Close

மாசு கட்டுப்பாடு வாரியம்

2023062864.png2023062861.jpg

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – தஞ்சாவூர் மாவட்டம்

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விதிகள்:
இவ்வாரியம் பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள், விதிகள் மற்றும் அறிவிப்புகளை செயல்படுத்தும் சட்டப்பூர்வமான ஒழுங்குமுறை அமைப்பாகும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் செயல்படுத்தும் முக்கிய சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் விதிகள் பின்வருமாறு.
1. நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 திருத்தப்பட்டது 1988.
2. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 திருத்தப்பட்டது 1987.
3. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட விதிகள் கீழ்கண்டவாறு
• சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், 1986
• தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 1989.
• பறக்கும் சாம்பல் பயன்படுத்துதல் அறிவிக்கை, 1999
• மின்கலன்கள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2001
• சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006
• கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அறிவிக்கை, 2019
• ஒலி மாசு (ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000
• தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்து கொண்டு செல்லுதல்) விதிகள், 2016
• மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள், 2016
• திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016
• பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016
• மின்னணு கழிவு மேலாண்மை விதிகள், 2016
• கட்டுமானம் மற்றும் இடிமான கழிவு மேலாண்மை விதிகள், 2016
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றிய தகவல்களை (https://tnpcb.gov.in/) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

செயல்பாடுகள்

நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981ன் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியப் பணிகள் பின்வருமாறு:
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களை பொருத்தவரையிலும் மேற்படி சட்டங்கள்/ விதிகளுக்குட்பட்டு
1. இசைவாணைகள் வழங்குதல்,
2. தொழிற்சாலைகளில் இருந்து இசைவாணை கட்டணம், கழிவுநீர் பகுப்பாய்வு கட்டணம் மற்றும் காற்றுபகுப்பாய்வு கட்டணம் வசூலித்தல்.
3. கழிவு மேலாண்மையின் கீழ் அங்கீகாரம் வழங்குதல்.
4. தொழிற்சாலை மாசு தடுப்பு விதிகளுக்குட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல்,
5. கழிவுநீர் மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்தல். (தொழிற்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்)
6. அபாயகரமான திடக்கழிவுகள் கையாளுதல் குறித்து கண்காணித்தல்,
7. மருத்துவ திடக்கழிவுகள் கையாளுதல் குறித்து கண்காணித்தல்,
8. சுற்றுச்சூழல் தொடர்பான புகார்களை விசாரித்து இடர்பாடுகளை களைதல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
9. பொதுமக்களின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு பதில் அளித்தல்.

நிறுவன விளக்கப்படம்

2023062887.jpg

காற்று மாசு கட்டுப்பாடு

பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் தகுந்த காற்று மாசு தடுப்பு சாதனங்கள் அமைத்து தேவையான உயரத்திற்கு புகைப்போக்கி அமைத்து செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கழிவுகளை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வகம் மூலம் பகுத்தாய்வு செய்யப்பட்டு வாரிய தகுதி நிர்ணய அளவிற்குள் வருகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் புகைபோக்கிகளில் தொடர் காற்று கண்காணிப்பு சாதனம் அமைத்து வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள தொடர் கண்காணிப்பு நிலையம் மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்களின் தன்மை, குறியீட்டுத் தர அளவினை மீறும்போது, இம்மையத்தின் ஒலி எழுப்பான் மூலம் எச்சரிக்கை மணி ஒலிப்பதோடு காற்றின் தன்மை அளவு மீறும்போது தொழிற்சாலைகளுக்கு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தானாக ஒலி அனுப்பும் எச்சரிக்கை மணியும் அனைத்துத் தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீர் மாசு கட்டுப்பாடு

கழிவுநீர் வெளியேற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் தங்கள் வளாகத்திற்குள் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகள் இவ்வலுவலக பொறியாளர்களால் அவ்வப்போது சேகரிக்கப்பட்டு வாரிய பகுப்பாய்வு ஆய்வகத்தில் கழிவுநீர் தரநிலைகளில் இணக்கத்தை சரிபார்க்க பகுப்பாய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தொழிற்சாலை வளாகத்திற்குள் மரம் வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளும் தொழிற்சாலையில் மொத்த பரப்பளவில் 25-33 சதவிகித பரப்பளவில் மரங்கள் வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று மற்றும் நீரின் தரத்தை கண்காணித்தல்

• தொடர் காற்று தர கண்காணிக்கும் நிலையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகம், சென்னை மற்றும் மத்திய மாசு
கட்டுப்பாடு வாரியத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர் காற்று தர கண்காணிக்கும் நிலையமானது தற்போது மாவட்ட வாரிய அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
• தேசிய காற்றுத்தர ஆய்வுமையங்களின் மூலமாக பெருநகரங்களில் உள்ள காற்றின் தர அளவீடுகளையும், காற்றில் கலந்துள்ள மாசு படிந்துள்ள வாயுக்களான (கந்தகடைஆக்ஸைடு, நைட்ரஸ்ஆக்ஸைடு, கார்பன்-டைஆக்ஸைடு) ஆகிய மாசு ஏற்படுத்தும் வாயுக்களின் அளவீடுகளின் தரத்தினை ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு மிகாமல் இருக்குமாறு கண்காணிக்கப்படுகிறது.
• ஆற்று நீர் மாதிரிகளை மாதந்தோறும் சேகரித்து மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு (சேலம்) அனுப்பி அதன் மூலம் நீர்நிலைகளில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் அளவின் தரத்தினை நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளில் இருப்பதை உறுதி செய்யப்படுகிறது.
• அதிக அளவு காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கிகளில் காற்றின் தர அளவுகளை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் உள்ள காற்று தர கண்காணிப்பு மையம் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
• மேலும் 24X7 மணி நேர காற்றின் தர அளவீடுகளையும் நகரின் மையப்பகுதியில் ஆய்வு உபகரணங்களை நிறுவி தொடர் காற்று கணிப்பின் மூலம் காற்று தரமானது உரிய முறையில் கண்காணிக்கப்படுகிறது.
• அதிக அளவு நீர் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் தர அளவுகளை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள நீர் தர கண்காணிப்பு மையம் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அலுவலக முகவரி
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம்
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,
எண்.23, சிட்கோ தொழில் வளாகம்,
உழவர் சந்தை எதிரில்,
நாஞ்சிக்கோட்டை சாலை,
தஞ்சாவூர் – 613 006.
தொலைபேசி எண். 04362-256558