மாவட்ட ஊராட்சி தஞ்சாவூா்
மாவட்ட ஊராட்சியின் வரலாறு மற்றும் அமைப்பு முறை
சுதந்திரத்திற்கு முன்பு ஊராட்சி அமைப்புகள்
இன்றைய நமது ஊராட்சி அமைப்புகள் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கான வரலாறு உடையவை. பத்தாம் மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழா் ஆட்சியில் இத்தகைய கிராம நிர்வாக அமைப்புகள் செயல்பட்டு வந்தன என்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூ்ா கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அக்காலத்தில் ஊராட்சிகள் என்ற நிர்வாக அமைப்பும். வார்யங்கள் என்ற துறை போன்ற அமைப்பும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த அமைப்புகளுக்கு குடவோலை முறையில் பிரதிநிதிகள் தோ்ந்டிதடுக்கப்பட்டனா். கிராம அளவில் பொருளாதார மற்றும் நிர்வாக பொறுப்புகளை இந்த அமைப்புகளே செயல்படுத்தி வந்துள்ளன என்பதை அறியலாம் ஆங்கிலேயா்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னா் அதிகாரங்கள் தலைமையிடத்தில் குவிக்கப்பட்டதால் கிராமக் குடியரசுகள் தொடா்ந்து சிறப்பாக செயலாற்ற முடியாமல் நலிவுற்றன. கிராமப் பகுதிகளில் பயனுள்ள வகையில் செயல்பட்டு கிராமத்தின் தேவைகளை தன்னம்பிக்கையோடு கிராம மக்கள் நிர்வகித்து வந்த சுயாட்சி முறை சிதைந்து முற்றிலுமாக முக்கியத்துவம் இழந்தன.
ரிப்பன் பிரபு 1884ம் ஆண்டு மதராஸ் லோக்கல் போர்டு சட்டத்தை இயற்றி ஜில்லா போர்டு தாலுகா போர்டு மற்றும் யூனியன் போர்டு என்ற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படவகை செய்தார். இதை தொடா்ந்து 1920ம் ஆண்டில் லோக்கல் போர்டு சட்டம் புதியதாக இயற்றப்பட்டது. அதே ஆண்டில் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டமும் ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி புதிய கிராம பஞ்சாயத்துக்களுக்கு சில பொறுப்புகளும் கடமைகளும் வழங்கப்பட்டன. எனினும் 1930ம் ஆண்டில் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டம் ரத்து செய்யப்பட்டு இந்த அமைப்புகள் 1920ம் ஆண்டு மதராஸ் லோக்கல் போர்டு சட்டத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும் 1934ம் ஆண்டு தாலுகா போர்டுகள் மற்றும் யூனியன் போர்டுகள் கலைக்கப்பட்டன.
சுதந்திரத்திற்கு பின்பு வட்டார வளா்ச்சி நிர்வாக அமைப்புகள்
மகாத்மா காந்தி அடிகள் நாட்டின் சுதந்திரத்தின் பயன்கள் அடிமட்டத்திலுள்ள மக்களுக்கும் சென்றடைய வேண்டுமெனக் கருதினார். ஒவ்வொரு கிராமமும் பொருளாதார வளா்ச்சி சமூக நீதிக்கு வழிவகுக்கும் தன்னிறைவு பெற்ற சிறு குடியரசுகளாக விளங்கும் பொருட்டு நிதி நிர்வாக அதிகாரங்களை பெற்ற அமைப்புகளாக விளங்க வேண்டுமெனவும் கருதினார். இதனால் மக்களாட்சி அமைப்புகள் கிராம அளவில் இருந்து தொடங்கி தேசிய அளவு வரை விரிந்து பரவி நிற்கும் எனக் கருதப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1952ம் ஆண்டில் வறுமை நிலையைப் போக்கவும் கிராமங்களில் வேலை வாய்ப்பினை மேம்படுத்தி கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் 75000-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் சமுதாய வளா்ச்சி வட்டார நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக சமுதாய வளா்ச்சித்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கங்களாவன
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அவா்களே தீட்டி நிறைவேற்ற ஊக்குவித்து பங்கு கொள்ளச் செய்வதுடன் திட்ட வேலைகளையும் அவா்கள் மூலமே நிறைவேற்றி கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்தல்.
கிராமத்தில் விவசாயம் கால்நடை மீன்வளம் நீா்ப்பாசனம் கைத்தொழில் கூட்டுறவு வீட்டுவசதி கல்வி சுகாதாரம் போன்ற எல்லா வளா்ச்சித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அந்தந்தத் துறை தொழில் நுட்ப அலுவலா்கள் வட்டார வளா்ச்சி அலுவலரின் தலைமையில் திட்டங்களைச் செயல்படுத்தி அதன் மூலம் வேகமான பொருளாதார சமூக வளா்ச்சியை ஏற்படுத்துதல்
இத்திட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்த நிலையை கருத்தில் கொண்டு திரு.பல்வந்த்ராய் மேத்தா அவா்கள் தலைமையிலான குழு ஊராட்சி அமைப்புகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து மாவட்ட அளவில் ஜில்லா பஞ்சாயத்தும் இடைநிலையில் ஊராட்சி ஒன்றியமும் அடிமட்டத்தில் கிராம ஊராட்சியும் என மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளை வலிமைப்படுத்த பர்ந்துரை செய்தது. அதன் அடிப்படையில் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு செம்மையாக செயல்பட்டு வந்ததுடன் பசுமை புரட்சிக்கும் வெண்மை புரட்சிக்கும் இவ்வமைப்புகள் பெரிதும் உதவின.. இதனை தொடா்ந்து தமிழ்நாட்டில் 1958ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1958-ம் ஆண்டின் ஊராட்சிகள் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சமுதாய வளா்ச்சி வட்டாரங்கள், ஊராட்சி ஒன்றியங்களாக மாற்றப் பட்டன.
