மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை
மாவட்ட அளவில் துறையின் அமைப்பு
நலத்திட்டங்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமுக பொருளாதார முன்னேற்றத்திற்காக இத்துறை பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியின் மூலமாக இம்மக்களை சமூக பிரிவினைகளிலிருந்தும், பொருளாதார இக்கட்டிலிருந்தும் மீளச் செய்து தேசிய நீரோட்டத்தில் சேர்க்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்துவது மட்டுமின்றி, சமுதாயத்தில் நலிவுற்ற மக்களின் சமூகப் பொருளாதார நிலையைத் துரிதமாக மேம்படுத்தும் நோக்கங்களுடனும் இத்திட்டங்கள் அமைந்துள்ளன.
பள்ளிகள் மற்றும் விடுதிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் காணப்படுகிறது.
வ.எண் |
பள்ளிகள் விவரம் |
எண்ணிக்கை |
ஆண்கள் |
பெண்கள் |
மொத்தம் |
1 | தொடக்கப்பள்ளி | 84 | 1423 | 1480 | 2903 |
2 | நடுநிலைப்பள்ளி | 06 | 132 | 156 | 288 |
3 | உயர்நிலைப்பள்ளி | 07 | 565 | 494 | 1059 |
4 | மேல்நிலைப்பள்ளி | 03 | 368 | 255 | 623 |
மொத்தம் | 100 | 2488 | 2385 |
4873 |
தஞ்சாவூர் மாவட்டத்தில் 41 ஆதிதிராவிடர் நல விடுதிகள் காணப்படுகிறது.
வ.எண் |
விடுதிகள் விவரம் |
விடுதிகள் எண்ணிக்கை |
அனுமதிக்கப்பட்ட மாணாக்கர் எண்ணிக்கை |
புதிதாக சேர்ந்த மாணவர்கள் விவரம் |
1 | பள்ளி மாணவர் விடுதி | 27 | 1680 | 830 |
2 | பள்ளி மாணவியர் விடுதி | 08 | 600 | 378 |
3 | கல்லூரி மாணவர் விடுதி | 02 | 200 | 220 |
4 | கல்லூரி மாணவர் விடுதி | 04 | 290 | 319 |
மொத்தம் | 41 | 2765 | 1747 |
பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்
வ.எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | தகுதி |
அணுக வேண்டியவர்கள் |
1 |
பாடப்புத்தகங்கள் |
1)ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் 2)பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்கள் |
தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் |
2 |
குறிப்பேடுகள் |
1)ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் 2)பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணாக்கர்கள் |
தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் |
3
|
சீருடை |
1)ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் 2)பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணாக்கர்கள் |
தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர். விடுதிக் காப்பாளர்கள் |
4 |
மிதிவண்டிகள் |
1) அரசு , அரசு உதவி பெறும் ,அரசு உதவி பகுதியாக பெறும் (சுயநிதி) பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மற்றும், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் |
தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் |
5 | சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி |
1)ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 2) அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் 3) அரசு ஆதிதிராவிடர் விடுதிகள் மற்றும் 4) பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10ஆம் மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. |
சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர். விடுதிக் காப்பாளர்கள் |
இதேபோன்று, கிராமப்பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு போக்குவரத்து இடைநிற்றலுக்கு காரணமாக இருக்ககூடாது என பள்ளி கல்லூரி மற்றும் தொழிற்கல்வி படிப்பினைத் தொடர அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் விடுதி வசதிகள் செய்து தரப்படுகின்றன.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள்
- கல்லூரி விடுதிகளுக்கு இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட கட்டில்கள், ஜமுக்காளம், பாய், போர்வை, உறையுடன் கூடிய தலையணைகள் மற்றும் எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர், மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, விளையாட்டு உபகரணங்கள்.
- சமையல் எரிவாயு இணைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், மாவு அரைக்கும் இயந்திரங்கள், நீராவி கொதிகலன்கள், மின்னணு எடை இயந்திரங்கள் மின்அரைப்பான்கள்.
- நூலக வசதி, செய்தி தாள்கள்,
- கொசு வலை மற்றும் நீர் கொதிகலன் ஆகியவை.
உணவு மற்றும் சில்லரை செலவினங்கள்
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கருக்கு உணவுக் கட்டணம் பண்டிகை நாட்களுக்கான சிறப்பு உணவுக் கட்டணம் மற்றும் சில்லரைச் செலவினங்களுக்கான கட்டணம் ஆகிய கட்டணங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டு வருகின்றன.
