மகளிரை முழுமையாக ஆற்றல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமூக ஒருங்கிணைப்பின் மூலம் மகளிரை சுய உதவிக் குழுக்களாக அமைத்து சேமிப்பு மற்றும் சிக்கனத்தை கடைபிடிக்க பயிற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்கள் பன்னாட்டு வேளாண் வளா்ச்சி நிதியத்தின் உதவி பெற்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 1991-92-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில், சுய உதவிக் குழு இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பரந்து விரிந்துள்ளது. தற்போது மகளிர் திட்டத்தின்கீழ் 85.70 இலட்சம் மகளிரைக் கொண்ட 5.56 இலட்சம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தஞ்சாவூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 1.66 .இலட்சம் மகளிரைக்கொண்ட 13450 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் இரு பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
- மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ”மகளிர் திட்டம்“
- மத்திய, மாநில அரசுகளால்25 என்ற விகிதத்தில் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான பொன்விழா கிராம சுய வேலைபாய்ப்புத் திட்டம்(SGSY) மறுசீரமைக்கப்பட்டு “ஆஜீவிகா“ என்ற பெயரில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமாக (NRLM) தொடங்கப்படவுள்ளது.
அலுவலா் தொடர்பு விபரம் –
திட்ட இயக்குநா் ,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ,
எண் -223 – தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர் – 613010.
அலுவலக தொலைபேசி எண்- 04362- 277907
கைபேசி எண்- 9444094370
மின்னஞ்சல் முகவரி
dpiu_tju[at]yahoo[dot]com
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்
உதவி திட்ட அலுவலர் (கணக்குகள் மற்றும் நிர்வாகம்).
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
எண்-223 – இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர் – 613010.