முன்னாள் படைவீரர் நல வாரியம்
மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், தஞ்சாவுர்
முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்கள் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் முன்னாள் படைவீரர் நலத்துறை, பொதுப் துறையின் கீழ் இயங்கி வருகிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாவட்ட அலுவலகத்தில் செல்படுத்தப்படுகிறது. இத்துறை இயக்குநராக அரசு சிறப்பு செயலாளர் பொதுத்துறை அவர்களும், சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்கக கூடுதல் இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது.
மாவட்ட முப்படை வீரர் வாரிய தலைவராக மாவட்ட ஆட்சியரும், செயலாளராக மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரும் உள்ளனர். இவ்வாரியம் / அலுவலகம் கீழ்காணும் முகவரியில் இயங்கி வருகிறது.
” ஜவான்ஸ் பவன்,
முத்துகுமார மூப்பனார் சாலை,
தலைமை அஞ்சலகம் எதிரில்,
தஞ்சாவு+ர்.
தொலைபேசி எண்.04362-230104
மின்னஞ்சல் முகவரி :exweltnj@tn.gov.in
சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்கக ஒருங்கிணைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட அலுவலகங்களில் கீழ்காணும் நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்
வ.எண். | நிதியுதவி வகை | தொகை |
01. |
உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி |
மாதம் ரூ.10,000/- |
02. |
உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களது விதவையருக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி |
மாதம் ரூ.4,000/- |
03. |
60 வயதிற்கு மேற்பட்ட/ வேலை செய்ய இயலாத / ஓய்வுதியம் ஏதும் பெறாத வருமானம் ஏதும் ஈட்ட இயலாத நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது கைம்பெண்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி |
மாதம் ரூ.4,000/- |
04. |
அரசு பொது மருத்துவ மனைகள்/ மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நல ஆக்க நிலையங்களில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் காசநோய்/ தொழுநோய்/ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கான நிதியுதவி |
கைசெலவு
பணம் தினந்தோறும் ரூ.50/- |
05. |
நல ஆக்க நிலையங்களில் உள்ள காசநோய்/ தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் தனது வீட்டிற்கு சென்றுவர நிதியுதவி |
வருடம்
ஒருமுறை போக்குவரத்துக் கட்டணம் |
06. |
சிறப்பு மருத்துவரது பரிந்துரையின்படி வாங்கப்படும் கண்கண்ணாடி காது கேட்கும் கருவி போன்றவைகளுக்கான நிதியுதவி |
ரூ.4,000/-
வரை |
07. | கண்பார்வையற்றோருக்கான ஆயுட்கால நிதியுதவி | மாதம் ரூ.7,000/- |
08. | புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி | மாதம் ரூ.7,000/- |
09. | பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி | மாதம் ரூ.7,000/- |
10. | தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி | மாதம் ரூ.5,000/- |
11. | காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கான ஆயுட்கால நிதியுதவி | மாதம் ரூ.5,000/- |
12. |
முன்னாள் படைவீரரைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயுட்கால நிதியுதவி |
மாதம் ரூ.5,000/- |
13. |
முன்னாள் படைவீரரது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆயுட்கால நிதியுதவி |
மாதம் ரூ.7,000/- |
14. |
முன்னாள் படைவீரரது மனநலன்குன்றிய மனைவி / விதவைக்கானஆயுட்கால நிதியுதவி |
மாதம் ரூ.7,000/- |
15. |
புற்றுநோய், பக்கவாதம், முழுமையாக கண்பார்வை குறைபாடுள்ள முன்னாள் படைவீரரின் குழந்தைகளுக்கான ஆயுட்கால நிதியுதவி |
மாதம் ரூ.7,000/- |
16. |
காசநோய் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரரின் குழந்தைக்கான ஆயுட்கால நிதியுதவி |
மாதம் ரூ.5,000/- |
17. |
முன்னாள் படைவீரரது இரு பெண் குழந்தைகளுக்கான திருமண மானியம் |
ரூ.25,000/- |
18. |
தீ, வெள்ளம், கலவரம், விபத்து மற்றும் இதர இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பின் துயர் துடைப்பதற்கான நிதியுதவி |
அதிகபட்சமாக
ரூ.15,000/- |
19. |
போர் கைம்பெண், போரில் ஊனமுற்றோர், சக்ரா வீர விருது பெற்றோர் மற்றும் இராணுவ குடும்ப ஓய்வுதியம் பெறும் கைம்பெண்களுக்கு வீட்டு வரிச் சலுகை |
வீட்டுவரி மீளப் பெறுதல் |
20. |
தொழுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் அவரது கைம்பெண்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் |
ரூ.2,500/-
மதிப்பிலான பொருட்கள் |
21. |
முன்னாள் படை அலுவலர் மற்றும் முன்னாள் படைவீரர் இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியம் |
ரூ.10,000/- |
22. | முன்னாள் படைவீரரது கைம்பெண்கள் இறந்தமைக்கு ஈமச்சடங்கு மானியம் | ரூ.7,000/- |
23. |
ஓய்வுதியம் ஏதும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கான மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை அல்லது இருதய அறுவை சிகிச்சை போன்ற பெரிய அறுவை சிகிச்சைகளுக்கான நிதியுதவி |
மொத்தமாக
ரூ.50,000/- |
24. |
புதிய வீடு கட்ட அல்லது வாங்குவதற்கு முன்னாள் படைவீரர் / கைம்பெண்களுக்கு வீட்டு கடன் மானியம் |
ரூ.1,00,000/- |
25. |
முன்னாள் படைவீரரது ஆதரவற்ற சிறார்களுக்கான நிதியுதவி |
