Close

தஞ்சாவூர் மாநகராட்சி

அறிமுகம்

தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் தலைநகரமாக விளங்குகிறது. காவேரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் முக்கிய விவசாய பகுதியாகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் 100 47 அச்ச ரேகையிலும், 790 08 பூமத்திய ரேகையிலும் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளையும், 36.33 சதுர கிலோ மீட்ட பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது. மேலும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 222619 மக்கள்தொகையை கொண்டுள்ளது.

தஞ்சாவூர் நகராட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 110 விதியின்கீழ் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.23, நாள்.17.02.2014ன்படி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, 19.02.2014 முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேற்படி மாநகராட்சியாக அறிவிக்கும்போது ஒரு பேரூராட்சியும், 11 ஊராட்சிகளும் இந்த மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும், இணைக்கப்பட்ட பின் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டர் கொண்டதாகவும்,மொத்த மக்கள்தொகை 351655 ஆகவும், அதனுடைய ஆண்டு வருவாய் ரூ.6016.99 இலட்சமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம்

நபர் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 135 எல்பிசிடி என்ற அளவிலும், இம்மாநகராட்சியின் மக்கள்தொகை அடிப்படையிலும் தேவையான குடிநீர் 30.05 எம்எல்டி ஆகும். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கொள்ளிடம் ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து 20 எம்எல்டி நீரும், 137 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 7.50 எம்எல்டி நீரும் பெறப்பட்டு, 123 எல்பிசிடி என்ற அளவில் நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் வீதம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் திருமானூரில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையம் வரை 19.00 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் பிரதான குழாயும், 114.75 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 19 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 142 எண்ணிக்கையிலான பவர் பம்புகளும், 219 எண்ணிக்கையிலான மினி பவர் பம்புகளும் உள்ளன. இம்மாநகராட்சியில் உள்ள மொத்த குடிநீர் பகிர்மான குழாய்களின் நீளம் 334.70 கிலோ மீட்டர் ஆகும். மேலும் குடிநீர் இணைப்பிற்கான மாதாந்திர கட்டணம் வீடுகளுக்கு ரூ.75 எனவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.150 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு, இதுநாள்வரை 29200 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.262.52 இலட்சம் கேட்பு எழுப்பப்பட்டுள்ளது.

சாலைகள்

தஞ்சாவூர் மாநகராட்சியால் 302.441 கிலோ மீட்டர் சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 250.515 கிலோ மீட்டர் தார் சாலையும், 48.54 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலையும், 3.326 கிலோ மீட்டர் WBM சாலையும் உள்ளது. மேற்படி அனைத்து சாலைகளும் தமிழ்நாடு ஊரக சாலைகள் அபிவிருத்தி திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடைவெளி நிரப்பும் திட்டநிதி மற்றும் பிற திட்டங்களின்கீ மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தெருவிளக்கு

10861 தெருவிளக்குகள் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ளது. 1250 எண்ணிக்கையிலான 250 வாட்ஸ் சோடியம் விளக்குகளும், 191 எண்ணிக்கையிலான 400 வாட்ஸ் சோடியம் விளக்குகளும், 400 வாட்ஸ் மெட்டல் ஹலாய்டு விளக்குகளும் மற்றும் 285 எண்ணிக்கையிலான 72 வாட்ஸ் LED Fittings உள்ளன. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி 7173 எண்ணிக்கையிலான 40 வாட்ஸ் டியூப் லைட், 20 வாட்ஸ் LED விளக்குகளாகவும், 110 எண்ணிக்கையிலான 70 வாட்ஸ் கோடியம் விளக்குகள் மற்றும் 362 எண்ணிக்கையிலான 46-85 வாட்ஸ் CFL விளக்குகள் ஆகியவை 40 வாட்ஸ் LED விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. மேற்படி அனைத்து தெருவிளக்குகளும் சபரி எலெக்ட்ரிக்கல்ஸ், சென்னை என்ற தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தெருவிளக்குகளையும் தானியங்கி முறையில் ஒரே நேரத்தில் On/Off செய்திட தனித்தனி தெருவிளக்கு கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம்