கட்டணங்கள் |
பள்ளி விடுதி மாணாக்கர் | கல்லூரி விடுதி மாணாக்கர் |
உணவுக் கட்டணம் (ஒரு மாதத்திற்கு) |
ரூ.1000/- |
ரூ.1100/- |
சில்லரை செலவினம் (சோப்பு, எண்ணெய், சிகைக்காய் வாங்குதல் மற்றும் முடி வெட்டுதல் (ஒரு மாதத்திற்கு)) |
ரூ.100/- |
ரூ.150/- |
சிறப்பு உணவுக் கட்டணம் (பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருடப்பிறப்பு, சுதந்திர தினம் மற்றும் தீபாவளி விழா நாட்களில்) |
ரூ. 40/- |
ரூ.80/- |
கல்வி உதவித் தொகைத் திட்டங்கள்
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார கல்வி முன்னேற்றமடைய செய்தல், சமூக மதிப்பை உயர்த்துதல், சுயசார்புடையவர்களாக மாற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
சில திட்டங்கள் பயன்பெறும் மாணாக்கர்களின் சாதி மற்றும் வருமானம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாது செயல்படுத்தப்படுகின்றன. பல திட்டங்கள் மிகுந்த ஏழ்மை நிலையிலுள்ளோரை முன்னேற்றும் நோக்குடன் அவர்தம் சாதி வருமானம் அம்மாணாக்கர்கள் பயிலும் கல்வி நிறுவன வகைப்பாடு (அரசு-அரசு உதவிபெறும்-சுயநிதி கல்வி நிறுவனங்கள்) மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வ.எண் | திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | தகுதி | தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
5.1 | போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்.
பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர் தமது கல்வியை பொருளாதாரத் தடையின்றி தொடரவும், உயர் கல்வியில் ஆதி திராவிடர் மாணாக்கரின் மொத்த சேர்க்கை விகிதத்தை உயர்த்திடும் நோக்குடனும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஏற்படும் செலவினத்தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிட மாணாக்கர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணாக்கருக்கு கல்விக் கட்டணங்கள் மற்றும் கல்விப்படி (Academic allowances) ஆகியவை கல்வி உதவித்தொகையாக மாணாக்கரின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் அரசால் வரவு வைக்கப்படுகிறது. |
10ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணாக்கர்
1. பெற்றோர்களின் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம் (அனைத்து வகை வருமானமும் சேர்த்து கணக்கிடப்படும்)2. ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு மட்டும் |
அ. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள்-மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் (தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள்) ஆ. இயக்குநர், ஆதிதிராவிடர் நலன் (பிற மாநிலங்களில் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்புகளை பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மாணவர்கள் மட்டும்) |
வழங்கப்படும் கல்விப்படி விவரம்
தொகுதி |
படிப்புகள் |
ஒரு வருடத்திற்கான கல்விப்படி (ரூ) |
|
விடுதி |
வெளி மாணாக்கர் |
||
I |
பொறியியல், மருத்துவம், நவீன ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பம் (Fashion Technology) கால்நடை வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில் படிப்புகளில் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு மேலாண்மை மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளில் முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு (MPhil., Ph.D., & Post Doctoral Programmes) etc. |
13500/ | 7000/- |
II | 12ஆம் வகுப்பு படிப்பினை நுழைவுத் தகுதியாக கொண்ட மருந்தாக்கியல், செவிலியர், LLB, விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை மற்றம் சான்றிதழ் படிப்புகள் (BSc Nursing, B.Pharm, B.O.T, B.P.T, MSc (Nursing) M.Pharm. M.P.T etc.,) | 9500/ | 6500/- |
III | தொகுதி 1 மற்றும் 2ல் இடம் பெறாத இதர இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்ட படிப்புகள் (எ.கா B.A/BSc/ BCom/MA /MSc/MCom. Etc) | 6000/ | 3000/ |
IV |
10ம் வகுப்பு படிப்பினை நுழைவுத் தகுதியாகக் கொண்ட தொழில் நுட்ப பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், மேல்நிலைக் கல்வி படிப்புகள் மற்றும் தொழிற் பயிற்சி படிப்புகள் (எ.கா XI, XII, ITI, தொழிற் பயிற்சிக் கல்வி etc). |
4000/ | 2500/ |
வ.எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் |
தகுதி |
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
||||||||||||
5.2 |
ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் 2022-2023ஆம் ஆண்டு முதல் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். மேலும் இத்திட்டம் இரண்டு கூறுகளாக செயல்படுத்தப்படும். திட்டக்கூறு .1 ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம். திட்டக்கூறு. 2 ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம். இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விவரம்
|
