Close

தஞ்சாவூா் மாவட்டம்

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்

தமிழா்களின் நீர் மேலாண்மையால் சோழ நாடு,  நீர் நாடு,  நீர்வள நாடு என அறியப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மைய நாடியாக காவிரி ஆறு வேளாண்மைக்கு வளம் சேர்க்கிறது.

தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சவூா் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால் அதன் நிருவாக நலன் கருதி திருவாரூா், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும் கும்பகோணம் கோட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும்  பிரித்து நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம்19.01.1991 அன்று ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் நிரிவாக நலன் கருதி 1997ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து திருவாரூா் மற்றும் மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கிய திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூா் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் வடக்கே கொள்ளிடம் ஆறு, அரியலூா் மற்றும் திருச்சி மாவட்டங்களை பிரித்து கொள்ளிடம் ஆறு வடக்கு எல்லையாகவும், திருவாருா், நாகை மாவட்டங்கள் கிழக்கு எல்லையாகவும், பாக்ஜலசந்தி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு எல்லையாகவும், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பு 3396.57 ச.கி.மீ ஆகும், தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களும் கும்பகோணம்,திருவிடைமருதூா், பாபநாசம், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, புதலூா், பட்டுக்கோட்டை மற்றும் பேராவுரணி ஆகிய 9 வட்டங்களையும் உள்ளடக்கிய தஞ்சாவூரை தலைமையிடமாக  கொண்டு செயல்படுகிறது.  காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்து, விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.  இம்மாவட்டத்தில் உள்ள கோயில்கள், கலைகள், கட்டிடக்கலைகள் உலகப்புகழ் பெற்றவை.  சோழா்கள், பாண்டியா்கள், நாயக்கா்கள், மராட்டியா்கள் ஆட்சியின் கீழும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷாரின் ஆட்சியன் கீழும் இருந்தது. கல்லணை, தஞ்சை பெரியகோயில்,சரபோஜி மஹால் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூல்நிலையம், பீரங்கி மேடை மற்றும் பல புராதரன சின்னங்கள் மேற்கண்ட ஆட்சியாளா்களின் ஆளுகைக்கு உட்பட்டு தஞ்சை மாவட்டம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகும்.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தஞ்சை மாவட்டத்தில் 24,05,000 மக்கள் வசிக்கின்றன.  இம்மாவட்டத்தில் மக்கள் தொகை அடா்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 708 போ்.   82.72 சதவிதம் மக்கள் படிப்பறிவு பெற்றுள்ளனா்.

விவரங்கள் மதிப்பு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் 21- தஞ்சாவூர்
பரப்பு(சதுர கிலோமீட்டரில்) 3411
மொத்த வாக்குசாவடிகள் 2305
மொத்த பாரளுமன்ற தொகுதிகள் 1
மொத்த சட்டமன்ற தொகுதிகள் 8
மொத்த மக்கள்தொகை (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) 2612816
மொத்த ஆதிதிராவிடர்(சதவீதத்தில்) 18.7
மொத்த பழங்குடியினர் 0.14
மொத்த மக்கள்தொகை அடர்த்தி(ஒரு சதுர கிலோ மீட்டருக்கு) 705
மொத்த ஆண் வாக்காளர்கள் 1004678
மொத்த பெண் வாக்காளர்கள் 1065559
மொத்த மூன்றாம்பால் வாக்காளர்கள் 161
மொத்த வெளிநாட்டுவாழ்இந்திய வாக்காளர்கள் 257
மொத்த பணியில் உள்ள வாக்காளர்கள் 984
மொத்த வாக்காளர்கள் 2071639
ஆண், பெண் பால் விகிதம் 1056
வாக்காளர் சதவீதம் 78.91
மொத்த கோட்டம் 3
மொத்த ஊராட்சி ஒன்றியம் 14
மொத்த கிராம பஞ்சாயத்துகள் 589
மொத்த கிராமங்கள் 620
மொத்த மாநகராட்சி 2
மொத்த நகராட்சி 1
மொத்த நகரம்/ முக்கிய இடம் 3
மொத்த அஞ்சலகங்கள் 507
மொத்த காவல் நிலையங்கள் 53
எல்லை மாநிலம்/நாடு
மொத்த சாலைகளின் மொத்தத நீளம் 1057
தேசிய நெடுஞ்சாலை மொத்த நீளம் 144.8
மாநில நெடுஞ்சாலை மொத்த நீளம் 469
மாவட்ட சாலை மொத்த் நீளம் 444