இம்மாநகராட்சியில் 13 எண்ணிக்கையிலான துப்புரவு ஆய்வாளர்களும், 17 எண்ணிக்கையிலான துப்புரவு பணி மேற்பார்வையாளர்களும், 403 எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களும், 250 எண்ணிக்கையிலான தனியார் துப்புரவு பணியாளர்களும் உள்ளனர். மேலும் 2 எண்ணிக்கையிலான JCB வாகனம், 1 எண்ணிக்கையிலான டம்பர் பிளேசர் வாகனம், 4 எண்ணிக்கையிலான காம்பாக்டர் வாகனம், 7 எண்ணிக்கையிலான டிப்பர் லாரிகள், 2 எண்ணிக்கையிலான டிப்பர் டிராக்டர், 4 எண்ணிக்கையிலான மினி லாரிகள், 9 எண்ணிக்கையிலான மினி ஆட்டோ மற்றும் 5 எண்ணிக்கையிலான போர்டர் ஆட்டோக்கள் சுகாதாராப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

திறந்தவெளி மலம் கழித்தலை ஒழித்தல்

தஞ்சாவூர் மாநகராட்சியில் 66 எண்ணிக்கையிலான குடிசைப்பகுதிகள் உள்ளன. இவற்றின் மக்கள்தொகை 16325 ஆகும். மேற்படி குடிசைப்பகுதி மக்களால் 64 எண்ணிக்கையிலான சமுதாயக் கழிப்பிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரமாக 10.02.2018 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு

இம்மாநகராட்சியில் 2315 எண்ணிக்கையிலான அரசு கட்டிடங்களும், 78136 எண்ணிக்கையிலான தனியார் கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் 455 அரசு கட்டிடங்களிலும், 69607 எண்ணிக்கையிலான தனியார் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இம்மாநகராட்சியில் உள்ள 87.08 சதவீத கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை

இம்மாநகராட்சியில் மொத்தமாக 124 MT குப்பைகள் உருவாகிறது. இவற்றில் 116 MT குப்பைகள் பொது சுகாதாரப்பிரிவு வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. இம்மாநகராட்சியில் 20.23 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. 225 எண்ணிக்கையிலான Push Carts வாகனங்கள் முதன்மை சேகரிப்பு பணிக்கும், 20 எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் மற்றும் 14 எண்ணிக்கையிலான ஆட்டோக்களும் இரண்டாம் நிலை சேகரிப்பு பணிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ரூ.737.96 இலட்சம் மதிப்பீட்டில் Sanitary Land Fill அமைக்கும் பணியும், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கான இயந்திரங்கள் மற்றும் அதற்கான அரங்கு அமைக்கும் பணியும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள Bio-Methanitation Project முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் நிலையில் உள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டம்

இம்மாநகராட்சிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.720, நாள்.30.12.2000ன்படி பாதாள சாக்கடை திட்டம் வழங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணி மார்ச் 2015 வரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிப்பு செய்யப்பட்டு ஏப்ரல் 2015ல் மாநகராட்சியில் ஒப்படைப்பு செய்யப்பட்டது. தற்போது பாதாள சாக்கடை பராமரிப்பு பணி மாதத்திற்கு ரூ.17.00 இலட்சத்தில் வி.பி.அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 30000 எண்ணிக்கையிலான இணைப்புகளில் இதுவரை 27889 எண்ணிக்கையிலான இணைப்புகள் வழஙகப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 42.00 ஏக்கர் பரப்பளவில் 28.05 MLD கொள்ளளவு கொண்ட ASP Technology முறையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சமுத்திரம் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5 எண்ணிக்கையிலான கழிவு நீரேற்று நிலையங்களும், 12 எண்ணிக்கையிலான கழிவு நீருந்து நிலையங்களும், 10059 எண்ணிக்கையிலான ஆள்இறங்கு குழிகளும், 258.79 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை பகிர்மான குழாய்களும், 6.030 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடை இணைப்பிற்கான மாதாந்திர கட்டணம் ரூ.75 எனவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.150 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.213.19 இலட்சம் கேட்பு எழுப்பப்பட்டுள்ளது.