திட்டக்கூறு 1 அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு மட்டும். பெற்றோர் –பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு ரூ.2.50 இலட்சம்.திட்டக்கூறு 2 அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 1 முதல் மற்றும் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள். சாதி இனம் கணக்கின்றி அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்.வருமான வரம்பு இல்லை.பெற்றோரில் யாரேனும் ஒருவர் துப்புரவு பணி, தோல் பதனிடுதல், தோல் உரித்தல் மற்றம் கழிவு பொருட்களிலிருந்து மறு சுழற்சிக்கு உகந்த பொருட்களை பிரித்து சேகரிக்கும் தொழில் ஈடுப்பட்டிருக்க வேண்டும். |
பள்ளித் தலைமையாசிரியர்கள் – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள். | ||||||||||||
5.3 | உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை
அரசு – அரசு உதவிப் பெறும் கல்வி நிலைய கட்டண விடுதிகளில் தங்கிப் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மாணாக்கர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையுடன் கூடுதலாக விடுதி நிதியுதவித் தொகை வழங்கப்படும். (அ) பட்டப்படிப்பு பாலிடெக்னிக் படிப்பிற்கு ஆண்டொன்றிற்கு ரூ.7500ம் (ஆ) முதுகலைப் பட்டப்படிப்பு தொழில் படிப்புகளில் இளங்கலை முதுகலை படிப்புகளுக்கு ஆண்டிற்கு ரூ.8000 ம் நிதி உதவித் தொகையாக வழங்கப்படும் |
ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம் வரை இலவச விடுதியில் அல்லாமல் கட்டண விடுதிகளில் தங்கிப் பயில்பவர்கள். |
கல்லூரி முதல்வர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் – திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம். | ||||||||||||
5.4 |
அயல்நாடு சென்று உயர் கல்வி பயில உதவித்தொகை ஆதிதிராவிடர்,பழங்குடியினர், கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கரை வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட முனைவர் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8.00 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்ததின்கீழ் ஆண்டுதோறும் 10 மாணாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பயிலக்கூடிய நாடு மற்றும் பயிலும் படிப்பினடிப்படையில் ஒரு மாணவருக்கு ஆண்டிற்கு ரூ.36.00 இலட்சத்திற்கு மிகாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களுக்கான உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் Quacquarell Symonds (QS) எனும் தர நிர்ணய அமைப்பால் தரப்படுத்தப்படும் முதல் 1000 கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். திருத்தி அமைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 18 மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று கல்வி பயில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளின் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறத் தேவையான TOEFL/ IELTS/ GRE/GMAT ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற செய்ய தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. 2023-2024 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சம் வரை
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர் மட்டும். |
திட்டப்பகுதி 1
தாட்கோ மேலாளர் தாட்கோ அலுவலகம்
திட்டப்பகுதி 2
ஆதிதிராவிடர் நல இயக்குநர், சென்னை – 5.
இயக்குநர் பழங்குடியினர் நலம், சென்னை – 5. |
||||||||||||
5.5 |
முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் 1600 மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1,00,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
|
முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சம் | ஆதிதிராவிடர் நல இயக்குநர்,
சென்னை – 5. இயக்குநர் பழங்குடியினர் நலம், சென்னை – 5.
|
||||||||||||
5.6 | (State Post-Matric) மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம்
ஒன்றிய அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்விப்படி மற்றும் கல்வி கட்டணங்களுக்கு இணையாக கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். |
ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு மட்டும். பெற்றோர் அல்லரது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழக அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வருமானம் கணக்கிடும் போது அகவிலைப்படியை சேர்க்காமல் வருமானம் கணக்கிட வேண்டும். | பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள், திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம். |
கல்வி கட்டணச் சலுகைகள்
வ. எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் |
தகுதி |
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
5.7
|
கற்பிப்புக் கட்டணச் சலுகை
அரசு – அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் விலக்களிப்பு செய்யப்பட்ட கற்பிப்பு கட்டணம் கல்வி நிறுவனத்திற்கு ஈடுசெய்யப்படும்.
|
வருமான வரம்பு இல்லை. |
கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய கல்வித் துறை தலைவர்கள் மூலம் ஆதிதிராவிடர் நல இயக்குநர்-பழங்குடியினர் நல இயக்குநருக்கு கற்பிப்புக் கட்டணம் பெறுவதற்கான முன்மொழிவினை அனுப்ப வேண்டும்.
