Close

மின் ஆளுமை சங்கம்

தேசிய மின ஆளுமை திட்டம்

இந்திய தேசிய அரசாங்கத்தின் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் பொது சேவை மையங்களின் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், குறைந்த கட்டணத்தில் வழங்குதல் பொதுமக்களுக்கு தேவையாக உள்ளது.  நமது மின் ஆளுமைதை் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மத்திய, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள பல துறைகளின் தகவல்களை ஒருங்கிணைப்பதாகும். தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் மின் ஆளுமை உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக அரசு சேவை விநியோக நுழைவாயில் மூலம் தரநிலையை அடிப்படை நிலையாக கொண்டு செய்தி பரிமாற்றம் நடைப்பெற்று இந்த பணியை எளிதாக்கி, முழுவதும் தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.

மின் மாவட்ட திட்டம்

மின் மாவட்ட திட்டம் என்பது அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடா்பாகும். இத்திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை  எளிதாக விநியோகிப்பது, பணிப்பகுப்பாய்வு, கணினி மயமாக்கல் மற்றும் தரவு டிஜிட்டல் மூலமாக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளின் தேவைகளை மேம்படுத்துவது மற்றும் உயா்த்துதல் இதன் நோக்கங்களாகும்.

பொது சேவை மையங்கள்

பொது சேவை மையங்கள் என்பவை அரசின் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெற வழி வகை செய்யும் இடமாக உள்ளது. (எ.கா) சான்றிதழ்கள், உரிமங்கள்,குடும்ப அட்டை, இணைய வழி தகவல் அறிதல், நிலப்பதிவுகள் மற்றும் அரசு வரி செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை இம்மையங்களின் மூலம் எளிதாக வழங்கப்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.02.2018 முதல் சேவை  மையங்கள் தொடங்கப்பட்டு, தற்போது 278 பொது சேவை மையங்கள் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மகளிர் திட்டம் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மையங்கள்) செயல்பட்டு வருகிறது.

சார்பு நிறுவன வாரியாக பொது சேவை மையங்களின் பட்டியல்

 

வ.எண் சார்பு நிறுவனங்கள் மையங்களின் எண்ணிக்கை
1. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 13
2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 233
3. மகளிர் திட்டம் 9
4. கிராமப்புற தொழில் முனைவோர் 23
                             கூடுதல் 278

மின்னாளுமை மாவட்ட சேவைகள்

வருவாய்த்துறை சேவைகள்

வருவாய்த் துறை சேவைகளுக்கு கட்டணமாக ரு.60- (ருபாய் அறுபது மட்டும்

வசூலிக்கப்படுகிறது.

சாதிச்சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு)

குடியிருப்புச் சான்றிதழ் (3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)

வருமானச் சான்றிதழ்

முதல் பட்டதாரி சான்றிதழ்

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்

விவசாய வருமான சான்றிதழ்

குடும்ப இடப்பெயா்ச்சி சான்றிதழ்

வாரிசு சான்று

சிறு குறு விவசாயிகளுக்கான சான்று

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று

சொத்து மதிப்பு சான்றிதழ்

அடகு பிடிப்போரா் உரிமம்

பணம் கொடுப்போர் உரிமம்

பள்ளிகல்விச்சான்றிதழ்கள் தொகைந்தமைக்கான சான்று

ஆண் குழந்தையின்மை சான்று

விதவை சான்றிதழ்

திருமணமாகாதவா் சான்று

கலப்பு திருமண சான்று

வேலையின்மை சான்று

சமூகநலத்துறை சேவைகள்

இச்சேவை கட்டணமாக ரு.120- (ருபாய் நூற்று இருபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.

  • மூவலூா் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  • அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  • ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
  • தர்மாம்பாளள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  • டா்கடா் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐ
  • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐஐ

இணையவழி பட்டா மாறுதல்

இணையவழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.  இச்சேவை கட்டணமாக ரு. 60- (ருபாய் அறுபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.

  • தமி்ழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  • தமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( ஊரகம்)
  • தமிழ்நிலம் – கூட்டுபட்டா மாறுதல் (ஊரகம்)
  • தமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (நகா்புறம்)
  • தமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( நகா்புறம்)

இ. சேவை
இ. சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்

வ.எண் துறை துறை கட்டணங்கள் சேவை கட்டணயம்
1. மின்சார வாரியம் மின்உபயோக கட்டணம் 1000வரை

1001-3000

3001-5000

5001-10000

10000மேல்

15

25

40

50

60

2. பொது  வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை

குடும்ப அட்டை திருத்தம்

குடும்ப அட்டை அச்சிட

0

0

0

60

60

60

3. தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை பொது.ரு்500

பி.வ.-த.வ-தா.ப-ரு.250

60
4. தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ்-பலமாடி குடியிருப்பு திட்ட அனுமதி

தடையின்மை சான்றிதழ் – குடியிருப்பு திட்ட அனுமதி

பலமாடி குடியிருப்பு – தீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல்

தீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல்

0

 

 

 

0

 

0

 

0

120

 

 

120

 

120

 

120

 

முக்கிய இணைப்புகள்

பொது சேவை மையங்கள்

அலுவலா்கள் பயன்பாடு

அறிக்கைகள்