AMRUT திட்டம்

1)குடிநீர் விநியோகம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 எண்ணிக்கையிலான வார்டுகளையும் குடிநீர் அமைப்பைப் பொறுத்து 19 எண்ணிக்கையிலான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 19 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கொண்டுள்ளது. நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 135 எல்பிசிடி என்ற அளவிலும், கொள்ளிடம் ஆற்றில் திருமானூரில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமும் 123.00 எல்பிசிடி என்ற அளவில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் (MA2) அரசாணை எண்.GO(D)No.281, நாள்.05.05.2015ன்படி AMRUT 2015-16 திட்டத்தின்கீழ் ரூ.4814.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி திட்டநிதியில் இந்திய அரசின் பங்குத்தொகை ரூ.2407.00 இலட்சம் எனவும், தமிழ்நாடு அரசின் பங்குத்தொகை ரூ.962.00 இலட்சம் எனவும், IUDM திட்டத்தின்கீழ் ரூ.1000.00 இலட்சம் எனவும் மற்றும் மாநகராட்சியின் பங்குத்தொகை ரூ.445.00 இலட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 7 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி, 26.95 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் பிரதான குழாய் புதுப்பிக்கும் பணி மற்றும் 46.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் மாற்றியமைக்கும் பணி, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் SCADA அமைக்கும் பணி மற்றும் மின்குளோரினேசன் செய்யும் பணிக்கான கருவிகள் பொருத்தும் பணி ஆகியவற்றிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியினை மேற்கொள்ள M/s.KEYEM Engineering Enterprises என்ற நிறுவனத்தின் மூலம் ரூ.5294.90 இலட்சம் மதிப்பீட்டில் 18 மாதத்தில் முடிப்பதற்கு வேலை உத்திரவு வழஙகப்பட்டு, 30.06.2016 அன்று பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேற்படி பணியில் 85 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் நிலையில் உள்ளது.

2) பூங்கா மேம்பாட்டு பணிகள்

இம்மாநகராட்சியில் 144 எண்ணிக்கையிலான பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 19 எண்ணிக்கையிலன பூங்காக்கள் நகர் ஊரமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

AMRUT 2015-16 திட்டத்தின் கீழ் 3 எண்ணிக்கையிலான பூங்காக்கள் மேம்பாடு செய்யும் பணிகளுக்கு ரூ.214.00 இலட்சம் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிஞ்சி மற்றும் பழைய வீட்டுவசதி வாரிய பூங்கா மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அருளானந்தம்மாள் நகர் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது.

AMRUT 2016-17 திட்டத்தின் கீழ் 6 எண்ணிக்கையிலான பூங்காக்கள் மேம்பாடு செய்யும் பணிகளுக்கு ரூ.264.00 இலட்சம் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கே.எம்.எஸ் நகர், ரயில் நகர், ஸ்ரீராம் நகர் கூட்டுறவு காலனி, அருளானந்த நக 8வது தெரு, சாந்தி நகர் – 1 மற்றும் சாந்தி நகர் – 2 ஆகிய அனைத்து பூங்கா மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

AMRUT 2017-20 திட்டத்தின் கீழ் 4 எண்ணிக்கையிலான பூங்காக்கள் மேம்பாடு செய்யும் பணிகளுக்கு ரூ.308.60 இலட்சம் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முல்லை நகர், சத்ய கிருஷ்ணா நகர், ராயல் சிட்டி மற்றும் அலமேலு நகர் ஆகிய அனைத்து பூங்கா மேம்பாட்டு பணிகளுக்கும் வேலை உத்திரவு வழங்கப்பட்டு பணி துவங்கும் நிலையில் உள்ளது.