|
5.8 | பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசு அரசு நிதி உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளை பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவ மாணவியருக்கு சிறப்பு மற்றும் தேர்வுக் கட்டணங்கள் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றன. |
வருமான வரம்பு இல்லை |
கல்லூரி முதல்வர்கள், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்-திட்ட அலுவலர்கள் (பழங்குடியினர் நலம்) |
5.9 | முதுகலை பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
அரசு அரசு நிதி உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப் படிப்புகளை பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவியர்களுக்கு சிறப்பு மற்றும் தேர்வுக் கட்டணங்கள் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றன. |
வருமான வரம்பு இல்லை |
கல்லூரி முதல்வர்கள், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்-திட்ட அலுவலர்கள் (பழங்குடியினர் நலம்) |
5.10 | சிறப்புக் கட்டணச் சலுகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. விலக்களிக்கப்பட்ட சிறப்புக் கட்டணம் கல்வி நிறுவனத்திற்கு ஈடுசெய்யப்படும். |
வருமான வரம்பு இல்லை |
தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம். |
5.11 | தேர்வுக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம், பதிவுக் கட்டணச் சலுகைகள்
அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அரசு-அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, முதுகலைப்பட்ட மேற்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது |
வருமான வரம்பு இல்லை
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதி திராவிடர் மாணாக்கர்களாக இருக்க வேண்டும். |
தேர்வுத் துறை இயக்குநரால் ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல இயக்குநருக்கு கருத்துரு சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தைப் பெற கல்வி நிறுவனங்கள் தொடா்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றம் பழங்குடியினர் நல திட்ட அலுவலர்களுக்கு கருத்துரு சமர்பிக்க வேண்டும். |
பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம்
மாணவியர் இடைநிற்றலை தவிர்க்கவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகளை அதிக அளவில் கல்வி பயில செய்யவும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை கல்வியைத் தொடரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டமானது 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவியர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வ.எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | தகுதி |
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
6.1 | பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
மாநிலம் முழுவதும் உள்ள 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.500- வழங்கப்படுகிறது. 6ஆம் வகுப்பில் பயிலுபவர்களுக்கு ரூ.1000- வழங்கப்படுகிறது. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பயில்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1500- வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகை மாணவியர் அவர்தம் பெற்றோரின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. |
அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகள் மட்டும்.
வருமான வரம்பு இல்லை
|
தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் . |
அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்
ஏழ்மை நிலையிலுள்ள மற்றும் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை அளிக்கப்படும் திட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இத்திட்டத்ததின் கீழ் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத் தரப்படுகின்றன. மேலும் மயான வசதி மற்றும் மயான பாதைகள் அமைத்துக் கொடுக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இல்லத் திருமணங்கள் நடத்துவதற்கும், சமுதாய விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்குமான தேவையினைப் பூர்த்தி செய்ய சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
வ.எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் |
தகுதி |
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
7.1 |
இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம்
கிராமப்புறத்தில் 3 சென்ட், பேரூராட்சியில், நகராட்சியில் 1.5 சென்ட் மற்றும் மாநகராட்சியில் 1 சென்ட் வரை வீட்டுமனை வழங்கப்படும். |
வீடு, வீட்டுமனை சொந்தமாக இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராம- நகர்பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000- |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் நலம்) |
7.2 |
மயானம்
மயான மேம்பாடு மயானத்திற்கு செல்லும் பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருதல் |
ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு மயானம் இல்லாமை இருத்தல், மயானம் இருந்தால் அதற்குப் பொது பாதை வசதி. |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் |
7.3 |
இணைப்புச்சாலை
ஆதிதிராவிடர் குடியிருப்புகளிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு சாலை ஏற்படுத்துதல். |
இணைப்புச் சாலை வசதி இல்லாத ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகள் | திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் |
7.4 | சமுதாயநலக் கூடங்கள்
ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடியிருப்புகளில் திருமணம் மற்றும் சமுதாய விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய நலக்கூடங்கள் கட்டித் தரப்படுகின்றன. |
சமுதாயநலக் கூடங்கள் இல்லாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடியிருப்புகள் |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்., மாவட்ட மேலாளர், தாட்கோ. |
7.5 | ஈமச்சடங்குக்கு உதவி
ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் ஈமச்சடங்கிற்கு ரூ.5,000- மானியமாக அளிக்கப்படுகின்றது. |
