டுகள்

 

4.கறவைமாடுக்கடன்

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ 30,000/- வீதம்அதிகபட்சம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ 60,000/- கடன் வழங்கப்படுகிறது.

 

ஆண்டுவட்டிவிகிதம் 6%
கடனைதிரும்பசெலுத்தும்காலம் 3ஆண்டுகள்

 

 

 

 

4.சிறுமற்றும் குறுவிவசாயிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்துவதற்காக மானியம் வழங்கும் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த சிறுமற்றும் குறுவிவசாயிகளுக்கு நீர்பாசனவசதி ஏற்படுத்துவதற்காக கூட்டுறவுவங்கிகள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்  மூலம் வங்கிகடன் மற்றும் அதற்கு இணையான அதிகபட்சம் தலாரூ 50,000/- அளவிலான 50 விழுக்காடு அரசுமானியம் வழங்கப்படுகிறது.

 

தமிழ்நாடுசிறுபான்மையினர்பொருளாதாரமேம்பாட்டுக்கழகம்(TAMCO)

டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவித்திட்டங்கள் தொடர்பான பொதுவான தகவல்கள்

  • விண்ணப்பத்தாரர் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில்ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
  • கடன் உதவி வழங்கும் திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி/ நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.
  • புதிதாக தொழில் செய்யவும்அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
  • மனுதாரர் விண்ணப்பம் கூட்டுறவு வங்கி விகிதங்களின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய பரிநதுரையுடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
  • விண்ணப்பங்கள் அனைத்து விகிதத்திலும் முழுமையாக இருக்கும் பட்சத்திலும் கடன்அளிப்பதற்கான அனைத்து விதிமுறைகளை பூர்த்தி செய்யும் பட்சத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , கடன்தொகைகள் சம்மந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பிவைக்கப்படும். வங்கி மூலமாக அக்கடன் தொகை விண்ணப்பத்தாரர்களுக்கு  அளிக்கப்படும்.
  • விண்ணப்பத்தாரர்கள் ,எந்த தொழில் செய்வதற்காக விண்ணப்பித்து கடன் பெற்றார்களோ அந்த தொழிலை செய்வதற்குத்தான் கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும். மாறாக வேறு காரணங்களுக்காக கடன் தொகையை பயன்படுத்தக் கூடாது. தவறான தகவல்கள்அளித்து விண்ணப்பத்தாரர் கடன் உதவிபெற்றது தெரிய வந்தால், அளிக்கப்பட்ட கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, பெற்ற கடன் தொகை மொத்தமாக வசூலிக்கப்படுவதோடு ,அவர் வருங்காலங்களில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் எவ்வித கடன்தொகையும் கோரி  விண்ணப்பிக்க  முடியாதவாறு  நடவடிக்கை எடுக்கப்படும்.
  • செயல்படுத்தப்படும்கடன்திட்டங்கள்

 

கடன் திட்டங்கள் விண்ணப்பிக்கும் இடம்
தனி நபர்கடன் திட்டம் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம்/ மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்/ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகரகூட்டுறவு வங்கி /  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் திட்டம்
கல்விக்கடன்

 

  1. தனிநபர்கடன்திட்டம்

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும் ,தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் கடன் பெறலாம்.

திட்டம் 1 திட்டம் 2
அதிகபட்ச கடன் தொகை ரூ.20,00,000/- அதிகபட்ச கடன் தொகை ரூ.30,00,000/-
வட்டிவிகிதம் (ஆண் (ம) பெண்) 6% (ஆண்டிற்கு) வட்டிவிகிதம் ஆண் பயனாளிகளுக்கு 8% (ஆண்டிற்கு)
வட்டிவிகிதம் பெண் பயனாளிகளுக்கு 6% (ஆண்டிற்கு)
தவணைத் தொகை வட்டியுடன்திரும்ப செலுத்த வேண்டிய காலம் அதிகபட்சம் 5 ஆண்டுகள்(20 காலாண்டு தவணைகளில் ) தவணைத்தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் அதிகபட்சம் 5 ஆண்டுகள் (20 காலாண்டு தவணைகளில் )
குடும்பஆண்டு வருமானம்

1)     நகர்ப்புறமாயின்

2)கிராமப்புறமாயின்

 

 

ரூ.1,20,000/-க்கு மிகாமல்

ரூ.98,000/-க்கு மிகாமல்

குடும்ப ஆண்டு வருமானம்

 

  ரூ.6,00,000/-க்கு மிகாமல்

 

தவணைத் தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்த தவறினால்  5% அபராதவட்டி வசூலிக்கப்படும்.

கடன்  பங்குத்தொகை விவரம் பின்வருமாறு

NMDFC  பங்குத்தொகை                 -90%

TAMCO  பங்குத்தொகை                 -5%

பயனடைவோரின் பங்குத் தொகை   -5%

பயன்பாட்டுக்காலம்

கடன்தொகை பெற்ற மூன்று மாதத்திற்குள் தொழில் தொடங்க வேண்டும்.

  1. சுயஉதவிகுழுக்களுக்கானசிறுகடன்திட்டம்

சிறுபான்மையின பெண்கள் /ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறுவியாபாரம் / சிறுதொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி, கடை, மீன்கடை, மீன்வியாபாரம் ,பூவியாபாரம் ,பலகாரக்கடை தையல்கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்தகடன் பெறமுடியும். பயனாளி , சிறுபான்மை சுய உதவிக்குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். மேலும், அந்த குழுகுறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன்அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு  இருக்க வேண்டும்.