உள்ளபடியான கல்வி செலவினம் |
26. |
முன்னாள் படைவீரர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் தையற்பயிற்சி அலகில் பயின்ற முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்கான நிதியுதவி |
இலவச தையல் இயந்திரம் |
27. |
முன்னாள் படைவீரர் நலத்துறை தையல் அலகில் பயிலும் பயிற்சியாளருக்கான நிதியுதவி |
பயிற்சி உதவித் தொகை நாள் ஒன்றுக்கு ரூ.50/- மற்றும் மூலப் பொருட்களுக்கான நிதியுதவி ரூ.1,000/-
|
28. |
பு+னே கிர்கியில் உள்ள ஊனமுற்ற படைவீரர்களுக்கான குயின் மேரீஸ் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான மாதாந்திர பயிற்சி உதவித் தொகை |
மாதம் ரூ.900/- |
29. |
தொழில் நுட்பபயிற்சிகள் பயிலும் முன்னாள் படைவீரர்கள் / கைம்பெண்கள்/ சிறார்கள் நிதியுதவி |
தட்டச்சு கீழ்நிலை; ரூ.3000/-
தட்டச்சு மேல்நிலை; ரூ.5000/- சுருக்கெழுத்து கீழ்நிலை; ரூ.7000/- சுருக்கெழுத்து மேல்நிலை; ரூ.10000/-
|
30. | இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தும் செலவினம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்குதல் | ஒரு முகாமிற்கு ரூ.6,00,000/-வீதம் ஆண்டுக்கு ஐந்து முகாம்கள் வரை |
தொகுப்பு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்
போரில் வீரமரணம் மற்றும் ஊனமடைந்தவர்களுக்கான நலத்திட்டங்கள்
01. | போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கைகளில் 50 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.1,00,000/-மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 50 சதவீதத்திற்கு கீழ் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. |
02. | போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கைகளில் மரணமடைந்த படைவீரர் குடும்பத்திற்கும் மற்றும் ஊனமுற்றோருக்கும் வருடாந்திர பராமாரிப்பு மானியம் ரூ,25,000/-ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படுகிறது. |
03 | போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கைகளில் மரண மடைந்தோர் குடும்பத்திற்கும் / ஊனமுற்ற முன்னாள் படைவீரருக்கும் வீடு பராமாரிப்பு மானியம் ரூ.50,000/- வழங்கப்படுகிறது. |
04 | போரில் வீரமரணம் அடைந்த படைவீரர் மனைவிக்கு கருணைத் தொகையாக ரூ.2,00,000/-ம் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரருக்கு ரூ.1,00,000/-ம் (ஒருமுறை) வழங்கப்படுகிறது. |
சுயதொழில் செய்வோருக்கான ஆதரவு நடவடிக்கைகள்:
01. | சுய தொழில் செய்யும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் கைம்பெண் வாங்கும் வங்கி கடனில் ரூ1,00,000/- வரையிலான தொகைக்கு 75% வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. |
02. | முன்னாள் படைவீரர் மற்றும் கைம்பெண்கள் மூலம் நடைபெறும் சுய உதவிக்குழுவிற்கு வங்கி கடன் ரூ.15,00,000/-வரை வட்டி மானியம் 100% வழங்கப்படுகிறது. |
03 | தொழிற் கூடம் அமைத்து தொழல் புரிவோருக்கு மொத்த தொழில்கூட செலவில் 25% மானியம் அல்லது ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது. |
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான கல்வி மேம்பாட்டிற்கு ஆதரவு நடவடிக்கைகள்
01. | கல்வி உதவித் தொகையாக முன்னாள் படைவீரர்கள் மகன்/ மகளுக்கு ரூ.2000/-முதல் ரூ.10,000/-வரை ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது. |
02. | தொழில் நுட்ப, தொழிற்கல்வி, தொழிற் சார்ந்த பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகையாக ரூ..25,000/- (விடுதிக் கட்டணம் உட்பட) வழங்கப்படுகிறது. |
03. | பல்தொழில் நுட்ப கல்லூரியில் பட்டயப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீர.ர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை ரூ.20,000/- (விடுதிக் கட்டணம் உட்பட) வழங்கப்படுகிறது, |
04. | தமிழ்நாடு அரசால் அங்கிகரிக்கப்பட்ட அனைத்து சான்றிதழ் படிப்புகள் பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகையாக வருடத்திற்கு ரூ.10,000/-வழங்கப்படுகிறது. |
05 | இராணுவத்தில் சேரும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு மானியம் ரூ.25,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படுகிறது. |
06. | உயர் கல்வி நிறுவனங்களான IITs/ IIMs & National Law Schools-ல் பயிலும் முன்னாள் படைவீரார்களின் சிறார்களுககு உயற் கல்வி ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது. |
07 | முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் கைம்பெண்களுக்கு அவர்தம் சிறார்கள் சைனிக் பள்ளியில் (Sainik School) பயில்வதற்கு ஊக்கத் தொகயாக ஆண்டிற்கு ரூ.25,000/- வழங்கப்படுகிறது. |
இராணுவப்பணி ஊக்க மானியம்
தனது ஒரே மகன் / மகளை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன் / மகளை இராணுவப்பணிக்கு அனுப்பிய பெற்றோர்களை போற்றும் வகையில் இராணுவப் பணி ஊக்க மானியம் வழங்கப்படுகிறது.
01. | ஒரே மகன்/ மகளை இராணுவப்பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்க மானியம் |
ரூ..20,000/- (ஒருமுறை) மற்றும் ரூ.1,000/-மதிப்புள்ள வெள்ளிப் பதக்கம் |
02 | ஒன்றுக்கு மேற்பட்ட மகன் / மகள்களை இராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்க மானியம் | ரூ..25,000/- (ஒருமுறை) மற்றும் ரூ.1,000/-மதிப்புள்ள வெள்ளிப்பதக்கம் |