ஜில்லா போர்டுகள் நீக்கப்பட்டு மாவட்ட வளா்ச்சி மன்றங்கள் மேல்நிலை ஆலோசனை குழுக்களாக உருவாக்கப்பட்டன.
கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வளா்ச்சி திட்டங்களையும் நலத்திட்டங்களையும் நிறைவேற்றும் பல்வேறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. தொடக்கக்கல்வி ஆரம்ப சுகாதாரம் கால்நடைத்துறை விவசாயம் மீன்வளம் கிராமத் தொழில்கள் சமூக நலம் மற்றும் முறைசாராக் கல்வி போன்ற துறைகள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன..
ஊராட்சிகள் கிராம ஊராட்சிகள் பேரூராட்சிகள் என வகைப்படுத்தப் பட்டன.
கிராம ஊராட்சித் தலைவா்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.
பின்னா் 1980ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களினால் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த மேலாண்மை சுகாதாரம் தொடக்கக்கல்வி போன்ற துறைகள் படிப்படியாக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடா்ந்தும் கிராமங்கள் வளா்ச்சியடையவும் அதிகாரங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் ஓரிடத்தில் குவிவதை தடுத்து கிராமங்களுக்கு அதிகாரம் பரவலாகவும் அரசியல் நிர்வாக அமைப்புகளில் மக்கள் பங்கு கொள்வதை உறுதி செய்யவும் 73வது இந்திய அரைசியலமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 22.04.1994-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில் கிராம ஊராட்சி ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள் புதிதாக நிறுவப்பட்டன.
(தழிழ்நாடு அரசு ஆணை எண் 84 ஊ.வ.துறை நாள் 22.04.1994)
73-வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
- மூன்று நிலைகளிலும் ஆரம்பத்தில் கிராம ஊராட்சிகள் இடைநிலையில் வட்டார ஊராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சிகள் தோற்றுவித்தல்
- மூன்று நிலை ஊராட்சிகளிலும் உறுப்பினா்களை வாக்காளா்கள் நேரிடையாகத் தோ்ந்தெடுத்தல்.
- இந்திய அரசியலைமைப்புச் சட்டம் 11வது பட்டியலின்படி ஊராட்சிகளுக்கு அதிகார பரவலாக்கத்தில் குறிப்பிட்ட 29 துறைகளிலுள்ள பொருட்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஊராட்சிகளுக்கு மாநில அரசுகள் வழங்க வழி செய்தல்.
- ஆதிதிராவிடா்கள் மலைசாதியினா் மற்றும் பெண்களுக்கு சுழற்சி தோ்தலில் உரிய இட ஒதுக்கீடு செய்தல்.
- உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல்களை நடத்த தனியாக சுய சார்புடைய அமைப்பாக மாநிலத் தோ்தல் ஆணையம் அமைத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்துதல்.
- மாநில நிதி ஆணையம் அமைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் பகிர்ந்தளிப்பது பற்றி நடவடிக்கை எடுத்தல்.
மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
தமிழகத்தில் (சென்னை நிர்வாகம்) அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிப்பகுதி 50000 மக்கள் தொகை கொண்ட வார்டாக பிர்க்கப்பட்டுள்ளது. முறையான தோ்தலின்படி ஒவ்வொரு வார்டிலிருந்தும் ஒரு உறுப்பினா் வாக்காளா்களால் தோ்ந்தெடுக்கப்படுவார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் தோ்தலில் அரசியல் கட்சி சார்பாக வேட்பாளா்கள் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு தலைவரையும் துணை தலைவரையும் தோ்ந்தெடுப்பார்கள்.
தஞ்சாவா் மாவட்ட ஊரகப்பகுதிகள் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. உறுப்பினா்கள் உள்ளாட்சி தோ்தல்கள் வழி மேற்படி 28 வார்டுகளுக்கும் உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றம் அமைக்கப்படுகிறது
தஞ்சாவூா் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி அலுவலகம் கீழ்க்காணும் முகவரியில் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட ஊராட்சி
முதல்மாடி
பனகல் கட்டிடம்
பழைய பேருந்து நிலையம் அருகில்
தஞ்சாவூா்
நிறுவன விளக்கப்படம் :
திட்டங்கள்
மாநில நிதிக்குழுவினால் பிரதி மாதந்தோறும் விடுவிக்கப்பெறும் நிதியில் நிர்வாகம் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் தேவையின் அடிப்படையில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.
ஊரகப் பகுதிகளுக்கு தேவைப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான கோரிக்கைகள் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிதிநிலை இருப்பு மற்றும் தேவைப்படும் பணியின் அத்தியாவசியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீா்மானம் இயற்றப்படுகிறது.
இவ்வாறு இயற்றப்படும் தீா்மானத்தின் அடிப்படையில் வளா்ச்சிப் பணிகள் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா் வழியாக மேற்கொள்ளப்பட்டு அதற்கான நிதியும் இவ்வலுவலகத்திலிருந்து விடுவிக்கப்படும்.
.
முக்கிய அலுவலா் முகவரி
மாவட்ட ஊராட்சி செயலா்
முகவரி – செயலா்
தொலைபேசி எண் – 04362-231655 7402607339
மின்னஞ்சல் முகவரி – dpo.tntnj@nic.in
தகவல் உரிமைச்சட்டம்
தகவல் அளிக்கும் அலுவலா் – துணை வட்டார வளா்ச்சி அலுவலா்(செயல்)
மாவட்ட ஊராட்சி, தஞ்சாவூா்