சீர்மிகு நகரம்

இந்திய அரசின் முதன்மை முயற்சியான சீர்மிகு நகரம் கொள்கை (Smart City Mission) ஜீன் 25, 2015 நகர்ப்புற மேம்பாட்டுத்துறையினரால் மாநில அரநுகளின் ஓத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 சீர்மிகு நகரங்களை நாடு முழுவதும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, முக்கிய உள்கட்டமைப்புகளை வழங்கும் நகரங்களை ஊக்குவிப்பதும் மற்றும் அதன் குடிமக்களுக்கு ஓரு ஓழுக்கமான வாழ்க்கைத்தரத்தை வழங்குவதும், சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் மற்றும் “ஸ்மார்ட்” தீர்வுகளை உருவாக்கி கொடுப்பதும், சீர்மிகு நகரத்தின் நோக்கம். இந்த சீர்மிகு நகரங்களின் கொள்கை மற்ற நகரங்களுக்கு ஓரு ஓளி வீடுபோல் செயல்பட ஏற்றதாக உருவாக்கப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி சீர்மிகு நகரம் (Smart City) போட்டியில் இரண்டாம் சுற்றில் தஞ்சாவூர்தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 12 சீர்மிகு நகரங்களில் ஓன்றாக தேர்வு செய்யப்பட்டது. தஞ்சாவூருக்கு “பகுதி சாந்த அபிவிருத்தி (ADB)  என்ற முன்மாதிரியை மனதில் கொண்டு இவ்வூரில் உள்ள பகுதிகளை வகைப்படுத்தி சுமார் 12 துறைகளின் கீழ் மேம்பாடு பணிகள் வரையறுக்கப்பட்டன.

தஞ்சாவூரில் அடையாளம்  காணப்பட்ட ADB பகுதி  முக்கியமான பழைய நகரத்தில் உள்ள 2.6 சதுர கிலோமீட்டர் அளவை கொண்டது. கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு பகுதி அகழியால் சூழப்பட்டும், தெற்கில் ரயில் பாதையாலும் சூழப்பட்டுள்ளது. இச்சீர்மிகு நகரத்தின் அபிவிருத்திக்காக 1289.50 கோடி ருபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்க்கண்ட முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ADB பகுதியின் திட்டங்கள் :

  • அகழி மற்றும் அதன் சுற்றிவுள்ள பகுதிகளை மேம்படுத்துதல்
  • சிவகங்கை பூங்காவின் சீரமைப்பு மற்றும் சிவகங்கை குளம், அய்யன் குளம் மற்றும் சாமந்தான் னகுளம் மறுசீரமைத்தல்.
  • ராஜப்பா பூங்காவை மேம்படுத்துதல்.
  • பெத்தண்ணன் கலையரங்கத்தை திறந்தவெளி கலையரங்கமாக மாற்றுதல்.
  • பழைய ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரண்மனை போன்ற பாரம்பரிய கட்டிடஙகளை பாதுகாத்தல்.
  • காமராஜ் மற்றும் சரபோஜி சந்தைகளாக மாற்றுதல்.
  • 10 சாலைகளை சீர்மிகு சாலையாக மாற்றுதல்.
  • பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றுதல்.
  • திருவள்ளுவர் திரையரங்கத்தை வணிக வளாகமாக உருவாக்குதல்.

முழு நகரப்பகுதியின் திட்டங்கள் :

  • ஓருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுலா செயலி
  • காற்று மாசுதர கண்காணிப்பு அமைப்பு.
  • அரசாங்க கட்டிடங்கள் மீது சூய தகடுகள் பொருத்துதல்.
  • குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தல்.

தஞ்சாவூர் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதால், சீர்மிகு நகரத்திற்கான பார்வை இந்நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தி தமிழ்நாட்டின் கலாச்சார முலதனத்தை வளப்படுத்தி, இந்நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைகள் தொடங்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டங்கள்

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்காக குடிநீ வழங்கல், பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் கலந்தாலோசகர் (M/s. Shah Consultancy) நிறுவனம் TNUIFSL முலம் நியமிக்கப்பட்டு தற்போது இறுதி விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டம்
தஞ்சாவூர் நகரம் தற்போதுள்ள மாநகராட்சி பகுதிகள் – மதிப்பீட்டு தொகை ரூ.19400.00 இலட்சம்