இக்குழுவில், 60 சதவீதத்தினர் சிறுபான்மையினராக இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் /ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ இதர வகுப்பினர்  இடம்  பெற்றிருக்க  வேண்டும்.

சுயஉதவிக் குழுவின் அங்கத்தினர் எண்ணிக்கை

  • சுயஉதவிக் குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்களும் இருத்தல் வேண்டும்.
  • பெண்கள்/ஆண்கள் சிறுபான்மையினர் குழுக்களுக்கு சிறுகடன் வழங்கப்படும். இவற்றில் பெண்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.

 

திட்டம் 1 திட்டம் 2
அதிகபட்ச கடன் தொகை ரூ.50,000/- அதிகபட்ச கடன் தொகை ரூ.1,50,000/-
வட்டிவிகிதம் 7% (ஆண்டிற்கு) வட்டிவிகிதம் ஆண் பயனாளிகளுக்கு 10% (ஆண்டிற்கு)
வட்டிவிகிதம் பெண் பயனாளிகளுக்கு 8% (ஆண்டிற்கு)
தவணைத்தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டியகாலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் (36 மாததவணைகளில் ) தவணைத்தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டியகாலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் (36 மாததவணைகளில் )
குடும்ப ஆண்டு வருமானம்

1)நகர்ப்புறமாயின்

2)கிராமப்புறமாயின்

 ரூ.1,20,000/-க்கு மிகாமல்

ரூ.98,000/-க்கு மிகாமல்

குடும்ப ஆண்டு வருமானம்

 

 ரூ.6,00,000/-க்கு மிகாமல்

 

தவணைத் தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்த தவறினால் 5%  அபராத வட்டி வசூலிக்கப்படும்.

கடன்பங்குத்தொகை விவரம்பின் வருமாறு* தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது

NMDFC  பங்குத்தொகை                 -90%

TAMCO  பங்குத்தொகை                 -5%

பயனடைவோரின் பங்குத்தொகை   -5%

மேற்கண்ட கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

  1. பள்ளிமாற்றுச் சான்றிதழ் / சாதிசான்றிதழ்
  2. வருமானச் சான்றிதழ்
  3. திட்டஅறிக்கை
  4. குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்
  5. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
  6. ஆதார்அட்டை

 

  1. கல்விக்கடன்

சிறுபான்மை மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு  பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக்கடனுதவி வழங்கப்படுகிறது.

தகுதியான கட்டணங்கள்

1.சேர்க்கைக் கட்டணம் / பயிற்றுவிப்புக்கட்டணம்

  1. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்குத்தேவையான உபகரணங்கள்
  2. தேர்வுக்கட்டணம்.
  3. விடுதி மற்றும் உணவுக்கட்டணம்( விடுதியில் தங்கி பயில்பவர்களுக்குமட்டும்)
    திட்டம் 1 திட்டம் 2
    பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறமாயின் –                       ரூ 1,20,000/-

    கிராமப்புறமாயின் –                 ரூ 98,000

    பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு  வருமான வரம்பு ரூ 6,00,000/- மிகாமல்
    தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள்

    (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு)

    ஆண்டிற்கு ரூ 4 இலட்சம் வீதம் அதிக பட்சம்ரூ 20 இலட்சம் வரை தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள்

    (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு

    ஆண்டிற்கு                            ரூ 4 இலட்சம்  வீதம் அதிகபட்சம் ரூ 20 இலட்சம் வரை
    வெளிநாடுகளில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு)

     

    ஆண்டிற்கு  ரூ  6 இலட்சம்வீதம் அதிகபட்சம்ரூ 30 இலட்சம்வரை வெளிநாடுகளில் தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் (அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு ரூ  6 இலட்சம் வீதம் அதிகபட்சம் ரூ 30 இலட்சம் வரை
    வட்டிவிகிதம் ஆண்டிற்கு 3 % வட்டிவிகிதம் (மாணவர்களுக்கு ) ஆண்டிற்கு 8 %
    வட்டிவிகிதம் (மாணவிகளுக்கு ) ஆண்டிற்கு 5 %

     

    கடன்பங்குத்தொகைவிவரம்பின்வருமாறு

    NMDFC  பங்குத்தொகை                 -90%

    TAMCO  பங்குத்தொகை                 -10%

    கல்வி பருவக்காலம் முடிந்த தேதியிலிருந்து அடுத்த6 மாதத்திலிருந்து அல்லது பணியில் அமர்ந்த தேதியிலிருந்து இதில் எது முந்தையதோ அந்த தேதியிலிருந்து அசல் மற்றும் வட்டி தொகை 60 மாத தவணைகளில் வசூலிக்கப்படும்.

     

    விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள்

    1. ஆதார்அட்டை நகல்
    2. சாதி சான்றிதழ் / பள்ளி மாற்று சான்றிதழ் நகல்
    3. வருமான சான்றிதழ் நகல்
    4. இருப்பிட சான்றிதழ் நகல்
    5. உண்மைச்சான்றிதழ் ( Bonafide certificate) நகல்
    6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் ( Original)
    7. மதிப்பெண் சான்றிதழ்நகல்
    8. வங்கி கோரும் இதர ஆவணங்கள் ,கல்விக்கடன் புதுப்பித்தல் இனங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ/ மாணவியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழை வங்கியில் தவறாது சமர்ப்பிக்கவேண்டும்.