வீடு, வீட்டுமனை சொந்தமாக இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராம- நகர்பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000- இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் மதம மாறிய கிறித்துவ ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். |
வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம் செயல் அலுவலர், நகராட்சி-பேரூராட்சி-மாநகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்- மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் |
7.6 | சமத்துவ மயானம் ஊக்கத்தொகை வழங்குதல்
மாவட்டம் தோறும் (சென்னை நீங்கலாக) சாதி வேறுபாடுகளற்ற பயன்பாட்டிலுள்ள மயானங்கள் உள்ள சிற்றூர்களை தேர்ந்தெடுத்து ஒரு சிற்றூருக்கு ரூ.10.00 இலட்சம் வீதம் மூன்று சிற்றூருக்கு ரூ.30.00 இலட்சம் வீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. |
சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூராக இருக்க வேண்டும். | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். |
பிரதம மந்திரியின் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற திட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojana -PMAJAY)
2021-2022 ஆம் ஆண்டு முதல் ஏற்கெனவே இயங்கி வரும் பிரதம மந்திரியின் முன்னோடி கிராமத்திட்டம் (Pradhan Mantri Adarsh Yojana Yojana –PMAGY), ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டம் (special Central Assistance to Scheduled Castes Sub Plan – SCA to SCP), பாபு ஜெகன்ஜீவன்ராம் விடுதி கட்டிடம் கட்டும் திட்டம் (Babu Jagiivan Ram Chatrawas Yojana – BJRCY) ஆகிய மூன்று திட்டங்களை ஒருங்கிணைத்து பிரதம மந்திரியின் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்திட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojana –PMAJAY) எனும் புதிய திட்டமாக ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் முன்னோடி கிராமத்திட்டம் (PMAGY)
40 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் குறிகாட்டிகளாக குடிநீர், கல்வி, சுகாதாரம், விவசாய நடைமுறைகள், தூய்மையான எரிபொருள், மின்சாரம், வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கம், நிதி சேர்க்கை ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஒன்றிய அரசால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து முகமைகள் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தகுதி ஆதிதிராவிடர்கள் 40 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் வசிக்கும் கிராமங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.
தீண்டாமை ஒழிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க இத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக 1955ம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் தடுப்பு விதிகள் போன்றவை ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு) விதிகள், 1995ல் அரசின் ஒப்புதலோடு ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு அவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச்சட்டம் 2015 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு) திருத்தப்பட்ட விதிகள் 2016 மற்றும் 2018 என ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு முறையே 01.01.2016, 14.04.2016 மற்றும் 276.06.2018 முதல் அமலுக்கு வந்தது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னையை தவிர) தீண்டாமையை விட்டொழித்து பொது மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கிராமத்திற்கு ரூ.10.00 இலட்சம் நிதி வழங்கப்படுகிறது.
வ.எண் | குற்றத்தின் பெயர் மற்றும் விவரம் | தீருதவிகளின் விவரம் | தொடர்பு கொள்ள வேண்டிய நபர் |
9.1 | கலவரங்களால் –வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு உதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைகள் தடுப்புச்சட்டம் 2015 விதிகள் 2016 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்தல், (குற்றத்தின் பெயர் மற்றும் தீருதவித்தொகை விவரம் பிறசேர்க்கை 1ல் தெரிவிக்க்பட்டுள்ளது)
|
கலவரங்களால்/ வன் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் தனியரின் குடும்பத்திற்கு குறைந்த பட்சமாக ரூ.85,000-ம் அதிகபட்சமாக ரூ.8.25 இலட்சம் தீருதவியாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தது.. தற்போது அரசாணை (நிலை) எண் 94 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் (கொடு தடு 1) துறை நாள் 24.11.2021 மற்றும் அரசாணை (நிலை) எண் 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (கொடு தடு 1) துறை நாள் 02.02.2022ன் படி இனி குறைந்தபட்சம் ரூ.1.00 இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் ரூ.12.00 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் கொலை- மரணம் செய்யப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் (1) கணவரை இழந்த விதவைக்கும் ஏனைய சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு தரப்படும் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஓய்வூதியம் ரூ.5000- வழங்கப்படும். (2) பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். (3) விவசாய நிலம் வீடு வழங்கப்படும். (4) இறந்தவரின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவும் அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும்வரை படிப்புச் செலவு அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்தல், குழந்தைகளை தங்கிப்படிக்கும் பள்ளிகளிலோ அல்லது ஆசிரமப்பள்ளிகளிலோ சேர்த்து முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். (5) வன்கொடுமை நிகழ்ந்த முதல் மூன்று மாதங்களுக்கு அந்தக் குடும்பத்திற்கு தேவையான பாத்திரங்கள், அரிசி, கோதுமை, பருப்பு, தானியங்கள் போன்றவை அனைத்தும் வழங்கப்பட வேண்டும். |
மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். |
9.2 | இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்களைத் தேர்வு செய்து பரிசு வழங்குதல்
மாவட்டந்தோறும் (சென்னை நீங்கலாக) இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் ஒன்றினை தேர்வு செய்து ரூ.10.00 இலட்சம் பரிசு வழங்குதல். |
தீண்டாமையை கடைபிடிக்காமலும் இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் |