தஞ்சாவூர் சுற்றுலா மேம்பாடு ← கிளிக் செய்யவும்
துறையின் பெயர்: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை
அலுவலக தலைவர்: சுற்றுலா அலுவலர்
முகவரி
சுற்றுலா அலுவலகம்,
ஓட்டல் தமிழ்நாடு வளாகம்,
காந்திஜி ரோடு,
தஞ்சாவூர்-613 001.
குறிக்கோள்
- சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை உரிய முறையில் அளித்தல்.
- சுற்றுலா தலங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகளை நிறுவிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- நிலையான சுற்றுலாத்துறை சம்மந்தப்பட்ட மனித வள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு பணிகள் உருவாக்குதல்.
- சுற்றுலாதலங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கண்காணித்தல்.
- வருடம் தோறும் சுற்றுலா சம்மந்தப்பட்ட கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துதல்.
- சுற்றுலா பயணிகளுக்கு தரமான தங்குமிட வசதிகள் அளித்தல் தொடர்பாக தங்கும் விடுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளுதல்.
நிர்வாக அமைப்பு
சாதனைகள்
- வருடந்தோறும் உழவர் திருவிழாவான பொங்கல் திருவிழாவினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு சிறப்பான முறையில் நடத்தி வருவது.
- சுற்றுலா தலங்களின் தூய்மையினை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தங்குமிடங்கள் சிறப்புற செயல்பட்டு வருவதை உறுதி செய்தல்.
- சுற்றுலா தலங்களினை இணைக்கும் சாலை வசதிகளினை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருதல்.
- உலக சுற்றுலா தினவிழா சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு சிறப்பான முறையில் நடத்தி வருவது.
திட்டங்கள்
ஆசிய வளர்ச்சி வங்கி – IDIPT திட்டம் – தொகுதி 4
(தமிழ்நாடு சுற்றுலா தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு மூலதனத் திட்டம்)
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் 442 எண்ணிக்கையில் 14 இடங்களில் டுநுனு மின் விளக்கு அமைக்கும் பணிகள் ரூ 4.93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு தற்சமயம் பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ளது.
பிரதிபலிக்கும் வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணிகள்
106 எண்ணிக்கையில் 68 இடங்களில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு தற்சமயம் பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ளது.
பயனாளிகள்
பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
தொடர்பிற்கு:
04362 – 230984
9176995873