சரஸ்வதி மகால் நூலகம்
வழிகாட்டுதல்சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளா்த்தனா். மராத்திய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.
இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
திருச்சி விமான நிலையம் அருகிலுள்ளது. திருச்சியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக தஞ்சாவூா் வந்தடையலாம்.
தொடர்வண்டி வழியாக
தஞ்சாவூா் நகரில் ரயில் நிலையம் உள்ளது.
சாலை வழியாக
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் - சரஸ்வதி மகால் நூலகம் (0.5km)