  1. தலைமை நீரேற்று நிலையம், பிரதான கிணறு, நீருந்து குழாய், பொது கிணறு மற்றும் நீரேற்று நிலையம் – ரூ.5520.48 இலட்சம்
  2. பொது கிணறு முதல் ஓக்கக்குடி கிராமம் வரை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் – ரூ.5312.65 இலட்சம்
  3. நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதான குழாய் பணிகள் – ரூ.1129.37 இலட்சம்
  4. பகிர்மான குழாய் மற்றும் SCADA அமைக்கும் பணிகள் – ரூ.5425.17 இலட்சம்
  5. இதர பணிகள் (மின் பணி பராமரிப்பு, இதர செலவினம் மற்றும தொழிலாளர் நல நிதிகள்) – ரூ.2012.33 இலட்சம்

மாநகராட்சியுடன் இணையும் பகுதிக்கான – மதிப்பீட்டு தொகை ரூ.26700.00 இலட்சம்

  1. தலைமை நீரேற்று நிலையம், பிரதான கிணறு, நீருந்து குழாய், பொது கிணறு மற்றும் நீரேற்று நிலையம் – ரூ.3215.21 இலட்சம்
  2. பொது கிணறு முதல் ஓக்கக்குடி கிராமம் வரை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் – ரூ.2194.85 இலட்சம்
  3. நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதான குழாய் பணிகள் – ரூ.2833.28 இலட்சம்
  4. பகிர்மான குழாய் மற்றும் SCADA அமைக்கும் பணிகள் – ரூ.28728.82 இலட்சம்
  5. இதர பணிகள் (மின் பணி பராமரிப்பு, இதர செலவினம் மற்றும தொழிலாளர் நல நிதிகள்) – ரூ.2761.09 இலட்சம்
  6. பாதாள சாக்கடை திட்டம்

தஞ்சாவூர் நகரம் – மதிப்பீட்டு தொகை ரூ.9020.00 இலட்சம்

  1. சேகரிப்பு அமைப்பு – ரூ.4444.59 இலட்சம்
  2. கழிவுநீருந்து நிலையம் – ரூ.7.01 இலட்சம்
  3. கழிவுநீர் பிரதான குழாய் – ரூ.47.47 இலட்சம்
  4. கட்டுப்பாட்டு அறை – ரூ.5.88 இலட்சம்
  5. கழிவுநீரேற்று நிலையத்தில் உள்ள பம்புகள் மற்றும் இதர உபகரணங்கள் – ரூ.49.10 இலட்சம்
  6. மின் பம்பு இயந்திரங்கள் – ரூ.3.73 இலட்சம்
  7. தற்போதுள்ள STS and SLSஐ மேம்பாடு செய்யும் பணிகள் – ரூ.261.93 இலட்சம்
  8. தற்போதுள்ள STPஐ மேம்பாடு செய்யும் பணிகள் – ரூ.447.55 இலட்சம்
  9. இதர பணிகள் (பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற) – ரூ.75.00 இலட்சம்
  10. தனியார் வீட்டு இணைப்புகள் – ரூ.2739.99 இலட்சம்
  11. இதர செலவினங்கள் (மின்சாரம் மற்றும் பிற) – ரூ.937.74 இலட்சம்

மாநகராட்சியுடன் இணையும் பகுதிக்கான – மதிப்பீட்டு தொகை ரூ.48870.00 இலட்சம்

  1. சேகரிப்பு அமைப்பு – ரூ.26321.59 இலட்சம்
  2. கழிவுநீருந்து நிலையம் – ரூ.229.86 இலட்சம்
  3. கழிவுநீரேற்று நிலையம் – ரூ.71.60 இலட்சம்
  4. கழிவுநீர் பிரதான குழாய் – ரூ.6822.56 இலட்சம்
  5. கட்டுப்பாட்டு அறை கழிவுநீருந்து நிலையம் மற்றும் கழிவுநீரேற்று நிலையம் – ரூ.72.53 இலட்சம்
  6. இயந்திரங்கள் கழிவுநீருந்து நிலையம் மற்றும் கழிவுநீரேற்று நிலையம் – ரூ.1132.62 இலட்சம்
  7. மின் உபகரணங்கள் கழிவுநீருந்து நிலையம் மற்றறும் கழிவுநீரேற்று நிலையம் – ரூ.444.42 இலட்சம்
  8. STP 30 MLD அமைத்தல் – ரூ.3200.00 இலட்சம்
  9. இதர செலவினங்கள் (மின்சாரம் மற்றும் பிற) – ரூ.75.00 இலட்சம்
  10. Railway Crossing – ரூ.87.56 இலட்சம்
  11. தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரதான குழாய் அமைக்கும் பணி – ரூ.51.38 இலட்சம்
  12. தனியார் வீட்டு இணைப்புகள் – ரூ.5313.92 இலட்சம்
  13. இதர செலவினங்கள் (மின்சாரம் மற்றும் பிற) – ரூ.5046.97 இலட்சம்
  • மழைநீர் வடிகால்

