Close

அமலாக்கம்

தொழிலாளர் துறை

1. தொழலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தஞ்சாவூர்.

  • மாவட்ட அலுவலர் ஆவார். இவரது தலைமையின் கீழ் 16 சார்நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் (தொழிற்சாலைகள் நீங்கலாக) பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் ஆய்வு செய்தல், (குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986 மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 உட்பட.
  • சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் 2011 அமலாக்கம் செய்தல்.
  • தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர தகுதி வழங்குதல்) சட்டம் 1981 கீழ் உத்தரவு பிறப்பித்தல்.
  • ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர் (பணி முறைப்படுத்துதல் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம் 1979 கீழ் உரிமம் வழங்குதல்.
  • மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் 1961 கீழ் பதிவுசான்று வழங்குதல்.

2. தொழிலாளர்கள் துணை ஆய்வாளர்கள் (03 அலுவலர்கள்) தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை.

  • தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் (தொழிற்சாலைகள் நீங்கலாக) பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் ஆய்வு செய்தல், (குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986 மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 உட்பட.
  • சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் 2011 அமலாக்கம் செய்தல்.
  • பெட்ரோல், டீசல் பம்புகள் மற்றும் எடைபாலங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுதல்.
  • மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் 1961 கீழ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970 கீழ் ஆய்வு செய்தல்.

3. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் (09 அலுவலர்கள்) தஞ்சாவூர் 3 வட்டம். கும்பகோணம் 3 வட்டம், பட்டுக்கோட்டை 2 வட்டம் மற்றும் பாபநாசம் ஒரு வட்டம்.

  • தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் (தொழிற்சாலைகள் நீங்கலாக) பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் ஆய்வு செய்தல், (குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986 மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 உட்பட.
  • சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் 2011 அமலாக்கம் செய்தல்.

3. முத்திரை ஆய்வாளர்கள் (சட்டமுறை எடையளவு அலுவலர் (04 அலுவலர்கள்) தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம்.

  • சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் எடைகள் மற்றும் அளவைகளை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டாண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுதல்.

தலைமை அலுவலக முகவரி
தொழலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்),
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பின்புறம்,
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை,
தஞ்சாவூர்.
தொலைபேசி எண்.04362-264 886