தஞ்சாவூர் நகரம் தற்போதுள்ள மாநகராட்சி பகுதிகள் – மதிப்பீட்டு தொகை ரூ.12965.00 இலட்சம்

  1. மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் – ரூ.10396.03 இலட்சம்
  2. சாலை ஓரப்பகுதியில் Kerb & Gutter கட்டும் பணிகள் – ரூ.672.96 இலட்சம்
  3. சிறுபாலங்கள் கட்டும் பணிகள் – ரூ.378.83 இலட்சம்
  4. வாரி பகுதிகளை அகலப்படுத்தி சுத்தம் செய்யும் பணிகள் – ரூ.283.52 இலட்சம்
  5. இதர பணிகள் (மின்பணி பராமரிப்பு, இதர செலவினம் மற்றும் தொழிலாளர் நல நிதிகள்) – ரூ.1233.66 இலட்சம்

மாநகராட்சியுடன் இணையும் பகுதிக்கான – மதிப்பீட்டு தொகை ரூ.21610.00 இலட்சம்

  1. மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் – ரூ.16839.87 இலட்சம்
  2. சாலை ஓரப்பகுதியில் Kerb & Gutter கட்டும் பணிகள் – ரூ.1269.76 இலட்சம்
  3. சிறுபாலங்கள் கட்டும் பணிகள் – ரூ.603.92 இலட்சம்
  4. வாரி பகுதிகளை அகலப்படுத்தி சுத்தம் செய்யும் பணிகள் – ரூ.840.99 இலட்சம்
  5. இதர பணிகள் (மின்பணி பராமரிப்பு, இதர செலவினம் மற்றும் தொழிலாளர் நல நிதிகள்) – ரூ.2055.46 இலட்சம்

நடைபெற்று வரும் பணிகள்

  1. இயக்குதல் மற்றும் பராமத்தல் திட்டப்பணிகள் 2016-17ன் கீழ் ரூ750.00 இலட்சம் மதிப்பீட்டில் 30 எண்ணிக்கையிலான சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 25 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 5 பணிகள் நடைபெற்று வருகிறது.
  2. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டப்பணிகள் 2016-17ன் கீழ் ரூ.700.00 இலட்சம் மதிப்பீட்டில் 29 எண்ணிக்கையிலான சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 25 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 4 பணிகள் நடைபெற்று வருகிறது.
  3. இடைவெளி நிரப்பும் திட்டப்பணிகள் 2017-18ன் கீழ் ரூ.650.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
  4. தேசிய நகர்ப்புற சுகாதார பணிகள் 2017-18ன் கீழ் ரூ.200.00 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் 4 எண்ணிக்கையிலான பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
  5. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் 2017-18ன் கீழ் ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவக்கல்லுரரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடன் இருப்பவர்கள் தங்குமிடம் கட்டும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டு பணி நடைபெற்று வருகிறது
  6. இயக்குதல் மற்றும் பராமரித்தல் திட்டப்பணிகள் 2017-18ன் கீழ் ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடை மாரிக்குளம் இடுகாட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  7. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டப்பணிகள் 2017-18ன் கீழ் ரூ.1000.00 இலட்சம் மதிப்பீட்டில் 39 எண்ணிக்கையிலான சாலை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஓப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, வேலை உத்திரவு வழங்கும் நிலையில் உள்ளது.